2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா

தோக்கியோவில் சூலை 23 முதல் ஆகத்து 8 வரை 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா பங்கேற்றுள்ளது பற்றியது ஆகும். இந்த போட்டியானது முதலில் 2020 சூலை 24 முதல் ஆகத்து 9 வரை நடைபெற திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட் -19 பெருந்தொற்றுநோயால், சூலை 23 முதல் 2021 ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது.[4] இந்த விளையாட்டுகளுக்கு இந்தியா 120 போட்டியாளர்களை அனுப்பியுள்ளது.

2020 ஒலிம்பிக் விளையாட்டுப் விளையாட்டுகளில்
இந்தியா
ப.ஒ.கு குறியீடுIND
தே.ஒ.குஇந்திய ஒலிம்பிக் சங்கம்
இணையதளம்www.olympic.ind.in
தோக்கியோ, ஜப்பான்
போட்டியாளர்கள்120[1]
கொடி தாங்கியவர்மேரி கோம் (துவக்க விழா)
மன்பிரீத் சிங்(துவக்க விழா)
பஜ்ரங் புனியா (நிறைவு விழா)[2]
பதக்கங்கள்
தரம் 33[3]-ஆம்
தங்கம்
1
வெள்ளி
2
வெண்கலம்
4
மொத்தம்
7

இந்த விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள மற்றும் வீராங்கனைகள் 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர். நீரஜ் சோப்ரா தடகள விளையாட்டில் ஈட்டி எறியும் போட்டியில் தங்கப் பதக்கமும், சைக்கோம் மீராபாய் சானு மகளிர் பாரம் தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ரவி குமார் தாகியா ஆடவர் மற்போர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், லவ்லினா போர்கோஹெய்ன் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கமும், பி.வி. சிந்து மகளிர் ஒற்றையர் இறகுப்பந்தாட்டம் போட்டியில் வெண்கலப் பதக்கமும், பஜ்ரங் புனியா ஆடவர் 67 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கமும், இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

போட்டியாளர்கள் தொகு

 
தோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கான இந்தியா அணிகளை அதிகாரப்பூர்வ ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு சூன் 03 2021 அன்று வெளியிட்டார்.
விளையாட்டு ஆடவர் பெண்கள் மொத்தம்
வில்வித்தை 3 1 4
தடகள விளையாட்டு 17 8 25
இறகுப்பந்தாட்டம் 3 1 4
குத்துச் சண்டை 5 4 9
குதிரையேற்றம் 1 0 1
வாள்வீச்சு 0 1 1
வளைதடிப் பந்தாட்டம் 16 16 32
குழிப்பந்தாட்டம் 2 1 3
சீருடற்பயிற்சிகள் 0 1 1
யுடோ 0 1 1
படகு விளையாட்டுகள் 2 0 2
துடுப்புப் படகோட்டம் 3 1 4
குறி பார்த்துச் சுடுதல் 8 7 15
நீச்சற் போட்டி 2 1 3
மேசைப்பந்தாட்டம் 2 2 4
டென்னிசு 1 2 3
பாரம் தூக்குதல் 0 1 1
மற்போர் 3 4 7
மொத்தம் 68 52 120

வில்வித்தை தொகு

நெதர்லாந்தின் எர்டோசன்போசு நகரத்தில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு உலக வில்வித்தை வெற்றியாளர் போட்டியில் ஆண்கள் அணியின் காலிறுதி கட்டத்தை எட்டியதன் மூலம் மூன்று இந்திய வில்லாளர்கள் 2020 டோக்கியோ ஆண்கள் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.[5] தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற 2019 ஆசிய வெற்றியாளர் போட்டிகளில் மூன்று இடங்களில் ஒன்றை பதிவு செய்ய நடைபெற்ற மகளிர் தனிநபர் காலிறுதி சுற்றில் மற்றொரு இந்திய வில் வித்தை வீராங்கனை வெற்றியைப் பெற்று டோக்கியோ செல்ல தகுதி பெற்றுள்ளார்.[6] டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான முழு இந்திய வில்வித்தை அணி 2021 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் மூத்த தருந்தீப் ராய் மற்றும் உலக-ஒன்பதாம் நிலை வீராங்கனை தீபிகா குமாரி ஆகியோர் மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் கலந்து கொள்கின்றனர்.[7]

