ரியானா
ரியானா என்ற புனைப்பெயரில் அறிவிக்கப்பட்ட ராபின் ரியனா ஃபென்ட்டி (Robyn Rihanna Fenty, பி. பிப்ரவரி 20, 1988) ஒரு பார்பேடிய இசைக் கலைஞர், நடிகை, இசையமைப்பாளர். 2003இல் ஜெய்-சியால் கண்டுபிடிக்கப்பட்டு 2005இல் இவரது முதலாம் இசைத்தொகுப்பு வெளிவந்தது. 2007இல், குட் கேர்ல் கான் பேட் (Good Girl Gone Bad) இசைத்தொகுப்பு வெளிவந்து உலக அளவுக்கு புகழுக்கு வந்தார்.
ரியானா Rihanna | |
---|---|
2013இல் ஜெர்மனியில் ரியானா பாடுகிறார் | |
பிறப்பு | ராபின் ரியானா ஃபென்ட்டி பெப்ரவரி 20, 1988[1] செயின்ட் மைக்கல், பார்படோஸ் |
இருப்பிடம் | நியூயார்க் நகரம், அமெரிக்கா[2] |
பணி | இசைக் கலைஞர், இசையமைப்பாளர், நடிகை, ஆடை அலங்கார அமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–இன்று |
சொத்து மதிப்பு | $ 90 மில்லியன்[3] |
வலைத்தளம் | |
rihannanow.com |
ஏழு கிராமி விருதுகளைப் பெற்றுள்ள ரியானா, பில்போர்ட் பெரும் பாடல் அட்டவணையில் 13 பாடல்கள் அடைந்தவர்களில் மிகவும் இளமையானவர். மூன்று கோடி இசைத் தொகுப்புகளை விற்று, வரலாற்றிலேயே பெருமளவில் விற்பனை செய்த பாடகர்களின் பட்டியலில் இருக்கிறார்.[4] 2012இல் டைம் இதழான் உலகில் 100 மிக செல்வாக்கானவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Monitor". Entertainment Weekly (1247): p. 32. February 22, 2013.
- ↑ Ohlheiser, Abby (October 10, 2013). "Rihanna Is Moving to New York City - The Wire". Theatlanticwire.com. Archived from the original on அக்டோபர் 13, 2013. பார்க்கப்பட்ட நாள் January 19, 2014.
- ↑ Tate, Amethyst (December 6, 2013). "Teyana Taylor Responds To Adidas Controversy After Rihanna Feud Leads To Her Being Dropped By Shoe Brand". International Business Times. பார்க்கப்பட்ட நாள் April 6, 2014.
- ↑ "Rihanna Bio – About Rihanna". MTV. March 29, 2013. http://www.mtv.com/artists/rihanna/biography/.