சைக்கோம் மீராபாய் சானு

சைக்கோம் மீராபாய் சானு (Saikhom Mirabai Chanu) (பிறப்பு 8 ஆகஸ்ட் 1994) ஓர் இந்திய பாரம் தூக்குதல் வீரராவார் . 2020 கோடைக்கால ஒலிம்பிக்கில் 49 கிலோ பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மீராபாய் சானு உலக வாகையாளர் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். விளையாட்டுத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. இவருக்கு 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

சைக்கோம் மீராபாய் சானு
Saikhom Mirabai Chanu.jpg
|2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பாரம் தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியா
பிறப்பு8 ஆகத்து 1994 (1994-08-08) (அகவை 28)
காக்சிங், கிழக்கு இம்பால் மாவட்டம், மணிப்பூர், இந்தியா
வசிப்பிடம்இம்பால், மணிப்பூர், இந்தியா
உயரம்1.50 m
எடை49 கிகி
விளையாட்டு
நாடுஇந்தியர்
விளையாட்டுபாரம் தூக்குதல்
நிகழ்வு(கள்)2021 ஒலிம்பிக், உலக பாரம் தூக்குதல் போட்டிகள், பொதுநலவாய விளையாட்டுக்கள்,
பயிற்றுவித்ததுவிஜய் சர்மர், ஆரோன் ஹோர்ஸ்சிக்[1]
பதக்கத் தகவல்கள்
பாரம் தூக்குதல் போட்டியில் வென்ற பதக்கங்கள்
 இந்தியா
ஒலிம்பிக் விளையாட்டுகள்
வெள்ளி 2021 டோக்கியோ ஒலிம்பிக் 49 கிலோ எடைப் பிரிவு
உலக பாரம் தூக்குதல் போட்டிகள்
தங்கம் 2017 உலக பாரம் தூக்குதல் போட்டிகள் 48 கிலோ
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலம் 2020 ஆசிய பாரம் தூக்கும் போட்டியில் 49 கிலோ
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கம் 2022 பொதுநலவாய விளையாட்டுக்கள் 48 கிலோ எடைப் பிரிவு
தங்கம் 2018 பொதுநலவாய விளையாட்டுகள் 48 கிலோ எடைப் பிரிவு
வெள்ளி 2014 பொதுநலவாய போட்டி 48 கிலோ எடைப் பிரிவு

2014 பொதுநலவாய பாரம் தூக்குதல் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார், கிளாஸ்கோ ; கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற 2018 பொதுநலவாய விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார். 2020 கோடைகால ஒலிம்பிக்கிற்கு முன்பு, கலிபோர்னியாவின் அனாஹெய்மில் நடைபெற்ற உலக பளுதூக்குதல் வாகையாளர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். [2]

2022 பர்மிங்காம் பொதுநல விளையாட்டுக்கள்தொகு

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற பொதுநல விளையாட்டு 2022இல் பெண்களுக்கான 49 கிலோ பிரிவில் சானு தங்கப் பதக்கம் வென்றார். [3] [4] சினாட்ச் மற்றும் க்ளீன் அண்ட் ஜெர்க் முறையில் மொத்தம் 201 கிலோ தூக்கினார். [5]

இதனையும் காண்கதொகு

சான்றுகள்தொகு

  1. Kaushik Deka (19 July 2021). "Lifting hope Saikhom Mirabai Chanu". India Today. 24 July 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Mirabai Chanu wins gold medal in World Weightlifting Championships". Hindustan Times. 30 November 2017. https://www.hindustantimes.com/other-sports/mirabai-chanu-wins-gold-medal-in-world-weightlifting-championships/story-jNshqWzng2FebQbk7l5itN.html. 
  3. "Mirabai Chanu clinches India's 1st gold medal of Commonwealth Games 2022, shatters Games record in women's weightlifting". Hindustan Times. 2022-07-30. https://www.hindustantimes.com/sports/commonwealth-games/mirabai-chanu-clinches-india-s-first-gold-medal-of-commonwealth-games-2022-wins-women-s-49kg-weightlifting-final-101659196382112.html. 
  4. "India's Chanu reigns supreme in women's weightlifting 49kg class". InsideTheGames.biz. 30 July 2022. https://www.insidethegames.biz/articles/1126403/chanu-india-weightlifting. 
  5. "Commonwealth Games 2022: Mirabai Chanu wins first gold medal for India". The Bridge. 2022-07-30. https://thebridge.in/commonwealth-games/mirabai-chanu-wins-first-gold-for-india-cwg-2022-33857. 

வெளி இணைப்புகள்தொகு