துத்தி சந்த்
துத்தி சந்த் (Dutee Chand; பிறப்பு: 3 பெப்ரவரி 1996) இந்திய தடகள விரைவோட்ட வீராங்கனை ஆவார். இவர் பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் தற்போதைய தேசிய சாதனையாளரும் ஆவார்.[1][2] துத்தி 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் விரைவோட்டத்தில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க தகுதிபெற்ற மூன்றாவது இந்திய பெண்ணாவார். இவர் ஆசிய விளையாட்டுகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 3 பெப்ரவரி 1996 கோபால்பூர், ஒடிசா, இந்தியா | |||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.6 m (5 அடி 3 அங்) | |||||||||||||||||||||||||||||||
எடை | 50 கிலோ | |||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | தடகள விளையாட்டு | |||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 100 மீ ஓட்டம் | |||||||||||||||||||||||||||||||
கழகம் | எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் | |||||||||||||||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 100 மீ: 11.24 (அல்மாத்தி 2016) 200 m: 23.73 (அல்மாத்தி 2016) 4X100 மீ தொடரோட்டம்: 43.42 (அல்மாத்தி 2016) | |||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
வாழ்க்கை
தொகுசந்த் 3 பிப்ரவரி 1996 அன்று சக்ரதார் சந்த் மற்றும் அகுஜி சந்த் ஆகியோருக்கு ஒடிசாவின் சாக்கா கோபால்பூர் கிராமத்தில் பிறந்தார்.[3][4] இவர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஓர் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[5][6] இவரது மூத்த சகோதரி சரஸ்வதி சந்த் மாநில அளவில் ஒட்டப்பந்தயங்களில் போட்டியிட்டார். இவரால் உந்தப்பட்ட துத்தி 2006ல் அரசு விளையாட்டு விடுதியில் சேர்ந்தார்.[6][7] 2016 ஆம் ஆண்டில், இவர் ஒடிசா மாநில அரசு நடத்தும் ஒடிசா சுரங்க நிறுவனத்தில் உதவி மேலாளராக நியமிக்கப்பட்டார்.[8]
இவர் 2019 ஆம் ஆண்டில் ஒரே பாலின உறவில் இருப்பதைப் பற்றி பேசியபோது, நங்கை, நம்பி, ஈரர், திருனர் சமூகத்தின் உறுப்பினராக வெளிப்படையாக வெளிவந்த இந்தியாவின் முதல் தடகள வீராங்கனை ஆவார்.[9][10] அந்த ஆண்டின் பிற்பகுதியில், விளையாட்டு ஆடை பிராண்டான பூமா தயாரிப்புகளை அங்கீகரிக்க இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[11]
தடகளப் போட்டிகள்
தொகு2012 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் சந்த் தேசிய சாம்பியன் ஆனார்.[12] 2013 இல், புனேவில் நடந்த 2013 ஆசிய தடகள விளையாட்டுகளில் பெண்களுக்கான 200 மீட்டர் போட்டியில் சந்த் வெண்கலம் வென்றார். 2013 உலக இளைஞர் சாம்பியன் போட்டியில் இறுதிப் போட்டியை எட்டியபோது, உலகளாவிய தடகள 100 மீட்டர் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.[13]
2014 இல் ஆசிய இளையோருக்கான தடகள சாம்பியன் போட்டிகளில் 200 மீட்டர் மற்றும் 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இந்திய தடகள கூட்டமைப்பு கூறியதை அடுத்து, 2014 பொதுநலவாய விளையாட்டு குழுவிலிருந்து சந்த் நீக்கப்பட்டார். இவரின் சுரப்பிகளின் சமநிலையின்மை காரணமாக ஒரு பெண் தடகள வீராங்கனையாக போட்டியிட தகுதியற்றவராக ஆக்கியது.[14][15] தொடர்ந்து 2014 ஆசிய விளையாட்டு இந்தியக் குழுவிலிருந்தும் இவர் நீக்கப்பட்டார். மேலும் சந்த் ஏமாற்றுதல் அல்லது ஊக்கமருந்து ஆகியவற்றில் ஈடுபட்டதாக எந்த ஆதாரமும் இல்லாததால் இந்த முடிவு பரவலாக விமர்சிக்கப்பட்டது.[16][17]
