ரியாசு அகமது கான்
ரியாசு அகமது கான் (Reyaz Mahmed Khan) (பிறப்பு 10 ஏப்ரல் 1969) என்பவர் சேர் இ குத்தார் என்ற பெயரில் பிரபலமாக நன்கு அறியப்படும் சம்மு காசுமீர் அரசியல்வாதி ஆவார். இவர் 2024 முதல் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினராக சாங்கசு-அனந்த்நாக் கிழக்கு சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2]
ரியாசு அகமது கான் | |
---|---|
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 அக்டோபர் 2024 | |
முன்னையவர் | பெர்சாதா மன்சூர் உசேன் |
தொகுதி | சாங்கசு-அனந்த்நாக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
தொழில் | அரசியல்வாதி |
வழக்கறிஞர் பணி
தொகுரியாசு அகமது கான் 1990களில் அனந்த்நாக் மாவட்ட நீதிமன்றத்தில் தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் தனது பயிற்சியை சம்மு காசுமீர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்ட வாழ்க்கையை நடத்திவந்தார்.
கான் பதவியிலிருந்து விலகும் முன்னர், இந்தியக் குடியரசுத் தலைவரின் உத்தரவின் கீழ் நியமிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் இந்திய அரசாங்கத்தின் நிலை ஆலோசகராகப் பணியாற்றினார். அனந்த்நாக் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். மேலும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராகவும் தொடர்ந்து பணியாற்றுகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுரியாசு அகமது கான் சம்மு காசுமீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள சாங்கசை சேர்ந்த கான் வம்சத்தைச் சேர்ந்தவர். இவர் தனது குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையின் இளைய ஆண் உறுப்பினர் ஆவார்.
கான் தனது ஆரம்பக் கல்வியை சாங்கசில் உள்ள உள்ளூர் அரசுப் பள்ளியில் முடித்தார். பின்னர் அனந்த்நாக் அரசு பட்டப்படிப்பு கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். இதன் பின்னர் காசுமீர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
தொகுரியாசு அகமது கான் சட்டப்பூர்வ உறுப்பினராக வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்ததிலிருந்து அரசியல் ரீதியாகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்ந்தார்.
2014ஆம் ஆண்டில், கான் அதிகாரப்பூர்வமாக ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டில் உறுப்பினரானார். மேலும் அனந்த்நாக்கின் சாங்குசு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்
கான் 2024ஆம் ஆண்டில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இம்முறை நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவரை மற்றும் முன்னாள் அமைச்சரை 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, மொத்தம் 30,000 வாக்குகளைப் பெற்றார்.
தற்போது கான் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தெற்கு மண்டல செயலாளராக பணியாற்றுகிறார்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Shangus–Anantnag East, J&K Assembly Election Results 2024 Highlights: JKNC's Reyaz Ahmad Khan defeats JKPDP's Abdul Rehman Bhat with 14532 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
- ↑ "Shangus-Anantnag East Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.