ரீத்து போகாட்

ரீத்து போகாட் (Ritu Phogat, மே 2, 1994), இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனையாவார். இவர் பெண்களுக்கான மல்யுத்த பாேட்டியில் 2016 பொதுநலவாய விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ரீத்து போகாட்
தனிநபர் தகவல்
முழு பெயர்ரீத்து மகாவீர் சிங் போகத்
தேசியம்இந்தியர்
பிறப்பு2 மே 1994 (1994-05-02) (அகவை 30)
பலாலி, அரியானா, இந்தியா
உயரம்156 cm (5 அடி 1 அங்)
எடை45 கிலோ
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகட்டற்றவகை மற்போர்
நிகழ்வு(கள்)48 கிலோ
பயிற்றுவித்ததுமகாவீர் சிங் போகத்
பதக்கத் தகவல்கள்
கட்டற்றவகை மகளிர் மற்போர்
நாடு  இந்தியா
பொதுநலவாய மற்போர் வாகையர் போட்டி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 சிங்கப்பூர் - 48 கிலோ பிரிவு {{{2}}}
ஆசிய மற்போர் வாகையர் போட்டி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2017 புது தில்லி - 48 கிலோ {{{2}}}

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

முன்னாள் மல்யுத்த வீரரான மகாவீர் சிங் போகாட்டின் மூன்றாவது மகள் தான் ரீத்து பாேகத். தனது எட்டு வயதில் தந்தையின் கீழ் பயிற்சியைத் தொடங்கினார். அவருடைய மல்யுத்தத் தொழிலில் கவனம் செலுத்துவதற்காக பத்தாம் வகுப்புக்குப் பிறகு பள்ளியில் இருந்து வெளியேறினார். அவரது சகோதரிகள் கீதா போகத் மற்றும் பபிதா குமாரி மற்றும் உறவினர் வினேசு போகத் ஆகியோர் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்த வீரர்களாக உள்ளனர். அவருடைய மற்றொரு உறவினரான பிரியங்கா போகத் சர்வதேச அளவில் மல்யுத்த வீரர் ஆவார்.

சாதனைகள்

தொகு

2016 ஆம் ஆண்டு அக்டோபரில், இரண்டாவது முறையாக தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் வென்றார். 2016 ஆம் ஆண்டு நவம்பரில், சிங்கப்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்த போட்டியில், 48 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.[1] .2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ப்ரோ ரெஸ்ட்லிங் லீக் ஏலத்தில் அதிக விலையுயர்ந்த பெண் மல்யுத்த வீரராக ஆனார்,[2] ஜெய்ப்பூர் நிஞ்ஜாஸ் உரிமையுடன் 36 லட்சம் INR ஒப்பந்தத்தைக் கைப்பற்றினார்.[3]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
  • Profile at the United World Wrestling
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீத்து_போகாட்&oldid=2720947" இலிருந்து மீள்விக்கப்பட்டது