ஓட்டோ வாக்னர்
ஓட்டோ வாக்னர் எனப் பரவலாக அறியப்படும் ஓட்டோ கொலொமன் வாக்னர் (Otto Koloman Wagner) (ஜூலை 13 1841 – ஏப்ரல் 11 1918) ஒரு ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் வியன்னாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பென்சிங் (Penzing) என்னுமிடத்தில் பிறந்தார். பெர்லின், வியன்னா ஆகிய இடங்களில் கல்வி கற்றார். 1864 ஆம் ஆண்டில் தனது முதலாவது கட்டிடத்தை, வரலாற்றியப் பாணியில் (historicist style) வடிவமைத்தார். 1880களின் நடுப்பகுதியிலும் இறுதியிலும், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் என்னும் நாடுகளைச் சேர்ந்த சமகாலக் கட்டிடக்கலைஞர்களைப் போல் இவரும் கட்டிடக்கலைசார் இயல்பியத்தின் (Architectural Realism) ஆதரவாளராக இருந்தார். இந்தக் கோட்பாடு தொடர்பான நிலைப்பாட்டினாலேயே அவர் வரலாற்று வடிவங்களில் தங்கியிருப்பதை மட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. 1894 ஆம் ஆண்டில் வியன்னா நுண்கலை அக்கடமியில், கட்டிடக்கலைப் பேராசிரியர் ஆனபோது, வரலாற்றியக் கட்டிடக்கலைக்கு எதிரான அவரது நிலைப்பாடு மேலும் வலுப்பெற்றிருந்தது.
ஓட்டோ வாக்னர் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | Austro-Hungarian |
பிறப்பு | ஓட்டோ கொலொமன் வாக்னர் 13 சூலை 1841 வியன்னா, ஆத்திரியப் பேரரசு |
இறப்பு | 11 ஏப்ரல் 1918 வியன்னா, ஆத்திரியா-அங்கேரி | (அகவை 76)
பணி | |
கட்டிடங்கள் | Floodgate, Nußdorf, Vienna Karlsplatz Stadtbahn Station
Rumbach Synagogue |
திட்டங்கள் | வியன்னா Wiener Stadtbahn |
வெளி இணைப்புகள்
தொகு- ஓட்டோ வாக்னர் அருங்காட்சியகம், வியென்னா பரணிடப்பட்டது 2007-02-27 at the வந்தவழி இயந்திரம்
- Great Buildings Online
- Images of several Wagner buildings
- Majolica House in Vienna by Otto Wagner பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் (with drawings and photos)
- (செருமன் மொழி) Einige skizzen 1, வியென்னா, 1905.
- (செருமன் மொழி) Einige skizzen 2, வியென்னா, 1905.
- (செருமன் மொழி) Einige skizzen 3, வியென்னா, 1905.