ஒலிம்பிக்குத் தீச்சுடர்
ஒலிம்பிக் தீச்சுடர் (Olympic Flame) அல்லது ஒலிம்பிக் தீவட்டி (Olympic Torch) ஒலிம்பிக் விளையாட்டுகளின் அடையாளம் ஆகும்.[1] பண்டைய கிரேக்கத்தில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் போட்டிகளின் போது போட்டிக்காலம் முழுவதும் தீ எரிந்து கொண்டிருந்தது. இது கிரேக்கக் கடவுள் சூசிடமிருந்து பிரோமெதியசு தீயைத் திருடி வந்ததைக் கொண்டாடும் விதமாகக் கடைபிடிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. 1928ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டமில் நடந்த போட்டிகளில் அறிமுகமானதாக நம்பப்பட்டாலும் தெளிவான சான்றுகள் இல்லை. தற்கால ஒலிம்பிக் விளையாட்டுகளின் மற்றோர் அங்கமாக விளங்கும் தீவட்டி அஞ்சல் ஓட்டம் பண்டைய கிரேக்க விளையாட்டுக்களில் இடம்பெறாதிருந்தும் சர்ச்சைக்குரிய 1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.[2]
பயன்பாடு
தொகுஒலிம்பிக் விளையாட்டுக்களின் திறப்புவிழாக் கொண்டாட்டங்களுக்கு பல மாதங்களுக்கு முன்பே கிரீசில் பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடந்த ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீவட்டி கொளுத்தப்படுகிறது. சூரிய ஒளியை பரவளைவு ஆடியால் குவியப்படுத்தி பதினோரு பெண்களால் (கற்புடைக் கன்னிகள்)[notes 1] நடத்தப்படும் ஒரு விழாவில் இந்த தீவட்டி தீயிடப் படுகிறது.
பல நாடுகளின் வழியே பல்வேறு விளையாட்டு வீரர்களால் ஏந்திச் செல்லப்படும் இந்த தீவட்டி அஞ்சல் போட்டிகளின் திறப்புவிழா அன்று போட்டிகளுக்கான மைய விளையாட்டரங்கில் முடிவுக்கு வருகிறது. இதனை ஏந்தி வரும் இறுதி விளையாட்டு வீரர் யாரென்பது அறிவிக்கப்படாது இருப்பதும் பெரும்பாலும் போட்டிகளை ஏற்று நடத்தும் நாட்டின் விளையாட்டுச் சாதனையாளராக இருப்பதும் வழைமையாகும். இறுதியாக ஏந்துபவர் தீக்கொப்பரையை நோக்கி ஓடி, அது பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் உயரத்திற்கு அலங்காரப் படிகளில் ஏறி, தீவட்டியால் தீச்சுடரை ஏற்றுவார். இந்தத் தீச்சுடர் ஒலிம்பிக் போட்டிகள் முழுமையாக நடந்தேறும்வரை அணையாது எரிந்து கொண்டிருக்கும். விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் விழாவின்போது இத்தீச்சுடர் அணைக்கப்படும். இவ்வாறு ஒலிம்பிக் தீச்சுடரை ஏற்ற அழைக்கப்படுதல் பெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Britannica on Olympic Flame
- ↑ "Hitler's Berlin Games Helped Make Some Emblems Popular". Sports > Olympics (The New York Times). 2004-08-14. http://www.nytimes.com/2004/08/14/sports/olympics/14torch.html?ex=1207972800&en=732b3844bc19c839&ei=5070. பார்த்த நாள்: 2010-03-27.
வெளி இணைப்புகள்
தொகு- Official site of the Olympic Movement - Images and information on every game since 1896
- IOC brochure on the history of Olympic Flame (1 MB PDF) பரணிடப்பட்டது 2009-03-25 at the வந்தவழி இயந்திரம்
- TorchRelay.net - Torch Relay coverage. Includes torchbearer profiles, photos, videos, and more.
- Athens Info Guide - A list of past torches
- Sondre Norheim - on the three occasions when the Olympic Flame was lit in Morgedal பரணிடப்பட்டது 2004-06-25 at the வந்தவழி இயந்திரம்
- BBC article on the history of the torch
- The Nazi Olympics: Berlin 1936 - online exhibition பரணிடப்பட்டது 2008-04-24 at the வந்தவழி இயந்திரம்
- Live feed of current torch relay