தாமசு பாக்
தாமசு பாக் (Thomas Bach, வர்ட்சுபர்கில் பிறப்பு: 29 திசம்பர் 1953) செருமானிய வழக்கறிஞரும் முன்னாள் வாள்வீச்சு வீரரும் ஆவார். இவர் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் ஒன்பதாவது மற்றும் தற்போதைய தலைவராக உள்ளார். இடாய்ச்சு ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவின் (DOSB) செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
மேதகு தாமசு பாக் | |
---|---|
9வது பன்னாட்டு ஒலிம்பிக் குழுத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 செப்டம்பர் 2013 | |
முன்னையவர் | ஷாக் ரோகெ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 திசம்பர் 1953 வர்ட்சுபர்கு, மேற்கு செருமனி |
வாள்வீச்சு விளையாட்டு
தொகுபதக்கத் தகவல்கள்
|
---|
பாக் டாபெர்பிசோசைம் வாள்வீச்சு சங்கத்தின் (FC Tauberbischofsheim) முன்னாள் விளையாட்டுக்காரர் ஆவார். 1976இல் மொண்ட்ரியாலில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வாள்வீச்சிற்கான அணி விளையாட்டில் செருமானிய அணிக்கு தங்கப் பதக்கம் வென்றளித்தார்.[1][2] அடுத்தாண்டு புவனெசு ஐரிசில் நடந்த வாள்வீச்சு உலகப் போட்டிகளில் உலகச் சாதனையாளராக பட்டம் வென்றார்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Olympics Statistics: Thomas Bach". databaseolympics.com. பார்க்கப்பட்ட நாள் 16 April 2011.
- ↑ "Thomas Bach Olympic Results". sports-reference.com. Archived from the original on 17 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 16 April 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் தாமசு பாக் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- IOC biography
- ICAS members பரணிடப்பட்டது 2009-08-25 at the வந்தவழி இயந்திரம்