வினேசு போகாட்

(வினேசு போகத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வினேசு போகத் (Vinesh Phogat, பிறப்பு:ஆகத்து 25, 1994) இந்தியாவிலுள்ள அரியானா மாநிலத்தை சேர்ந்த மற்போர் வீராங்கனை ஆவார். போகத் மற்போர் போட்டிகளில் பல வெற்றிகளை பெற்ற மல்யுத்த வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது உறவினர்கள் சர்வதேச மல்யுத்த வீரர்கள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் ஆவர். இவரது இரு ஒன்றுவிட்ட சகோதரிகளான கீதா போகத்தும் பபிதா குமாரியும் கூட பன்னாட்டு மற்போர் போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளாவர். மூவரும் பொதுநலவாய விளையாட்டுக்களில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.

வினேசு போகத்
வினேசு போகத்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு25 ஆகத்து 1994 (1994-08-25) (அகவை 30)
பலாலி, அரியானா, இந்தியா[1]
உயரம்160 cm (5 அடி 3 அங்)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகட்டற்றவகை மற்போர்
நிகழ்வு(கள்)48 கிலோ
கழகம்பிவானி விளையாட்டுக் கழகம்
பயிற்றுவித்ததுஓ பி யாதவ்
பதக்கத் தகவல்கள்
மகளிர் கட்டற்றவகை மற்போர்
நாடு  இந்தியா
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 கிளாசுக்கோ 48 கிலோ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 கோல்ட் கோஸ்ட் 50 கிலோ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 பர்மிங்காம் 50 கிலோ
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 இஞ்சியோன் 48 கிலோ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 ஜகார்த்தா 50 கிலோ
ஆசிய மற்போர் வாகையர் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2013 புது தில்லி 51 கிலோ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 தோகா 48 கிலோ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 பாங்காக் 53 கிலோ
பொதுநலவாய மற்போர் வாகையர் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013 ஜோகனசுபெர்கு[2] 51 கிலோ

பொதுநலவாய மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர். இவர் மேலும் உலக மல்யுத்த சாம்பியன் போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற மல்யுத்த வீராங்கனை ஆவார். 2019 ஆண்டில் லாரசு உலக விளையாட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையை போகத் பெற்றார்.

தனிவாழ்வும் குடும்பமும்

தொகு

வினேசு மற்போர் வீரர் மகாவீர் சிங் போகத்தின் தம்பி இராச்பாலின் மகளாவார். மற்போர் வீராங்கனைகளான கீதா போகத்தும் பபிதா குமாரியும் இவரது பெரியப்பாவின் மகள்கள் ஆவர்.[3][4]

இவரையும் இவரது ஒன்றுவிட்ட சகோதரிகளையும் மற்போரில் பயிற்றுவிக்க இவரது தந்தையும் பெரிய தந்தையும் அரியானாவின் பலாலி சிற்றூரில் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் சமூகத்தின் ஒழுக்கத்திற்கும் மரபிற்கும் எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டனர்.[5]

13 டிசம்பர் 2018 அன்று, போகத் தேசிய சாம்பியன் போட்டிகளில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற சக மல்யுத்த வீரருமான சோம்வீர் ரதியை மணந்தார்.[6][7]

மல்யுத்த வாழ்க்கை

தொகு

இந்தியாவில் டெல்லியில் நடந்த 2013 ஆம் ஆண்டுக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டிகளில் பெண்களுக்கான 52 கிலோ எடை பிரிவில் போகத் வெண்கலப் பதக்கம் வென்றார்.[8] தென்னாப்பிரிக்கா இல் நடைபெற்ற மற்போர் போட்டியில், இவர் 51 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.[9] போகத் 2014ஆம் ஆண்டு நடந்த பொதுநலவாய போட்டிகளில் 48 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கம் வென்றார். [10][11] இவர் 2014 இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 48 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்றார்.[12][13] 2015 ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் போகத் தனது பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.[14]

பின்னர் 2016 ரியோ கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இவர் காயமடைந்தார். இதன் பிறகு 2018 இல் நடந்த ஆசிய விளையாட்டு மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 50 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.[15] இதன் மூலம் ஆசிய போட்டிகளில் மற்போரில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.[16] இவர் 2019 இல் நடந்த உலக சாம்பியன் போட்டிகளில் 53 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்றார்.[17][18][19]

ஆகசுது 2021 இல், இவர் 2020 கோடைகால ஒலிம்பிக்கில் 53 கிலோ பிரிவில் காலிறுதியில் தோற்றார்.[20] ஒலிம்பிக்கிற்குப் பிறகு, ஒலிம்பிக் கிராமத்தில் தனது இந்திய அணியினருடன் பயிற்சி பெற மறுத்ததாலும், ஒலிம்பிக்கில் அதிகாரப்பூர்வ இந்திய உடையை அணியாததாலும், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு அவரை ஒழுக்கமின்மைக்காக இடைநீக்கம் செய்தது.[21] இதற்காக போகத் மன்னிப்பு கோரினார்.[22] இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெற்ற 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 53 கிலோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.[23][24]

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் 2024 செப்டம்பர் 6 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.[25]இவர் அரியானாவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஜுலானா சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பில் சட்டமன்றத்திற்குப் போட்டியிட உள்ளார்.[26]

