2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
2020 கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (2020 Summer Olympics, 2020年夏季オリンピック), அலுவல் முறையில் 32வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the XXXII Olympiad) என்பது சப்பானின் டோக்கியோ நகரில் 2020 சூலை 24 முதல் ஆகத்து 9 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள முக்கிய பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் ஆகும். 2013 செப்டம்பர் 7 இல் புவனெசு ஐரிசு நகரில் இடம்பெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 125வது அமர்வில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 2020 ஆம் ஆண்டுக்கான போட்டிகளை நடத்த டோக்கியோ தெரிவு செய்யப்பட்டது.[1][2] டோக்கியோ ஏற்கனவே 1964 கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியிருந்தது. 2019-2020 கொரோனா வைரசு பிரச்சனை காரணமாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது 23 சூலை 2021 முதல் 8 ஆகத்து 2021 வரை நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.
குறிக்கோள் | 'நாளை கண்டுபிடி Discover Tomorrow' |
---|
மேற்கோள்கள்தொகு
- ↑ "Tokyo to Host 2020 Olympics". Bangalorean. http://www.bangalorean.co.in/2013/09/tokyo-to-host-2020-olympics.html. பார்த்த நாள்: 7 September 2013.
- ↑ டோக்கியோ 2020 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை நடத்த தகுதி பெற்றது, விக்கிசெய்திகள், செப்டம்பர் 9, 2013