தடகளவீரர் போட்டி தரச்சுற்று 64 பேர் சுற்று 32 பேர் சுற்று 16 பேர் சுற்று காலிறுதி அரை இறுதி இறுதிப் போட்டி / பி.எம்
புள்ளி நிலை எதிராளி
புள்ளி
எதிராளி
புள்ளி
எதிராளி
புள்ளி
எதிராளி
புள்ளி
எதிராளி
புள்ளி
எதிராளி
புள்ளி
தரம்
அட்டானு தாசு ஆண்கள் தனி 653 35   சீன தைப்பே டெங் யூ
28 சூலை
பிரவின் யாதவ் 656 31 உருசியா கல்சன்
28 சூலை
தருண்தீப் இராய் 652 37   உக்ரைன் கன்பின்
28 சூலை
அட்டானு தாசு
பிரவின் யாதவ்
தருண்தீப் இராய்
ஆண்கள் அணி 1961 9 பொருத்தமில்லை   கசக்கஸ்தான்
வெ 6–2
  தென் கொரியா
தோ 0–6
தகுதிப்பெறவில்லை
தீபிகா குமாரி பெண்கள் தனி 663 9   பூட்டான் கர்மா
28 சூலை
  ஐக்கிய அமெரிக்கா
வெ 6–4
  சீனக் குடியரசு
வெ 6–5
  தென் கொரியா
தோ 0–6
தகுதிப்பெறவில்லை
 
 
கலப்பு அணி பொருத்தமில்லை

தடகளம் தொகு

இந்திய தடங்க வீரர் வீராங்கனைகள் தகுதிச் சுற்று விளையாட்டுகள் மற்றும் தரவரிசைகளின்படி விளையாட தகுதிப்பெற்றனர்:[8][9]

தடப் போட்டிகள்
ஆண்கள்
தடகள வீரர் போட்டி சுற்று அரை இறுதி இறுதி
முடிவு தரநிலை முடிவு தரநிலை முடிவு தரநிலை
யாபிர் எம் பாள்ளியாலில் 400மீ தடைதாண்டல்
முகம்மது அனாசு
நோவா நிர்மல் டோம்
அமோச் யாக்கப்
ஆரோக்ய ராஜீவ்
நாகநாதன் பாண்டி
4 × 400மீ தொடரோட்டம் பொருத்தமில்லை
சந்தீப் குமார் 20கி.மீ நடைப்போட்டி பொருத்தமில்லை
ராகுல் ரோகில்லா பொருத்தமில்லை
இர்பான் கொலோதம் தோடி பொருத்தமில்லை
குர்பிரீத் சிங் 50 கி.மீ நடைப்போட்டி பொருத்தமில்லை
அவினாசு சேப்லி 3000மீ இடர்பல கடக்கும் குதிரைப் பந்தயம் பொருத்தமில்லை
பெண்கள்
வீராங்கனை போட்டி சுற்று அரை இறுதி இறுதி
முடிவு தரநிலை முடிவு தரநிலை முடிவு தரநிலை
துத்தி சந்த் 100 மீ ஓட்டம்
200 மீ ஓட்டம்
பிரியங்கா கோசுவாமி 20 கி.மீ நடைப்போட்டி பொருத்தமில்லை
பாவனா யாட்டு பொருத்தமில்லை
கலப்பு
வீராங்கனை போட்டி சுற்று இறுதிப் போட்டி
முடிவு தரநிலை முடிவு தரநிலை
சர்தாக் பாம்பிரி
அலெக்சு ஆண்டனி
ரேவதி வீரமணி
சுபா வெங்கடேசன்
தனலட்சுமி சேகர்
4 × 400 மீ தொடரோட்டம்
களப் போட்டிகள்
வீரர் போட்டி தகுதி இறுதிப் போட்டி
தொலைவு நிலை தொலைவு நிலை
நீரஜ் சோப்ரா ஆண்கள் ஈட்டி எறிதல் 87.58 மீ தங்கப் பதக்கம்
சிவ்பால் சிங்
முரளி சிறீசங்கர் ஆண்கள் நீளம் தாண்டல்
தேஜிந்தர் பால்சிங் ஆண்கள் குண்டு எறிதல்
கமால்பிரீத் கவுர் பெண்கள் தட்டு எறிதல்
சீமா அண்டில்
அன்னு ராணி பெண்கள் ஈட்டி எறிதல்

