2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
2024 கோடை ஒலிம்பிக்குப் போட்டிகள் (2024 Summer Olympics, பிரெஞ்சு மொழி: Jeux olympiques d'été de 2024), அதிகாரபூர்வமாக XXXIII ஒலிம்பியாதுப் போட்டிகள் (Games of the XXXIII Olympiad), பொதுவாக பாரிசு 2024 (Paris 2024), என்பது பிரான்சில் 2024 சூலை 26 முதல் ஆகத்து 11 வரை நடைபெற்ற பன்னாட்டுப் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பிரான்சின் தலைநகர் பாரிசு இப்போட்டிகளை நடத்திய நகரமாகும். இத்துடன் பிரான்சின் 16 ஏனைய நகரங்களிலும், பிரெஞ்சு பொலினீசியாவின் தாகித்தி தீவிலும் போட்டிகள் நடைபெற்றன.[5]
2024 கோடை ஒலிம்பிக்சு சின்னம் | |
நடத்தும் நகரம் | பாரிசு, பிரான்சு |
---|---|
குறிக்கோள் | விளையாட்டுகளைப் பரவலாகத் திறப்போம் (பிரெஞ்சு மொழி: Ouvrons grand les Jeux)[1][2] |
வீரர்கள் | 10,500 (ஒதுக்கீடு வரம்பு)[3] |
நிகழ்ச்சிகள் | 329 (32 வகை விளையாட்டுகள்) |
துவக்கம் | 26 சூலை 2024 |
நிறைவு | 11 ஆகத்து 2024 |
அரங்கு | துரொக்கதேரோ, செய்ன் ஆறு (திறப்பு விழா) பிரான்சு விளையாட்டரங்கு (நிறைவு விழா)[4] |
கோடைக்காலம் குளிர்காலம்
2024 Summer Paralympics |
2017 செப்டம்பர் 13 அன்று பெரு, லிமா நகரில் நடந்த 131-ஆவது பன்னாட்டு ஒலிம்பிக் குழு (ஐஓசி) அமர்வில் பாரிசுக்கு விளையாட்டுப் போட்டிகள் வழங்கப்பட்டது. பாரிசு, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்கள் மட்டும் போட்டியிட்ட பிறகு, ஐஓசி 2024, 2028 ஆகிய போட்டிகளை ஒரே நேரத்தில் வழங்குவதற்கான செயல்முறைக்கு ஒப்புதல் அளித்தது. முன்பு 1900, 1924 போட்டிகள் நடத்தப்பட்டதால், இலண்டனுக்குப் பிறகு (1908, 1948, 2012) கோடைகால ஒலிம்பிக்கை மூன்று முறை நடத்தும் இரண்டாவது நகரமாக பாரிசு மாறும். பாரிசு 2024, பாரிசின் நூற்றாண்டு விழாவையும் குறிக்கும், அத்துடன் இந்த ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சால் நடத்தப்படும் ஆறாவது (கோடையில் மூன்று, குளிர்காலத்தில் மூன்று) ஆகும். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தோக்கியோவில் 2020 கோடைகாலப் போட்டிகள் 2021-இற்கு ஒத்திவைக்கப்பட்ட பிறகு, கோடைக்கால விளையாட்டுகள் அதன் பாரம்பரிய நான்கு ஆண்டு ஒலிம்பியாடு சுழற்சிக்குத் திரும்பும்.
பாரிசு 2024 இல் முறிப்பு நடனம் அறிமுகமானது.[6] ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமசு பாக் தலைமையில் நடைபெறும் இறுதி ஒலிம்பிக் போட்டிகளாக இருந்தது.[7] ஒரே எண்ணிக்கையிலான ஆண்களும் பெண்களும் பங்கேற்கும் முதலாவது விளையாட்டுப் போட்டியாக இது அமைந்தது. விளையாட்டுகளுக்கு 8.3 பில்லியன் யூரோக்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.[8]
ஏற்று நடத்த ஏலம்
தொகுசர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் 2015 செப்டம்பர் 16இல் போட்டியிடும் ஐந்து நகரங்களின் பட்டியலை அறிவித்தது, இதில் ஹம்பர்க் நகரம் 2015 நவம்பரில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.[9]
ஐரோப்பா
தொகுநகரம் | நாடு | தேசிய ஒலிம்பிக் குழு | குழுவின் இணையதளம் | விண்ணப்பத்தின் நிலைமை |
---|---|---|---|---|
புடாபெஸ்ட் | அங்கேரி | அங்கேரிய ஒலிம்பிக் குழு (அஒகு) | budapest2024.org | Cancelled Bids |
புடாபெஸ்ட் 1916, 1920, 1936, 1944, 1960 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தும் தோற்றுப் போனது.[10] சூலை 2015 இல் அங்கேரிய நாடாளுமன்றம் 2024 போட்டிகளை நடத்துவதற்கு ஆதரவாகத் தீர்மானித்தது. 2016 சனவரி 28 இல் புடாபெஸ்ட் நகரசபை அரங்குகளுக்கு ஒப்புதல் அளித்தது. | ||||
பாரிசு | பிரான்சு | பிரான்சு தேசிய ஒலிம்பிக் குழு | paris2024.org | Chosen by CNOSF |
பாரிசு நகரம் 1900, 1924 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. அத்துடன் 1992, 2008, 2012 போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பித்து தோற்றிருந்தது.[11][12][13] | ||||
உரோம் | இத்தாலி | இத்தாலிய தேசிய ஒலிம்பிக் குழு | 2024roma.org பரணிடப்பட்டது 2016-05-21 at the வந்தவழி இயந்திரம் | Cancelled Bids |
உரோம் நகர் 1960 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. 2004 போட்டிகளை நடத்த விண்ணப்பித்து ஏதென்ஸ் நகரிடம் தோற்றது.[14][15] |
வட அமெரிக்கா
தொகுநகரம் | நாடு | தேசிய ஒலிம்பிக் குழு | குழுவின் இணையதளம் | விண்ணப்பத்தின் நிலைமை |
---|---|---|---|---|
லாஸ் ஏஞ்சலஸ் |
அமெரிக்கா | United States Olympic Committee | la24.org | Chosen by USOC |
தேர்வு செய்யப்படாத போட்டியாளர்கள்
தொகுஐரோப்பா
தொகுCity | Country | National Olympic Committee | Bid Committee Website | Application Status |
---|---|---|---|---|
பெர்லின் | செருமனி | Deutscher Olympischer Sportbund | Cancelled Bids | |
பெர்லின் நகரில் 1936ம் ஆண்டு கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன, பின்னர் 2024ஆம் ஆண்டிற்கான போட்டியில் இருந்து விலகி ஹம்பர்க் நகரை செருமானிய ஒலிம்பிக் சம்மேளனம் போட்டிக்கான தேர்வு செய்தது.[17] | ||||
ஹம்பர்க் | செருமனி | Deutscher Olympischer Sportbund | hamburg2024.de | Cancelled Bids |
பங்கேற்கும் நாடுகள்
தொகுதேசிய ஒலிம்பிக் குழு விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை (26 சூலை 2024)
பதக்கப் பட்டியல்
தொகு* நடத்தும் நாடு (பிரான்சு)
நிலை | தேசிய ஒலிம்பிக் குழு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா (USA) | 40 | 44 | 42 | 126 |
2 | சீனா (CHN) | 40 | 27 | 24 | 91 |
3 | சப்பான் (JPN) | 20 | 12 | 13 | 45 |
4 | ஆத்திரேலியா (AUS) | 18 | 19 | 16 | 53 |
5 | பிரான்சு (FRA)* | 16 | 26 | 22 | 64 |
6 | நெதர்லாந்து (NED) | 15 | 7 | 12 | 34 |
7 | ஐக்கிய இராச்சியம் (GBR) | 14 | 22 | 29 | 65 |
8 | தென் கொரியா (KOR) | 13 | 9 | 10 | 32 |
9 | இத்தாலி (ITA) | 12 | 13 | 15 | 40 |
10 | செருமனி (GER) | 12 | 13 | 8 | 33 |
11–91 | மற்ற நாடுகள் | 129 | 138 | 194 | 461 |
மொத்தம் (91 தேசிய ஒலிம்பிக் குழுக்கள்) | 329 | 330 | 385 | 1044 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "New Paris 2024 slogan "Games wide open" welcomed by IOC President" (in ஆங்கிலம்). International Paralympic Committee. 25 July 2022. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 25 July 2022.
- ↑ "Le nouveau slogan de Paris 2024 "Ouvrons grand les Jeux" accueilli favorablement par le président du CIO" [Paris 2024's new slogan "Let's open up the Games" welcomed by the IOC President] (in பிரெஞ்சு). International Paralympic Committee. 25 July 2022. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 25 July 2022.
- ↑ Iveson, Ali (10 August 2021). "ICC forms Olympic Working Group to prepare bid for Los Angeles 2028 inclusion". Inside the Games. Archived from the original on 10 August 2021. பார்க்கப்பட்ட நாள் 12 August 2021.
- ↑ "Stade de France". Archived from the original on 18 February 2023. பார்க்கப்பட்ட நாள் 6 August 2022.
- ↑ Butler, Nick (7 February 2018). "Paris 2024 to start week earlier than planned after IOC approve date change". Inside the Games. Archived from the original on 9 November 2020. பார்க்கப்பட்ட நாள் 7 February 2018.
- ↑ Keicha, Meshack (19 December 2020). "Kenya To Send Break Dancers To Paris For 2024 Olympic Games". Boxscore (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 1 April 2023. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
- ↑ Dunbarap, Graham (10 March 2021). "Thomas Bach re-elected as IOC president until 2025". Associated Press (in ஆங்கிலம்). Archived from the original on 29 July 2022. பார்க்கப்பட்ட நாள் 29 July 2022.
- ↑ Nussbaum, Ania (26 July 2022). "Macron's $8.5 Billion Olympics Is Already Facing Soaring Costs". Bloomberg (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.
- ↑ "Five world-class cities in strong competition for Olympic Games 2024 – IOC to contribute USD 1.7 billion to the local organising committee" (Press release).
- ↑ Tenczer Gábor (23 June 2015). "A főváros szavazott: kell az olimpia" (in Hungarian). Index. பார்க்கப்பட்ட நாள் 23 June 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Qui sera élue capitale européenne de la culture ?", Le Figaro. (பிரெஞ்சு)
- ↑ "Voeux du CNOSF – Pas de candidature française aux JO avant 2024".
- ↑ "Laporte promet 35 millions d'Euros en attendant les Jo 2024" (பிரெஞ்சு)
- ↑ "Letta rompe gli indugi: 'Roma può candidarsi alle Olimpiadi 2024'". La Gazzetta dello Sport (in இத்தாலியன்). 8 September 2013. பார்க்கப்பட்ட நாள் 15 June 2014.
- ↑ "Olimpiadi, la capitale ci riprova Bonino: 'Possibile candidatura per il 2024'". la Repubblica (in இத்தாலியன்). 10 January 2014. பார்க்கப்பட்ட நாள் 15 June 2014.
{{cite web}}
: Unknown parameter|trans_title=
ignored (help) - ↑ Los Angeles 2024 exploratory committee website
- ↑ "Hamburg soll Olympia nach Deutschland holen".
- ↑ Grohmann, Karolos (2023-12-08). "Russians, Belarusians to participate at Paris Olympics as neutrals – IOC". Reuters. Archived from the original on 8 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2 August 2024.
- ↑ Wilson, Jeremy (11 April 2024). "Is Russia at the Olympics and what is 'AIN'?". The Telegraph. Archived from the original on 30 July 2024. பார்க்கப்பட்ட நாள் 2 August 2024.
- ↑ "Individual Neutral Athletes at the Olmypic Games Paris 2024". International Olympic Committee. Archived from the original on 28 July 2024. பார்க்கப்பட்ட நாள் 2 August 2024.