"அவர்கள் கடைசி நிமிடத்தில் அவளைச் சோதித்து, அவமானப்படுத்தி, இதயத்தை உடைத்துவிட்டார்கள். அவளைப் பற்றி எல்லாவிதமான விஷயங்களும் எழுதப்பட்டுள்ளன. இப்போது, அவர் மீண்டும் விளையாட்டுத் துறையில் நுழைந்தால், விஷயங்கள் சாதாரணமாக இருக்காது. அவர் அவர் சிகிச்சை எடுத்தாலும், மக்கள் அவரை சந்தேகப் பார்வையால் கொன்றுவிடுவார்கள். இந்த விசயங்கள் பகிரங்கமாகிவிட்டன, அது தவறு. அது அவர்களின் மகளாக இருந்தால் அவர்கள் அதைச் செய்திருப்பார்களா?அவளுடைய எதிர்காலத்திற்கு யார் பொறுப்பு?."[18]
— சந்த் பற்றி சாந்தி சௌந்திரராஜன்
சந்த் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்தார். கனடா நாட்டை சேர்ந்த சட்ட நிறுவனம் டேவிசு, வார்டு, பிலிப்சு பொது நல அடிப்படையில் இந்த வழக்கை நடத்தினர். பெண்களில் அதிக இயற்கையான அளவு டெஸ்டோஸ்டிரோன் பற்றிய கொள்கையை இடைநிறுத்தப்பட்டம் செய்ய உலக தடகள கூட்டமைப்பிறகு ஆணையிட்டது.[19][20][21][22] இது போட்டியிலிருந்து சந்தின் இடைநீக்கத்தை நீக்கி, இவரை மீண்டும் பந்தயத்தில் பங்கேற்கச் செய்தது.[23]
இதன் பிறகு 2016 இல் தேசிய விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் சந்த் 11.33 வினாடிகளில் ஓடி தங்கம் வென்றார் மற்றும் 16 ஆண்டு கால முந்தைய தேசிய சாதனையை மிஞ்சினார்.[1][24] 25 ஜூன் 2016 அன்று, கசகஸ்தானின் அலமாட்டி இல் நடந்த போட்டிகளில், இவர் ஒரே நாளில் இரண்டு முறை அதே தேசிய சாதனையை முறியடித்தார், இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார்.[25] துத்தி 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் விரைவோட்டத்தில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[26] இவர் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க தகுதிபெற்ற மூன்றாவது இந்திய பெண்ணாவார்.[7]
2017 இல், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில், இவர் 100 மீட்டர் மற்றும் 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.[27] 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியில், சந்த் வெள்ளிப் பதக்கத்தை வென்றார், இது இவரது முதல் ஆசிய விளையாட்டுப் பதக்கமாகும்.[28] மீண்டும் ஆகஸ்ட் 29 அன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 200 மீட்டர் இறுதிப் போட்டியில் தனது இரண்டாவது வெள்ளியைப் பெற்றார். 32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கத்தை வென்றது.[29][30] 2021 இல் சந்த் தாமதமான டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் பங்கேற்றார்.[31] 18 ஜனவரி 2023 அன்று, சந்த் மூன்று வெவ்வேறு தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பொருட்களை பயன்படுத்தியதாக அறிவிக்கப்பட்டது.[32]
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Anirudha, Dutee emerge fastest; Jyothi settles for silver medal". Deccan Herald. 8 September 2013. http://www.deccanherald.com/content/356099/anirudha-dutee-emerge-fastest-jyothi.html.
- ↑ Rayan, Stan (11 October 2019). "Dutee Chand breaks national record, wins gold at National Championships". Sportstar. https://sportstar.thehindu.com/athletics/dutee-chand-breaks-national-record-100m-wins-gold-medal-national-open-athletics-championships-ranchi/article29659344.ece.
- ↑ "Dutee Chand biography". Orissasports. பார்க்கப்பட்ட நாள் 9 September 2013.
- ↑ "Dutee to lead India in Asian Youth Games". The Times of India. 31 July 2013 இம் மூலத்தில் இருந்து 4 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004214144/http://articles.timesofindia.indiatimes.com/2013-07-31/others/40913526_1_youth-olympic-games-dutee-chand-mohan-kumar.
- ↑ "Sprinter Dutee Chand set to realise Olympic dream". The Times of India. 30 July 2016 இம் மூலத்தில் இருந்து 17 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160817054920/http://timesofindia.indiatimes.com/sports/rio-2016-olympics/india-in-olympics-2016/athletics/Sprinter-Dutee-Chand-set-to-realise-Olympic-dream/articleshow/53461278.cms.
- ↑ 6.0 6.1 Das, Tanmay (25 June 2016). "Undeterred Dutee Chand sticks to her track, makes it to Rio Olympics in 100 meters category". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 29 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160829025647/http://www.newindianexpress.com/sport/Undeterred-Dutee-Chand-sticks-to-her-track-makes-it-to-Rio-Olympics-in-100-meters-category/2016/06/25/article3499746.ece.
- ↑ 7.0 7.1 Bisoyi, Sujit Kumar (30 July 2016). "Dutee Chand: Sprinter Dutee Chand set to realise Olympic dream". The Times of India இம் மூலத்தில் இருந்து 27 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210227040035/https://timesofindia.indiatimes.com/sports/rio-2016-olympics/india-in-olympics-2016/athletics/sprinter-dutee-chand-set-to-realise-olympic-dream/articleshow/53461278.cms.
- ↑ "Odisha govt gives appointment to sprinters Dutee Chand, Srabani Nanda". OTV News. 2016-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
- ↑ "Dutee Chand becomes first openly gay Indian athlete" (in en-GB). BBC News. 2019-05-19 இம் மூலத்தில் இருந்து 22 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190522195250/https://www.bbc.com/news/world-asia-india-48327918.
- ↑ "Dutee Chand becomes first openly gay Indian athlete". BBC News. 19 May 2019 இம் மூலத்தில் இருந்து 22 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190522195250/https://www.bbc.com/news/world-asia-india-48327918.
- ↑ "Sprinter Dutee Chand signs two-year deal with Puma". Business Today. 9 August 2019. Archived from the original on 10 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
- ↑ "Dutee Chand breaks 100m record". The Hindu. 14 July 2012 இம் மூலத்தில் இருந்து 17 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130917045329/http://www.thehindu.com/sport/athletics/dutee-chand-breaks-100m-record/article3636513.ece.
- ↑ "Dutee Chand is the first Indian sprinter in World 100m final". drinksbreak இம் மூலத்தில் இருந்து 4 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004213828/http://www.drinksbreak.com/index.php/other-sports/athletics/252-iaaf-world-youth-championships/1315-dutee-chand-is-the-first-indian-sprinter-in-world-100m-final.
- ↑ Slater, Matt (28 July 2015). "Sport & gender: A history of bad science & 'biological racism'". BBC Sport இம் மூலத்தில் இருந்து 21 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150721174449/http://www.bbc.co.uk/sport/0/athletics/29446276.
- ↑ "Caster Semenya expected to be affected by IAAF rule changes". BBC Sport இம் மூலத்தில் இருந்து 23 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190623005419/https://www.bbc.co.uk/sport/athletics/43890575.
- ↑ "Commonwealth Games sprinter's disqualification shows Australian athletes could face 'gender testing'". Star Observer. August 2014. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
- ↑ "Gender struggles for women to find equality in sport". 6th IWG World Conference on Women and Sport. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
- ↑ Shreedutta Chidananda (19 July 2014). "Dutee Chand finds support in Santhi". The Hindu இம் மூலத்தில் இருந்து 18 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160118185254/http://www.thehindu.com/sport/other-sports/dutee-chand-finds-support-in-santhi/article6226836.ece.