இறகுப்பந்தாட்டம் தொகு

இந்தியாவின் சார்பில் நான்கு இறகுப்பந்தாட்ட வீரர்கள் டோக்கியோ 2020 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இறகுப்பந்தாட்ட உலகக்கூட்டமைப்பு போட்டிகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு சூன் 15 தேதியிலான தரத்தின் மூலம் இவ்வீரர்கள் தகுதிபெற்றுள்ளனர்.ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தலா ஒருவரும் மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஓரிணையும் இப்போட்டிக்காகச் செல்கிறார்கள்.[10]

வீரர் போட்டி குழு நிலை வெளியேற்றம் காலிறுதி அரையிறுதி இறுதிப் போட்டி / வெங்கலம்
எதிராளர்
புள்ளி
எதிராளர்
புள்ளி
எதிராளர்
புள்ளி
தரநிலை எதிராளர்
புள்ளி
எதிராளர்
புள்ளி
எதிராளர்
புள்ளி
எதிராளர்
புள்ளி
தரநிலை
பொ. சாய் பிரனீத்து ஆண்கள் ஒற்றையர்   இசுரேல்
மிசா சிபெர்மான்
தோ (17–21, 15–21)
  நெதர்லாந்து
மார்க்கு கால்யௌவ்|
தோ (14–21, 14–21)
பொருத்தமில்லை 3 அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை
சாத்விக்சாய்ராச்சு ராங்கிரெட்டி
சிராக் செட்டி
ஆண்கள் இரட்டையர்   சீன தைப்பே லீ யாங்கு
வாங் சீ லின்
வெ (21–16, 16–21, 27–25)
  இந்தோனேசியா பெர்னால்டி கிதியோன் /
கெவின் சஞ்சயா
தோ (13–21, 12–21)
  ஐக்கிய இராச்சியம் பென் லேன் /
சீன் வெந்தி
வெ (21–17, 21–19)
3 அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை
பு. வெ. சிந்து பெண்கள் ஒற்றையர்   இசுரேல் போலிகார்ப்போவா|
வெ (21–7, 21–10)
  ஆங்காங் செங்கு நாகன்
வெ (21–9, 21–16)
இல்லை 1 Q   டென்மார்க் மியா பிளிச்பெல்ட்
வெ(21–15, 21–13)
  சப்பான்
அகானே யமகுச்சியுடன்|
வெ (21–13, 22–20)
  சீன தைப்பே
தாய் ஜு
தோ (18–21, 12–21)
  சீனா கி பிங் ஜியா
வெ (21–13, 21–15)
 

குத்துச்சண்டை தொகு

இந்தியாவின் சார்பாக ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என மொத்தமாக ஒன்பது குத்துச்சண்டை வீர்ர்கள் டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற விகாசு கிருசன் யாதவ், 2014 ஆசியவிளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சத்தீசு குமார், நடப்பு ஆசிய வெற்றியாளர் பூஜா ராணி, 2012 இலண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றவரும் ஆறுமுறை உலக வெற்றியாளருமான மேரிகோம், 2019 ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற அமிட் பங்கால், 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் இடம் பிடித்த மணீசு கௌசிக் மற்றும் ஆசிசு குமார், சிம்ரஞ்சித் கவுர், லவ்லினா பொர்கோகைன் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியக் குத்துச்சண்டை அணியில் இடம்பிடித்தவர்களாவர்.[11][12]

