பஜ்ரங் புனியா

பஜ்ரங் புனியா என்பவர் இந்திய நாட்டின் ஒரு மற்போர் வீரர். பிறப்பு 26 பிப்ரவரி 1994.

பஜ்ரங் புனியா
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு26 பெப்ரவரி 1994 (1994-02-26) (அகவை 26)
ஜாஜ்ஜார், ஹரியானா, இந்தியா
உயரம்5 ft 5 in (1.65 m)
எடை61 கிலோகிராம்கள் (134 lb)
விளையாட்டு
விளையாட்டுமற்போர்
நிகழ்வு(கள்)மற்போர்
பயிற்றுவித்ததுஷாகோ பெனிடிடஸ்

வாழ்க்கைதொகு

இந்தியாவில், ஹரியானா மாநிலத்தில் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள கெளடான் கிராமத்தில் புனியா பிறந்தார்.[2][3] இவர் தனது ஏழு வயதில் மற்போர் கற்கத் தொடங்கினார் மற்றும் அவரது தந்தை விளையாட்டை கற்க இவரை ஊக்கப்படுத்தினார்.[4] இந்திய விளையாட்டு ஆணையத்தின் பிராந்திய மையத்தில் சேர்ந்து கற்பதற்காக இவரது குடும்பம் சோனாபாட்டிற்கு 2015 ஆம் ஆண்டு குடிபெயர்ந்தனர். தற்போது இவர் இந்திய இரயில்வேயில் இரயில் பயணச்சீட்டு பரிசோதகர் (TTE) பதவியில் பணியாற்றுகிறார். அவரது குடும்பத்தினர் புனியாவை ஹரியானா காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் பணியில் சேர விரும்பம் தெரிவித்துள்ளன்ர்.[3]

2013 ஆசிய மற்போர் போட்டிதொகு

இந்தியாவின் புதுதில்லியில் நடைபெற்ற 60 கி எடைப்பிரிவிற்கான மற்போர் அரையிறுதிச் சுற்றில் புனியா 3-1 என்ற புள்ளிகளில் தென் கொரிய வீரர் ஹவாங் ரயாங் ஹாக்கிடம் தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.

2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்தொகு

கிளாஸ்கோவ், ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பொதுநலவாயப் போட்டியில், 61 கி எடைபிரிவில் மற்போர் போட்டியில் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்தொகு

ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட்கோஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 65 கி எடைப்பிரிவிற்கான மற்போர் இறுதிப் போட்டியில் புனியா தங்கம் வென்றார்.

2018 ஆசிய விளையாட்டுக்கள்தொகு

ஆகத்து 19 ஆம் தேதி அன்று இந்தோனேசியாவில் நடைபெற்ற 65 கி எடைப்பிரிவிற்கான மற்போர் இறுதிப் போட்டியில் புனியா, சப்பான் வீரரை வென்று தங்கம் வென்றார்.[5]

உலக மல்யுத்தப் போட்டிதொகு

2018 அக்டோபரில் அங்கேரியில் நடந்த மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் அரை இறுதியில் கியூபாவின் வால்டெல் டோபியரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப்போட்டியில் சப்பானிய வீரர் டகுடோ ஒடோகுரோவை எதிர்கொண்ட இவர் தோல்வியடைந்தார். முன்னதாக இவர் 2013 ஆம் ஆண்டில புடாபெஸ்டில் நடந்த உலக மல்யுத்தப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.[6]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஜ்ரங்_புனியா&oldid=2727470" இருந்து மீள்விக்கப்பட்டது