சிம்ரஞ்சித்து கவுர் பாத்
சிம்ரஞ்சித்து கவுர் பாத் (Simranjit Kaur Baatth) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தொழில்சாரா குத்துச்சண்டை வீராங்கனை ஆவார்.[1] இவர் 1995 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 அன்று பிறந்தார்.
தனிநபர் தகவல் | |
---|---|
முழு பெயர் | சிம்ரஞ்சித்து கவுர் பாத் |
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | 10 சூலை 1995 இந்தியா, பஞ்சாப், சாக்கர் |
உயரம் | 1.69 m (5 அடி 6+1⁄2 அங்) |
எடை | 64 kg (141 lb) |
விளையாட்டு | |
விளையாட்டு | குத்துச் சண்டை |
எடை வகுப்பு | இலகுரக பளு பிரிவு |
2011 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு அளவில் இந்தியாவிற்காக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொள்கிறார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தொழில்சாரா பன்னாட்டு குத்துச்சண்டை கூட்டமைப்பு மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்பட்டப் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். துருக்கி நாட்டின் இசுதான்புல் நகரில் நடைபெற்ற அமெட் கொமர்ட் பன்னாட்டு மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் 64 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் ஒருவராகவும் கவுர் அங்கம் வகித்துள்ளார்.[2]
2021 ஆம் ஆண்டு சப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ குத்துச்சண்டைப் போட்டியில் கவுர் பங்கேற்க உள்ளார்.[3] ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது பஞ்சாப் பெண் என்ற சிறப்பும் கவுருக்கு கிடைத்துள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா மாவட்டத்திலிருக்கும் சாக்கர் கிராமத்தில் கவுர் பிறந்தார்.[1] கமல் யீத் சிங் மற்றும் ராச்பால் கவுர் தம்பதியர் இவருடைய பெற்றோர்களாவர். தனது மூத்த உடன்பிறப்புகளும் குத்துச்சண்டைக்கு வந்தபின்னரும் கவுர் குத்துச்சண்டையைத் தொடர இவரது தாயால் ஊக்குவிக்கப்பட்டார்.[4]
தொழில்முறை சாதனைகள்
தொகு- 2011 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் நடைபெற்ற 6 ஆவது இளையோர் பெண்கள் தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[1]
- 2012 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் நகரத்தில் நடைபெற்ற 4 ஆவது இடை மண்டல மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன் பட்டப் போட்டியிலும், பட்டியாலாவில் நடைபெற்ற 8 ஆவது இளையோர் பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன் பட்டப் போட்டியிலும் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.[1]
- 2015 ஆம் ஆண்டு அசாம் மாநிலம் குவகாத்தியின் நியூ போங்கைகாவோன் நகரில் நடந்த 16 ஆவது முதியோர் பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன் பட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[1]
- 2018 ஆம் ஆண்டு துருக்கியின் இசுதான்புல் நகரத்தில் நடைபெற்ற 64 கிலோ பிரிவில் நடந்த அகமத் காமெர்ட்டு பன்னாட்டு குத்துச்சண்டை போட்டியில் கவுர் தங்கப் பதக்கம் வென்றார். மோனிகா மற்றும் பாக்யபதி கச்சாரி ஆகியோர் முறையே 48 கிலோ மற்றும் 81 கிலோவில் தங்கப்பதக்கம் வென்றனர்.[2]
- இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற மேரி கோம் தலைமையிலான 2018 தொழில்சாரா மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டப் போட்டியில் 10 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அணியில் கவுர் ஒரு பகுதியாக இருந்தார்.[5] இலகுரக பளு தூக்கும் போட்டியில் பங்கேற்ற இவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.[6]
- 2019 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் லபுவன் பாயோவில் நடைபெற்ற 23 ஆவது குடியரசுத் தலைவர் கோப்பை பன்னாட்டு குத்துச்சண்டை போட்டியில் கவுர் தங்கப்பதக்கம் வென்றார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Indian Boxing Federation Boxer Details". www.indiaboxing.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-17.
- ↑ 2.0 2.1 "Boxers Simranjit Kaur, Monika, Bhagyabati Kachari clinch three gold medals at Ahmet Comert Tournament - Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-17.
- ↑ "SIMRANJIT KAUR WINS SILVER AT THE ASIAN BOXING OLYMPIC QUALIFIERS". olympicchannel.com/. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
- ↑ "Women's World Boxing C'ship in Numbers: Simranjit Kaur" (in en-US). The Bridge. 2018-11-13. https://thebridge.in/the-womens-world-boxing-cship-in-numbers-simranjit-kaur/.
- ↑ "Mary Kom named brand ambassador of 2018 Women's World Boxing Championships". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-17.
- ↑ "Sonia To Vie For Women's World Boxing Championships Gold, Bronze For Simranjit Kaur". sports.ndtv.com. NDTV. பார்க்கப்பட்ட நாள் 23 November 2018.
- ↑ "Ludhiana girl Simranjit Kaur wins gold at international boxing tournament". Tribune India. பார்க்கப்பட்ட நாள் 29 July 2019.
புற இணைப்புகள்
தொகு- Simranjit Kaur Profile Page 209