ஆண்கள்
வீரர் போட்டி 32 பேருக்கான சுற்று 16 பேருக்கான சுற்று காலிறுதி அரையிறுதி இறுதிப்போட்டி
எதிராளர்
முடிவு
எதிராளர்
முடிவு
எதிராளர்
முடிவு
எதிராளர்
முடிவு
எதிராளர்
முடிவு
தரநிலை
அமிட் பங்கால் 49-51கி.கி ஆண்கள் பொருத்தமில்லை   கொலம்பியா
யூபர்ஜென் மார்டினெசு
தோ 1–4
அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை 9
மணீசு கௌசிக்கு 57-60 கி.கி ஆண்கள்   ஐக்கிய இராச்சியம்
லூக் மெக்கார்மாக்
தோ 1–4
அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை 17
விகாசு கிருசன் யாதவ் 63-67 கி.கி ஆண்கள்   சப்பான்
செவான் ஒகாசாவா
தோ 0–5
அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை
ஆசிசு குமார் 70-73 கி.கி ஆண்கள்   சீனா
எர்பிகே துகெட்டா
தோ 0–5
அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை 17
சத்தீசு குமார் 106 கி.கி மற்றும் அதிகம் ஆண்கள் பொருத்தமில்லை   ஜமேக்கா
ரிக்கார்டோ பிரவுன்
வெ 4–1
  உஸ்பெகிஸ்தான்
பகோதிர் சலோலோவ்
தோ 0–5
அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை 5
பெண்கள்
வீராங்கனை போட்டி 32 பேர் சுற்று 16 பேர் சுற்று காலிறுதி அரையிறுதி இறுதிப்போட்டி
எதிராளி
முடிவு
எதிராளி
முடிவு
எதிராளி
முடிவு
எதிராளி
முடிவு
எதிராளி
முடிவு
தரநிலை
மேரி கோம் 49 கி.கி முதல் 51 கி.கி வரை   டொமினிக்கன் குடியரசு
மிகுவெலினா கெர்னாண்டசு
வெ 4-1
  கொலம்பியா
இங்க்ரிட் வலென்சியா
தோ 2–3
அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை 9
சிம்ரஞ்சித்து கவுர் 57 கி.கி முதல் 60 கி.கி வரை பொருத்தமில்லை   தாய்லாந்து
சுடபோர்ன் சீசோன்டி
L 0–5
அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை 9
இலவ்லினா போர்கோகெய்ன் 63 கி.கி முதல் 67 கி.கி வரை பொருத்தமில்லை   செருமனி
நாடின் அபெட்ஸ்
வெ 3–2
  சீன தைப்பே
சென் நியான்-சின்
வெ 4–1
  துருக்கி புசேனா சூர்மனெல்லி
தோ 0–5
முன்னேறவில்லை  
பூஜா ராணி 70 கி.கி முதல் 73 கி.கி வரை பொருத்தமில்லை

குதிரையேற்றம் தொகு

கடந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியா ஒலிம்பிக் போட்டியின் குதிரையேற்றப் போட்டியில் பங்கேற்கிறது. ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் முதல் இரண்டு இடங்களைக் கைப்பற்றி இந்தியா தகுதி பெற்றுள்ளது.[13][14]

குதிரைச்சவாரி நிகழ்வு தொகு

வீரர் குதிரை நிகழ்வு பயிற்சியோட்டம் வேட்டையோட்டம் தடைவேலியோட்டம் மொத்தம்
தகுதிச்சுற்று இறுதிச்சுற்று
தவறுகள் தரநிலை தவறுகள் மொத்தம் தரநிலை தவறுகள் மொத்தம் தரநிலை தவறுகள் மொத்தம் தரநிலை தவறுகள் தரநிலை
போவாத்து மிர்சா சீக்னியர் குதிரையேற்றம் – தனிநபர் சவாரி|தனிநபர்

வாள் வீச்சு தொகு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதன்முறையாக வாள் சண்டைப் போட்டியில் பங்கேற்கிறது. சென்னையைச் சேர்ந்த சி.ஏ. பவானி தேவி பெண்கள் வாள் சண்டைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். அங்கேரி நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிதொடரின் காலிறுதிப்போட்டியில் அங்கேரி கொரியாவிடம் தோற்றுப்போனது. சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வதரவரிசையின் அடிப்படையில் பவானி இப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.[15]

வீரர் போட்டி 64 பேர் சுற்று 32 பேர் சுற்று 16 பேர் சுற்று காலிறுதி அரையிறுதி இறுதிப் போட்டி / வெண்கலம்
எதிராளி
புள்ளி
எதிராளி
புள்ளி
எதிராளி
புள்ளி
எதிராளி
புள்ளி
எதிராளி
புள்ளி
எதிராளி
புள்ளி
தரநிலை
ச. ஆ. பவானி தேவி பெண்கள் அடி வாள்

வளைதடிப் பந்தாட்டம் தொகு

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் வளைதடிப் பந்தாட்ட அணி வெண்கலப் பதக்கம் வென்றது.[16]

