அன்னு ராணி
அன்னு ராணி (Annu Rani) (பிறப்பு: 1992 ஆகத்து 28) உத்தரப் பிரதேசத்தின் பகதூர்பூரைச் சேர்ந்த ஓர் ஈட்டி எறிபவராவார். ஈட்டி எறிதலில் இந்திய தேசிய சாதனை படைத்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் 64.23 மீட்டர் தூக்கி எறிந்து புதிய தேசிய சாதனையை படைத்தார். 60 மீட்டருக்கு அப்பால் வீசி உலக தடகளப் போட்டியின் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்திய பெண் ஈட்டி எறியும் வீரர் ஆனார் .
புவனேசுவரில் 22 வது ஆசிய தடகள போட்டியின் போது ராணி | |||||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியா | ||||||||||||||||||||||||||||
பிறப்பு | 28 ஆகத்து 1992 மீரட், உத்தர பிரதேசம் | ||||||||||||||||||||||||||||
உயரம் | 1.65 m (5 அடி 5 அங்) | ||||||||||||||||||||||||||||
எடை | 63 kg (139 lb) (2014) | ||||||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | ||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | ஈட்டி எறிதல் | ||||||||||||||||||||||||||||
அணி | இந்தியா | ||||||||||||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | |||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 64.23 மீட்டர் (2021) பட்டியல் | ||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
சொந்த வாழ்க்கையும் பின்னணியும்
தொகுராணி 1992 ஆகஸ்ட் 28 அன்று உத்தரபிரதேசத்தின் பகதூர்பூர் கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். துடுப்பாட்ட விளையாட்டின் போது இவரது உடல் வலிமையைக் கவனித்த இவரது சகோதரர் இவரை அடையாளம் கண்டார். வெற்று வயலில் கரும்பு குச்சிகளை வீசுமாறு கேட்டு அவர் இவருக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். அன்னுவின் முதல் ஈட்டியாக ஒரு மூங்கில் இருந்தது. இவரது சகோதரர் பின்னர் இவரது பயிற்சிக்கு உதவினார் . இவரது தந்தை இவரை விளையாட்டில் ஊக்குவிக்க மறுத்துவிட்ட போது 2014 ஆம் ஆண்டில் தேசிய சாதனையை முறியடித்தன் மூலம் தன்னை நிரூபித்தார். பின்னர் இவரது தந்தை இவரை ஆதரித்தார்.[1][2]
தொழில்முறை சாதனைகள்
தொகுஅன்னு ராணி ஆரம்பத்தில் காசிநாத் நாயக் என்பவரால் பயிற்றுவிக்கப்பட்டார். இப்போது பல்ஜீத் சிங் பயிற்சியாளராக உள்ளார்.[3]
இலக்னோவில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மாநிலங்களுக்கு இடையிலான போட்டிகளில், ராணி 58.83 மீட்டர் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார் - இதன்மூலம் 14 வயது தேசிய சாதனையை முறியடித்தார். இது பொதுநலவாய விளையாட்டுக்குத் தகுதி பெற்றார். 58.46 மீட்டர் வீசுதலுடன், இவர் 2014 பொதுநலவாய விளையாட்டுக்கு தகுதி பெற்றார். இந்த ஆண்டின் பிற்பகுதியில், தென் கொரியாவின் இஞ்சியோனில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 59.53 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டிகளில் 60.01 மீட்டர் தூக்கி எறிந்து தனது சொந்த சாதனையை மீண்டும் முறியடித்து 60 மீட்டர் தடையை முதன்முறையாக தாண்டினார்.[4] மார்ச் 2019 இல், பஞ்சாபின் பாட்டியாலாவில் நடந்த கூட்டமைப்பு கோப்பை தேசிய மூத்தோர் தடகளப் போட்டிகளில் 62.34 மீட்டர் தூக்கி எறிந்து தனது சொந்த சாதனையை மீண்டும் முறியடித்தார்.[5]
2014 ஆம் ஆண்டில், இஞ்சியோனில் நடந்த 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 59.53 மீட்டர் எறிதலுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.[6]
2017 ஆசிய தடகள போட்டியில் ஒடிசாவின் புவனேசுவரில் 57.32 மீட்டர் எறிதலுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.[7]
ஏப்ரல் 21, 2019 அன்று கத்தார் நகரில் நடைபெற்ற 23 ஆவது ஆசிய தடகள போட்டியில் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றது உலக தடகள போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற உதவியது. இதனால் உலக தடகள போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் ஈட்டி எறிபவர் என்ற பெருமையைப் பெற்றார்.[8] செக் குடியரசின் ஆஸ்ட்ராவாவில் நடைபெற்ற ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தடகள சந்திப்பு எனப்படும் தடகள விளையாட்டுக் கூட்டமைப்பின்நிகழ்வில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[9]
2020 ஆம் ஆண்டில் தடகளத்தில் ஸ்போர்ட்ஸ்டார் ஏசஸ் விளையாட்டு வீரருக்கான விருதை வென்றார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Annu Rani's Quest For Gold – Impact Guru". impactguru.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
- ↑ nikhil (27 June 2017). "Annu Rani – The Torchbearer for Indian Women in Athletics Javelin Throw". Voice of Indian Sports – KreedOn (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
- ↑ Srivastava, Shantanu (13 May 2020). "Annu Rani confident of breaching Olympic qualification mark, calls for resumption of outdoor training". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.
- ↑ "Annu Rani – The Torchbearer for Indian Women in Athletics Javelin Throw". Voice of Indian Sports – KreedOn (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 27 June 2017. பார்க்கப்பட்ட நாள் 19 February 2021.
- ↑ "Fed Cup athletics: Annu Rani rewrites her own Javelin Throw national record, qualifies for Worlds". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 11 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Asiad: Annu Rani wins women's javelin bronze". Inshorts – Stay Informed (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
- ↑ "My Body Was Not In Form Says Javelin Thrower Annu Rani" (in en). Deccan Chronicle. 7 July 2017 இம் மூலத்தில் இருந்து 9 ஜூலை 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170709131946/http://www.deccanchronicle.com/videos/my-body-was-not-in-form-says-javelin-thrower-annu-rani.html.
- ↑ Rayan, Stan. "Annu Rani wins Sportstar Aces 2020 Sportswoman of the Year in athletics". The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.
- ↑ Sportstar, Team. "Javelin: Bronze for Annu Rani at IAAF event". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
- ↑ Rayan, Stan. "Annu Rani wins Sportstar Aces 2020 Sportswoman of the Year in athletics". The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் அன்னு ராணி-இன் குறிப்புப் பக்கம்