ரிச்சர்ட் நியூட்ரா

ரிச்சர்ட் ஜோசெஃப் நியூட்ரா என்னும் முழுப்பெயர் கொண்ட ரிச்சர்ட் நியூட்ரா (ஏப்ரில் 8, 1892 – ஏப்ரில் 16, 1970), நவீன கட்டிடக்கலையின் முதன்மையான கட்டிடக்கலைஞர்களுள் ஒருவர்.

ரிச்சர்ட் நியூட்ரா
பிறப்பு8 ஏப்பிரல் 1892
வியன்னா
இறப்பு16 ஏப்பிரல் 1970 (அகவை 78)
உப்பிபேர்டல்
பணிகட்டடக் கலைஞர், ஒளிப்படக் கலைஞர்
வாழ்க்கைத்
துணை/கள்
Dione Niedermann
குழந்தைகள்Dion Neutra
குடும்பம்Wilhelm Neutra
விருதுகள்AIA Gold Medal, Commander's Cross of the Order of Merit of the Federal Republic of Germany, Wilhelm Exner Medal, City of Vienna Prize for Architecture
நியூட்ரா வடிவமைத்த கோஃப்மன் வீடு, பாம் ஸ்பிறிங்ஸ், கலிபோர்னியா
நியூட்ராவின் மரஉச்சி வீடு

நியூட்ரா ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா நகரில் 1892 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான அடொல்ஃப் லூஸ் (Adolf Loos) என்பவரிடம் படித்தார். இவர் இன்னொரு புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான ஓட்டோ வாக்னர் (Otto Wagner) ஆக்கங்களினால் ஈர்க்கப்பட்டார். சிலகாலம், ஜெர்மனியில் எரிக் மண்டல்சொன் (Erich Mendelsohn) என்பவரிடம் பணிபுரிந்த இவர் 1923 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். 1929 இல் அந்நாட்டின் பதிவுப் பிரஜை ஆனார். இவர் பிராங் லாயிட் ரைட்டிடம் குறைந்தளவு காலம் வேலை செய்தபின்னர், இவரது நெருங்கிய நண்பரான ருடோல்ஃப் ஷிண்ட்லர் என்பவரது அழைப்புக்கிணங்கிக் கலிபோர்னியாவில் அவருடன் சேர்ந்து பணி செய்தார். பின்னர் அவரது மனைவியான டையோனே (Dione) எனவருடன் சேர்ந்து தனது சொந்தத் தொழில் தொடங்கினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_நியூட்ரா&oldid=2733605" இலிருந்து மீள்விக்கப்பட்டது