பொதுநலவாய விளையாட்டுகளில் இந்தியா

பொதுநலவாய விளையாட்டுகளில் இந்தியா (India at the Commonwealth Games) இதுவரை நடைபெற்றுள்ள 18 போட்டிகளில் பதினான்கு போட்டிகளில் பங்குபெற்றுள்ளது. 1934 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது காமன்வெல்த் போட்டிகள் முதல் இந்தியா பங்கேற்கத் தொடங்கியது. ஒருமுறை இந்தியாவிலும் இப்போட்டிகள் நடைபெற்றன.

பொதுநலவாய விளையாட்டுகளில்
இந்தியா
பொ.சி.கூ குறியீடுIND
பொ.வி.கூஇந்திய ஒலிம்பிக் சங்கம்
இணையதளம்olympic.ind.in
பதக்கங்கள்
தரம் 4-ஆம்
தங்கம்
181
வெள்ளி
175
வெண்கலம்
148
மொத்தம்
504
அதிகாரிகள்708
Commonwealth Games appearances
British Empire Games
பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள்
பிரித்தானியப் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுக்கள்
பொதுநலவாய விளையாட்டுக்கள்

போட்டியை நடத்திய நாடு

தொகு

2010 ஆம் ஆண்டு தில்லியில் காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்தியது. இன்றுவரையில் அப்போட்டியே இந்தியாவுக்கு பெருமை பெற்றுத்தந்த வெற்றிகரமான போட்டியாகும். இப்போட்டியில் இந்தியாவின் தடகள விளையாட்டு வீரர்கள் 38 தங்கம், 27 வெள்ளி 36 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று வெற்றிவாகை சூடினார்கள்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 64 பதக்கங்களை வென்றது. ( தங்கம்=15, வெள்ளி=30, வெண்கலம்=19)> இந்தியாவிற்கான முதலாவது காமன்வெல்த் பதக்கத்தை ரசீத் அன்வர் என்ற மல்யுத்த விளையாட்டு வீரர் பெற்றுத் தந்தார்[1]. இவர் பெரும்பளு பிரிவினருக்கான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்காக ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

இந்தியாவின் ஒட்டுமொத்தப் பதக்கங்கள்

தொகு
ஆண்டு   தங்கம்   Sவெள்ளி   வெண்கலம் மொத்தம் இருப்பிடம்
2018 8 4 5 17 3வது
2014 15 30 19 64 5வது
2010 38 27 36 101 2வது
2006 22 17 11 50 4வது
2002 30 22 17 69 4வது
1998 7 10 8 25 7வது
1994 6 12 7 25 6வது
1990 13 8 11 32 5வது
1986 பங்கேற்கவில்லை
1982 5 8 3 16 6வது
1978 5 5 5 15 6வது
1974 4 8 3 15 6வது
1970 5 3 4 12 6வது
1966 3 4 3 10 8வது
1962 பங்கேற்கவில்லை
1958 2 1 0 3 8வது
1954 0 0 0 0 NA
1950 பங்கேற்கவில்லை
1938 0 0 0 0 NA
1934 0 0 1 1 12வது
1930 பங்கேற்கவில்லை
மொத்தம் 163 159 133 455

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு