2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் ஏதிலிகள் ஒலிம்பிக் அணி

ஏதிலிகள் ஒலிம்பிக் அணி (Refugee Olympic Team) ஆகத்து 5 முதல் ஆகத்து 21 வரை பிரேசிலின் இரியோ டி செனீரோவில் நடந்த 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர். ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி போன்ற உலகளவில் ஏதிலிகள் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் இரியோ ஒலிம்பிக்கில் ஐந்து முதல் பத்து வரையில் ஏதிலிகள் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமசு பாக் மார்ச் 2016இல் அறிவித்தார்.[2] The team was led by Loroupe.[3] இந்த மெய்வல்லுநர்கள் ஒலிம்பிக் சின்னங்களின் கீழ் போட்டியிட்டனர். துவக்கத்தில், இவர்கள் "ஏதிலி ஒலிம்பிக் மெய்வல்லுநர் அணி" (Team of Refugee Olympic Athletes) எனப் பெயரிடப்பட்டு ப.ஒ.கு நாட்டுக்குறியாக ROA வழங்கப்பட்டது,[4] ஆனால் பின்னர் இது ஏதிலிகள் ஒலிம்பிக் அணி என மாற்றப்பட்டு நாட்டுக்குறியாக ROT வழங்கப்பட்டது.[5][6]

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில்
2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் ஏதிலிகள் ஒலிம்பிக் அணி
தனிநபர்கள் ஒலிம்பிக் சின்னங்கள் கீழ் போட்டியிடுகின்றனர்
ப.ஒ.கு குறியீடுROT
தே.ஒ.குஏதிலிகள் ஒலிம்பிக் அணி
இரியோ டி செனீரோ
போட்டியாளர்கள்10 - 3 விளையாட்டுகளில்
கொடி தாங்கியவர்ரோசு லோகோன்யென்[1]
பதக்கங்கள்
தங்கம்
0
வெள்ளி
0
வெண்கலம்
0
மொத்தம்
0
கோடைக்கால போட்டிகள்
2016

"உலகின் ஏதிலிகளுக்கு ஆதரவைக் காட்டுமுகமாக" உருவான இந்த முயற்சிக்கு[7] 2016 தீச்சுடர் தொடரோட்டத்தின் அங்கமாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் இப்ராகிம் அல்-உசேன் என்ற சிரிய ஏதிலியை ஒலிம்பிக் தீச்சுடரை ஏதென்சிலிருந்த எலியோனாசு ஏதிலி முகாம் வழியே ஏந்திச் செல்ல தேர்ந்தெடுத்தது.[8]

தவிரவும், குவைத்தின் தேசிய ஒலிம்பிக் குழு இடைநீக்கம் செய்யப்பட்டதால் அந்நாட்டு மெய்வல்லுநர்களும் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிடுகின்றனர்.

மேற்சான்றுகள்

தொகு
  1. "Refugee Olympic Team flagbearer announced". International Olympic Committee. 4 August 2016. பார்க்கப்பட்ட நாள் 5 August 2016.
  2. "Refugee Olympic Team to Shine Spotlight On Worldwide Refugee Crisis". International Olympic Committee. 3 June 2016. பார்க்கப்பட்ட நாள் 3 June 2016.
  3. Tegla Loroupe gives Refugee Olympians A Lesson in Hope, Jere Longmam. 4 August 2016, NYTimes, Retrieved 11 September 2016
  4. "Rio 2016: Refugee team to compete at Olympics". BBC Sport. 2 March 2016. http://www.bbc.co.uk/sport/olympics/35710578. பார்த்த நாள்: 27 April 2016. 
  5. "Refugee Olympic Team". Rio 2016. Archived from the original on 5 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-05. பார்க்கப்பட்ட நாள் 2016-08-21.
  6. "Refugee Olympic Team To Shine Spotlight on Worldwide Refugee Crisis". IOC. பார்க்கப்பட்ட நாள் 4 August 2016.
  7. "Refugee swimmer, who lost part of his leg in Syrian war, to carry Rio 2016 Olympic Torch". Official Website of Rio 2016. 22 April 2016. Archived from the original on 8 May 2016. பார்க்கப்பட்ட நாள் 28 April 2016. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-08. பார்க்கப்பட்ட நாள் 2022-06-02.
  8. "Syrian swimmer Ibrahim carried torch for the refugees of the world". olympic.org. Official Website of the Olympic Movement. 27 April 2016. பார்க்கப்பட்ட நாள் 28 April 2016.

வெளி இணைப்புகள்

தொகு