மேற்சான்றுகள்

தொகு
  1. "Kin celebrate Haryana wrestlers' fete at Glasgow". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 30 July 2014. http://www.hindustantimes.com/chandigarh/kin-celebrate-haryana-wrestlers-fete-at-glasgow/story-sHe4dxZV5rJIiSGbeKZbdN.html. பார்த்த நாள்: 21 February 2016. 
  2. "2013 Commonwealth Wrestling". Commonwealth Amateur Wrestling Association (CAWA). Archived from the original on 21 March 2016. பார்க்கப்பட்ட நாள் 21 February 2016.
  3. "Vinesh wins gold, with help from her cousin". The Indian Express. 30 July 2014. http://indianexpress.com/article/sports/sport-others/vinesh-wins-gold-with-help-from-her-cousin/. 
  4. "Meet the medal winning Phogat sisters". DNA. http://www.dnaindia.com/lifestyle/report-meet-the-medal-winning-phogat-sisters-2009485. 
  5. "I Am A Girl, I Am A Wrestler | Tadpoles". Tadpoles. 2014-07-24. Archived from the original on 2015-11-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
  6. "Pre-wedding festivities begin at Vinesh's village". The Tribune. https://www.tribuneindia.com/news/haryana/pre-wedding-festivities-begin-at-vinesh-s-village/696489.html. 
  7. [hhttps://www.hindustantimes.com/other-sports/vinesh-phogat-to-marry-wrestler-somvir-rathee-on-december-13/story-Qw8FsuQSvr8jhSRk36Mb3M.html "Vinesh Phogat to marry wrestler Somvir Rathee on December 13"]. 'Hindustan Times. hhttps://www.hindustantimes.com/other-sports/vinesh-phogat-to-marry-wrestler-somvir-rathee-on-december-13/story-Qw8FsuQSvr8jhSRk36Mb3M.html. 
  8. "International Wrestling Database". www.iat.uni-leipzig.de. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
  9. "International Wrestling Database". www.iat.uni-leipzig.de. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
  10. "Glasgow 2014 - Vinesh Profile". g2014results.thecgf.com. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
  11. "Women's Freestyle 48 kg Final". glasgow2014.com. 30 July 2014. பார்க்கப்பட்ட நாள் 30 July 2014.
  12. "Wrestler Vinesh Phogat wins18th bronze for India in Asian Games 2014". india.com. 27 September 2014. பார்க்கப்பட்ட நாள் 27 September 2014.
  13. "Athletes_Profile | Biographies | Sports". www.incheon2014ag.org. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
  14. "International Wrestling Database". www.iat.uni-leipzig.de. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
  15. "Tokyo 2020: Vinesh Phogat buries ghosts of Rio Games, star wrestler geared up for 2nd Olympics appearance". India Today. 18 July 2021. https://www.indiatoday.in/sports/tokyo-olympics/story/vinesh-phogat-tokyo-olympics-rio-heartbreak-top-billing-wrestling-1829627-2021-07-18. 
  16. "Mental toughness helped me handle weight transition: Vinesh Phogat". Olympic Channel. 15 April 2020. https://www.olympicchannel.com/en/stories/news/detail/indian-wrestler-vinesh-phogat-mental-53kg-tokyo-olympics/. 
  17. "Tokyo 2020: Vinesh Phogat buries ghosts of Rio Games, star wrestler geared up for 2nd Olympics appearance". India Today. 18 July 2021. https://www.indiatoday.in/sports/tokyo-olympics/story/vinesh-phogat-tokyo-olympics-rio-heartbreak-top-billing-wrestling-1829627-2021-07-18. 
  18. "Vinesh wins Bronze". Times of India. 26 April 2019. http://timesofindia.indiatimes.com/articleshow/69059176.cms. 
  19. "World Championships".
  20. "Wrestling Results Book" (PDF). 2020 Summer Olympics. பார்க்கப்பட்ட நாள் 8 August 2021.
  21. "WFI suspends star wrestler Vinesh Phogat over indiscipline after Tokyo Olympics campaign" (in en). India Today. https://www.indiatoday.in/sports/tokyo-olympics/story/tokyo-2020-vinesh-phogat-suspended-wrestling-india-indiscipline-sponsors-kit-1839203-2021-08-10. 
  22. "Vinesh Phogat sends apology to WFI, may still not be allowed to compete at Worlds". Sportstar. 14 August 2021. https://sportstar.thehindu.com/wrestling/vinesh-phogat-sends-apology-to-wfi-may-not-be-allowed-to-compete-at-world-championship/article35918047.ece. 
  23. Berkeley, Geoff (6 August 2022). "Phogat completes Commonwealth Games hat-trick with another wrestling gold". InsideTheGames.biz. https://www.insidethegames.biz/articles/1126690/phogat-third-commonwealth-games-title. 
  24. "Wrestling Competition Summary" (PDF). 2022 Commonwealth Games. Archived from the original (PDF) on 6 August 2022. பார்க்கப்பட்ட நாள் 6 August 2022.
  25. "Olympic wrestlers Vinesh Phogat, Bajrang Punia join Congress; Punia made working chairman of Kisan Congress". The Hindu Bureau. The Hindu. https://www.thehindu.com/elections/haryana-assembly/haryana-assembly-elections-vinesh-phogat-and-bajrang-punia-congress/article68612896.ece. பார்த்த நாள்: 7 September 2024. 
  26. "Haryana Assembly elections: Congress releases first list of 32 candidates; Vinesh Phogat to fight from Julana". The Hindu Bureau. The Hindu. 07 September 2024. https://www.thehindu.com/elections/haryana-assembly/vinesh-phogat-to-fight-from-julana-congrss-releases-first-list-of-candidates-for-haryana-assembly-election/article68615093.ece. பார்த்த நாள்: 7 September 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினேசு_போகாட்&oldid=4086509" இலிருந்து மீள்விக்கப்பட்டது