ரிச்சார்டு ஈ. கட்கோசுக்கி
இரிச்சார்டு ஈ. குத்கோசுக்கி (Richard E. Cutkosky) (29 சூலை 1928 – 17 சூன் 1993)[1] என்பவர் ஒரு இயற்பியலாளர். [[குவையக் கோட்பாட்டின் குத்கோசுக்கி வெட்டு விதிகள் வழி அறியப்பட்டார். குத்கோசுக்கி வெட்டு விதி; சிதறல் வீச்சுகளின் தொடர்ச்சியின்மையை பெயின்மன் வரைபடம் மூலம் எளிதாக கணக்கிடும் வழிமுறைகளைத் தருகிறது.
ரிச்சார்டு ஈ. கட்கோசுக்கி | |
---|---|
பிறப்பு | இரிச்சார்டு ஈ. குத்கோசுக்கி Richard E. Cutkosky சூலை 29, 1928 |
இறப்பு | சூன் 17, 1993 | (அகவை 64)
அறியப்படுவது | குத்கோசுக்கி வெட்டு விதிகள் |
இளமையும் கல்வியும்
தொகுஇரிச்சர்டு எடுவின் குத்கோசுக்கி மின்னியாபோலிசில் பிறந்தார். இவரது தந்தையார் எஃப். ஆசுக்கார்; தயார் எடுனா எம்.(நெல்சன்) குத்கோசுக்கி ஆவார். இவரது கல்வியும் பணியும் பெனிசில்வேனியா, பிட்சுபர்கு, காரினிகியிலேயே அமைந்தது. இவர் தன் இளம் அறிவியல், மூதறிவியல் பட்டங்களை கார்னிகி தொழில்நுட்ப நிறுவனத்தில் 1950 இல் பெற்றார். தன் முனைவர் பட்டத்தை 1953 இல் பெற்றார்.
வாழ்க்கப்பணி
தொகுஇவர்1954 முதல் 1961வரை கார்னிகி மெல்லன் பலகலைக்கழகத்தில் இயற்பியல் உதவிப் பேராசிரியராக இருந்தார். இவர் 1961 முதல் பேராசிரியராகவும் 1963 முதல் முதன்முதலில் புகிள் பேராசிரியராகி, தன் இறப்பு வரை(19930) அதில் நீடித்திருந்தார் .[2] He was a fellow of the American Physical Society and of the American Association for the Advancement of Science.
சொந்த வாழ்க்கை
தொகுஇவர் 1952, ஆகத்து 28 இல் பாத்ரீசியா ஏ. கெப்ளரை மணந்தார். இவர்களுக்கு மார்க்கு, கரோல், மார்த்தா என மூன்று குழந்தைகள் உண்டு.
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ "Richard E. Cutkosky", by Lincoln Wolfenstein, 1994
- ↑ Buhl Lectures at the Carnegie Mellon University https://www.cmu.edu/physics/outreach/buhl-lect.html
வெளியீடுகள்
தொகு- R. E. Cutkosky (1960), "Singularities and Discontinuities of Feynman Amplitudes", J. Math. Phys., 1: 429, Bibcode:1960JMP.....1..429C, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1063/1.1703676
நூல்தொகை
தொகு- Wolfenstein, Lincoln (April 1994). "Richard E. Cutkosky". Physics Today: 75–76. doi:10.1063/1.2808481. Bibcode: 1994PhT....47d..75W. An obituary.
- Physics department news of CMU, Bob Kramer (1993), Interactions (PDF), p. 2, archived from the original (PDF) on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 2017-07-03.