ரிடில் ஏரி
மிசோரம் மாநிலத்தின் மிக பெரிய ஏரியான ரிடில் (Rih Dil) மியான்மரில் உள்ளது. ரிடில் ஏரியானது இந்தோ-பர்மா எல்லைக் கிராமமான ஸொகத்தாரிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மைல் நீளமும் அரை மைல் அகலமும் கொண்டது. 60 அடி வரை ஆழமுள்ளது.[1] பர்மாவின் சின் மாநிலத்தில் ரிக் கோத்தார் என்ற இடத்தில் ரிடில் ஏரி அமைந்துள்ளது. சுதந்திரக்கு முன் வரை இந்த ஏரி இந்திய எல்லைக்குள் இருந்துள்ளது.
ரிடில் ஏரி | |
---|---|
ஆள்கூறுகள் | 23°20′24″N 93°23′06″E / 23.340°N 93.385°E |
வடிநில நாடுகள் | மியன்மர் |
எல்லை பிரிக்கப்பட்டதின் பின்பாக தற்போது மியான்மரில் உள்ளது. மிஸோ மக்கள் இறந்த பின் அவர்கள் ஆன்மா இந்த ஏரியில் கலப்பதாக நம்புகின்றனர். இந்த ஏரி உயரத்தில் இருந்து பார்க்கும்பொழுது தாமரை இலை வடிவில் தெரிகிறது.
பயணம்
தொகுரிடில் ஏரிக்கு நேரில் செல்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. பர்மாவில் இருந்து சகாயிங்க் பகுதியில் இருந்து யங்கூன் முதல் மோனிவா வரை பேருந்து தடம் உள்ளது. குறுகிய நெருடலான பாதையில் பயணிக்க வேண்டியுள்ளதால் 33 இருக்கைகள் கொண்டுள்ள சிற்றுந்து பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இந்தோ- மியன்மர் எல்லைப்பகுதியில் உள்ள சாம்பய் பகுதியினை அடைந்து அங்கே ரூ. 10/- க்கு அனுமதி பெற்று நேரடியாக ரடில் ஏரி (Rih Dil Lake) க்கு பேருந்து மூலம் 22 கி.மீ. பயணம் மேற்கொண்டு சென்றடைகின்றனர்.