சிவ்பால் சிங்

இந்தியத் தடகள வீரர்

சிவ்பால் சிங் (Shivpal Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஈட்டி எறியும் விளையாட்டு வீரராவார். 1995 ஆம் ஆண்டு சூலை மாதம் ஆறாம் நாள் இவர் பிறந்தார். டோக்கியோவில் நடைபெற உள்ள 2020 ஆம் ஆண்டுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிக்கு சிவ்பால் சிங் தகுதி பெற்றுள்ளார். .

சிவ்பால் சிங்
Shivpal Singh
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு6 சூலை 1995 (1995-07-06) (அகவை 29)
வாரணாசி, உத்தரப் பிரதேசம்
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)ஈட்டி எறிதல் (விளையாட்டு)
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் ஈட்டி எறிதல் (விளையாட்டு)
நாடு  இந்தியா
ஆசியத் தடகளப் போட்டி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2019 தோகா ஈட்டி எறிதல்
இராணுவ உலக விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 ஊகான் ஈட்டி எறிதல்

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எட்டாவது இடத்தைப் பிடித்த சிவ்பால் சிங் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய வெற்றியாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். [1]

இவரது தனிப்பட்ட சிறந்த வீசுதல் 86.23 மீட்டர் ஆகும். 2019 ஆம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய வெற்றியாளர் போட்டியில் இச்சாதனையை இவர் செய்தார். [1]

2016 ஆம் ஆண்டு அங்கேரியில் நடந்த புடாபெசுட்டு திறந்தநிலை தடகளப் போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் சிவ்பால் சிங் வென்றார். முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தனது 3 வாய்ப்புகளில் ஒரு வீசுதலை மட்டுமே இவரால் நிர்வகிக்க முடிந்ததால், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் எட்டாவது இடத்தைப் பிடித்தார். 2015 ஆம் ஆண்டில், சிவ்பால் இளையோர் உலக வெற்றியாளர் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் காயம் காரணமாக விளையாட முடியாமல் அணியில் இருந்து வெளியேறினார். தேசிய வெற்றியாளர் நிலையிலிருந்து பெரிய அளவிலான போட்டிக்கானப் பயணம் உத்தரபிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த இந்த இளைஞருக்கு மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் சிவ்பால் சிங்-இன் குறிப்புப் பக்கம்

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ்பால்_சிங்&oldid=3190847" இலிருந்து மீள்விக்கப்பட்டது