1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த எட்டாவது ஒலிம்பிக் போட்டி

1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1924 Summer Olympics, பிரெஞ்சு மொழி: Les Jeux olympiques d'été de 1924), அலுவல்முறையாக எட்டாம் ஒலிம்பியாடு போட்டிகள், பிரான்சு நாட்டில் பாரிஸ் நகரில் 1924இல் நடத்தப்பட்ட பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். 1900 ஆண்டிற்குப் பின்னர் பாரிசு இரண்டாம் முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது. 1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடத்துவதற்கு ஆறு ஆட்டக்கேள்விகள் வந்தன; ஆம்ஸ்டர்டம், பார்செலோனா, லாஸ் ஏஞ்சலஸ், பிராகா, உரோம் நகரங்களுக்கு எதிராக பாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1921இல் லோசானில் நடந்த 20வது ப.ஒ.கு அமர்வில் இத்தேர்வு நடந்தது.[1]

எட்டாம் ஒலிம்பியாடு நடத்தியதற்கான செலவு 10,000,000 பிரெஞ்சு பிராங்க் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் 60,000 பார்வையாளர்கள் வந்திருந்த போதிலும் 5,496,610 பிரெஞ்சு பிராங்க் வருமானமே இருந்ததால் இந்த ஒலிம்பிக் பெரும் நட்டமாக முடிந்தது. .[2]

பங்கேற்ற நாடுகள்

தொகு

பாரிசு ஒலிம்பிக்கில் மொத்தம் 44 நாடுகள் பங்கேற்றன. எக்குவடோர், எயிட்டி, அயர்லாந்து, லாத்வியா, லிதுவேனியா, பிலிப்பீன்சு, போலந்து, உருகுவை முதன்முதலாக பங்கேற்றன.

  • சீனாவும் துவக்க விழாவில் கலந்து கொண்டது; ஆனால் அதன் நான்கு போட்டியாளர்களும் (அனைவரும் டென்னிசு விளையாட்டாளர்கள்) போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர்.[4]

பதக்க எண்ணிக்கை

தொகு

1924 ஒலிம்பிக்கில் மிகுந்த பதக்கங்கள் பெற்ற முதல் பத்து நாடுகளாவன:

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 45 27 27 99
2   பின்லாந்து 14 13 10 37
3   பிரான்சு (நடத்தும் நாடு) 13 15 10 38
4   ஐக்கிய இராச்சியம் 9 13 12 34
5   இத்தாலி 8 3 5 16
6   சுவிட்சர்லாந்து 7 8 10 25
7   நோர்வே 5 2 3 10
8   சுவீடன் 4 13 12 29
9   நெதர்லாந்து 4 1 5 10
10   பெல்ஜியம் 3 7 3 13
  • பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நிறுவனரும் தற்கால ஒலிம்பிக் இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படுபவருமான பியர் தெ குபர்த்தென் தானாகவே 21 தங்கப் பதக்கங்களை 1922 பிரித்தானிய எவரெஸ்ட் சிகரமேறும் அணியின் உறுப்பினர்களுக்கு வழங்கினார்; இதில் 12 பிரித்தானியர்கள், 7 இந்தியர்கள், ஒரு ஆத்திரேலியர், ஒரு நேபாளி இருந்தனர்.[5][6]

மேற்சான்றுகள்

தொகு
  1. "Past Olympic host city election results". GamesBids. Archived from the original on 2011-03-17. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச்சு 2011.
  2. Zarnowski, C. Frank (Summer 1992). "A Look at Olympic Costs". Citius, Altius, Fortius 1 (1): 16–32. http://www.la84foundation.org/SportsLibrary/JOH/JOHv1n1/JOHv1n1f.pdf. பார்த்த நாள்: 24 மார்ச்சு 2007. 
  3. Guttmann, Allen. (1992). The Olympics: A History of the Modern Games, p. 38.
  4. (ed.) M. Avé, Comité Olympique Français. Les Jeux de la VIIIe Olympiade Paris 1924 – Rapport Officiel (PDF) (in French). Paris: Librairie de France. Archived from the original (PDF) on 5 May 2011. பார்க்கப்பட்ட நாள் 16 October 2012. 39 seulement s'alignérent, ne représentant plus que 24 nations, la Chine, le Portugal et la Yougoslavie ayant déclaré forfait. {{cite book}}: |author= has generic name (help); Invalid |url-status=no (help)CS1 maint: unrecognized language (link)
  5. Georgiou, Mark (26 March 2012). "Everest Olympic medal pledge set to be honoured". BBC News. http://www.bbc.co.uk/news/uk-17493939. பார்த்த நாள்: 31 August 2012. 
  6. Douglas, Ed (19 May 2012). "'My modest father never mentioned his Everest expedition Olympic gold'". London: guardian.co.uk. http://www.guardian.co.uk/world/2012/may/19/olympic-secret-everest-forgotten-hero. பார்த்த நாள்: 31 August 2012. 

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
பாரிஸ்

VIII Olympiad (1924)
பின்னர்