இந்திய பெண்கள் ஹாக்கி அணி வரலாற்றிலேயே முதல் முறையாக அரை இறுதிப் போட்டி வரை முன்னேறியது. கடைசி வரை போராடியும் அர்ஜென்டினா உடனான அரை இறுதியில் தோல்வியைத் தழுவியது.[17]

அணி போட்டி குழு சுற்று காலிறுதி அரையிறுதி இறுதிப் போட்டி / வெண்கலம்
எதிர்அணி
புள்ளிகள்
எதிர்அணி
புள்ளிகள்
எதிர்அணி
புள்ளிகள்
எதிர்அணி
புள்ளிகள்
எதிர்அணி
புள்ளிகள்
தரவரிசை எதிர்அணி
புள்ளிகள்
எதிர்அணி
புள்ளிகள்
எதிர்அணி
புள்ளிகள்
தரவரிசை
இந்திய ஆண்கள் 2020 ஒலிம்பிக் வளைதடிப் பந்தாட்டம்   நியூசிலாந்து
வெ 3–2
  ஆத்திரேலியா
தோ 1–7
  எசுப்பானியா
வெ 3–0
  அர்கெந்தீனா
வெ 3–1
  சப்பான்
வெ 5–3
2 Q   ஐக்கிய இராச்சியம்
வெ 3–1
  பெல்ஜியம்
தோ 2–5
  செருமனி
வெ 5–4
 
இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட பெண்கள் அணி 2020 ஒலிம்பிக் வளைதடிப் பந்தாட்டம்   நெதர்லாந்து
தோ 1–5
  செருமனி
தோ 0–2
  ஐக்கிய இராச்சியம்
தோ 1–4
  அயர்லாந்து
வெ 1–0
  தென்னாப்பிரிக்கா
வெ 4–3
4 Q   ஆத்திரேலியா
வெ 1–0
  அர்கெந்தீனா
தோ 1–2
  ஐக்கிய இராச்சியம்
ஆகத்து 6

குழிப்பந்து தொகு

2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழிப்பந்து வீரருடன் நுழைகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டிக்கு தகுதியான முதல் 60 வீரர்களில் அனிர்பன் லாகிரி, உதயன் மானே மற்றும் அதிதி அசோக் ஆகியோர் நேரடியாக தகுதி பெற்றுள்ளனர்.

வீரர் நிகழ்வு சுற்று 1 சுற்று 2 சுற்று 3 சுற்று 4 மொத்தம்
புள்ளி புள்ளி புள்ளி புள்ளி புள்ளி பார் தரநிலை
அனிர்பான் இலாகிரி ஆண்கள் தனிநபர்
உதயன் மானே
அதிதி அசோக் பெண்கள் தனிநபர்

சீருடற் பயிற்சிகள் தொகு

2020 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா கலைநய சீருடற் பயிற்சி விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கிறது. சீனாவின் ஆங்க்சோவில் நடைபெறவிருந்த 2021 ஆசிய வெற்றியாளர் போடி இரத்து செய்யப்பட்டதன் மூலம், செருமனியின் சிடட்கார்டு நகரத்தில் நடைபெற்ற 2019 உலக கலைநய சீருடற்பயிற்சிப் போட்டிகள் புள்ளிகளின் அடிப்படையில், ஆசிய கண்டத்தில் இருந்து தகுதிக்கு போட்டியிடும் சீருடற்பயிற்சிப் போட்டியாளராக பிரணதி நாயக் பெண்கள் தனிநபர் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[18]

பெண்கள்
வீரர் நிகழ்வு தகுதி இறுதிப்போட்ட்டி
கருவி மொத்தம் தரநிலை கருவி மொத்தம் தரநிலை
வி யுபி பிபி எப் வி யுபி பிபி எப்
பிரணதி நாயக் பெண்கள் தனிநபர் போட்டி

இந்தியா வென்ற பதக்கங்கள் தொகு

2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள மற்றும் வீராங்கனைகள் 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.[19]