- ↑ "CAS 2014/A/3759 Dutee Chand v. Athletics Federation of India (AFI) & The International Association of Athletics Federations (IAAF)" (PDF). Court of Arbitration for Sport. July 2015. Archived from the original (PDF) on 4 July 2017. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
- ↑ Branch, John (27 July 2016). "Dutee Chand, Female Sprinter With High Testosterone Level, Wins Right to Compete". The New York Times இம் மூலத்தில் இருந்து 14 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160814221355/http://www.nytimes.com/2015/07/28/sports/international/dutee-chand-female-sprinter-with-high-male-hormone-level-wins-right-to-compete.html. "The Court of Arbitration for Sport, based in Switzerland, questioned the athletic advantage of naturally high levels of testosterone in women and therefore immediately suspended the practice of 'hyperandrogenism regulation' by track and field's governing body, the International Association of Athletics Federations. It gave the organization, known as the I.A.A.F., two years to provide more persuasive scientific evidence linking 'enhanced testosterone levels and improved athletic performance'."
- ↑ "Government explores CAS option in Dutee case". The Times of India. 19 August 2014 இம் மூலத்தில் இருந்து 22 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140822001929/http://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/Government-explores-CAS-option-in-Dutee-case/articleshow/40388561.cms.
- ↑ Branch, John (27 July 2015). "Dutee Chand, Female Sprinter With High Testosterone Level, Wins Right to Compete". The New York Times. The New York Times இம் மூலத்தில் இருந்து 30 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150730181527/http://www.nytimes.com/2015/07/28/sports/international/dutee-chand-female-sprinter-with-high-male-hormone-level-wins-right-to-compete.html?_r=0.
- ↑ "Dutee Chand cleared to race as IAAF suspends 'gender test' rules". BBC News. 27 July 2015 இம் மூலத்தில் இருந்து 28 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150728211548/http://www.bbc.com/sport/0/athletics/33683779.
- ↑ "National Open Athletics: Golden double for Dutee, Surya". The Times of India. 11 September 2013 இம் மூலத்தில் இருந்து 4 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004213548/http://articles.timesofindia.indiatimes.com/2013-09-11/athletics/41969409_1_national-open-athletics-championships-services-men-services-team.
- ↑ "Indian sprinter Dutee Chand defies the odds to make Rio 100m". Reuters. 25 June 2016 இம் மூலத்தில் இருந்து 26 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180826215948/https://in.reuters.com/article/olympics-rio-athletics-india/indian-sprinter-dutee-chand-defies-the-odds-to-make-rio-100m-idINKCN0ZB0BP.
- ↑ "Dutee Chand from India Qualifies for Women's 100m". 26 June 2016 இம் மூலத்தில் இருந்து 22 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160822032425/http://rio2016olympicswiki.com/dutee-chand-from-india-qualifies-for-womens-100m/2073/.
- ↑ "Dutee, Srabani sprint to relay bronze | Orissa Post". www.orissapost.com. 8 July 2017. பார்க்கப்பட்ட நாள் 14 July 2017.
- ↑ "Asian Games 2018: India's Dutee Chand wins silver in Women's 100m Final event". 26 August 2018. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
- ↑ "Asian Games 2018: Dutee Chand wins silver in women's 200m, her second medal from the Asiad". 29 August 2018. பார்க்கப்பட்ட நாள் 30 August 2018.
- ↑ "Asian Games: Dutee Chand bags second medal, wins 200m silver". The Times of India. 29 August 2018. https://timesofindia.indiatimes.com/sports/asian-games/asian-games-dutee-chand-bags-second-medal-wins-200m-silver/articleshow/65594818.cms.
- ↑ "Tokyo Olympics 2020: Dutee Chand finishes last in heat, fails to qualify for 200m semifinals". The Times of India. 2 August 2021. https://timesofindia.indiatimes.com/sports/tokyo-olympics/india-in-tokyo/tokyo-olympics-2020-dutee-chand-finishes-last-in-heat-fails-to-qualify-for-200m-semifinals/articleshow/84963377.cms?from=mdr.
- ↑ "Dutee Chand tests positive for prohibited substances". The Times of India. 18 January 2023. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/dutee-chand-tests-positive-for-prohibited-substances/articleshow/97086771.cms.