பதக்கம் பெயர் விளையாட்டு நிகழ்வு நாள்
3  வெள்ளி சைக்கோம் மீராபாய் சானு பாரம் தூக்குதல் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவு 24 சூலை 2021
3  வெள்ளி ரவி குமார் தாகியா மற்போர் ஆண்கள் 57 கிலோ எடைப் பிரிவு 5 ஆகத்து 2021
3  வெண்கலம் பி.வி. சிந்து இறகுப்பந்தாட்டம் மகளிர் ஒற்றையர் போட்டி 1 ஆகத்து 2021
3  வெண்கலம் லவ்லினா போர்கோஹெய்ன் குத்துச்சண்டை மகளிர் 69 கிலோ எடைப் பிரிவு 4 ஆகத்து 2021
3  வெண்கலம் இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி வளைதடிப் பந்தாட்டம் ஆண்கள் போட்டி 5 ஆகத்து 2021
3  தங்கம் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் ஆண்கள் 7 ஆகத்து 2021
3  வெண்கலம் பஜ்ரங் புனியா குத்துச்சண்டை ஆடவர் 67 கிலோ எடைப் பிரிவு 7 ஆகத்து 2021

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியா போட்டியாளர்கள்
  2. "Mary Kom, Manpreet Singh to be India's flag bearers for Tokyo Games opening ceremeony". www.timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 6 July 2021.
  3. "Olympic Medal Count –Tokyo Olympics 2020". Archived from the original on 2021-07-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08. பரணிடப்பட்டது 2021-07-15 at the வந்தவழி இயந்திரம்
  4. "Joint Statement from the International Olympic Committee and the Tokyo 2020 Organising Committee". Olympics. 24 March 2020. https://www.olympic.org/news/joint-statement-from-the-international-olympic-committee-and-the-tokyo-2020-organising-committee. 
  5. "12 countries qualify team places for Tokyo 2020 Olympic Games at World Championships". World Archery. 12 June 2019. https://worldarchery.org/news/170525/12-countries-qualify-team-places-tokyo-2020-olympic-games-world-championships. 
  6. "Karma qualifies Bhutan an Olympic quota place for the first time in history". World Archery. 28 November 2019. https://worldarchery.org/news/170843/bangladesh-qualifies-its-first-ever-archer-olympic-games. 
  7. Wells, Chris (8 March 2021). "DeepikaKumari to lead Indian squad at Tokyo 2020 Olympic Games". World Archery. https://worldarchery.sport/news/200050/deepika-kumari-lead-indian-squad-tokyo-2020-olympic-games. பார்த்த நாள்: 19 March 2021. 
  8. "iaaf.org – Top Lists". IAAF. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.
  9. "IAAF Games of the XXXII Olympiad – Tokyo 2020 Entry Standards" (PDF). IAAF. Archived from the original (PDF) on 8 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Race to Tokyo – BWF Olympic Qualification". Archived from the original on 3 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 28 May 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Boxing Olympic Qualification: The Key Takeaways From Amman". Olympic Channel. 12 March 2020. https://www.olympicchannel.com/en/stories/news/detail/boxing-olympic-qualification-learned-amman-review/. 
  12. "Manish Kaushik qualifies for Tokyo 2020, Indian boxing records best Olympic berth haul". இந்தியன் எக்சுபிரசு. 12 March 2020. https://indianexpress.com/article/sports/sport-others/manish-kaushik-qualifies-for-tokyo-2020-indian-boxing-records-best-olympic-berth-haul-6309417/. 
  13. Lokegaonkar, Jay (23 November 2019). "Indian equestrian FouaadMirza secures Tokyo 2020 berth". Olympic Channel. https://www.olympicchannel.com/en/stories/news/detail/india-olympics-fouaad-mirza-equestrian/. 
  14. "Tokyo 2020 team and individual quota places confirmed by FEI". FEI. 17 February 2020. https://inside.fei.org/content/tokyo-2020-team-and-individual-quota-places-confirmed-fei. 
  15. "Bhavani Devi scripts history, becomes first Indian fencer to qualify for the Olympics". Times of India. 14 March 2021. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/bhavani-devi-scripts-history-becomes-first-indian-fencer-to-qualify-for-olympics/articleshow/81496361.cms. பார்த்த நாள்: 20 March 2021. 
  16. டோக்யோ ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று வரலாற்றுப் பெருமையை மீட்டது எப்படி?
  17. டோக்யோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கியை உச்சத்துக்குக் கொண்டு சென்ற சிங்கப் பெண்கள்
  18. "Sri Lankan gymnast Milka Gehani qualifies for Tokyo". Ada Derana. 6 May 2021. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
  19. "India's super seven who gave the country its most successful Olympic campaign". Archived from the original on 2021-08-08. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-08-08. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08.

வெளி இணைப்புகள் தொகு