ரீமா ஒமர்
ரீமா ஓமர் (Reema Omer பிறப்பு 3 ஜூன் 1986) பாக்கித்தானின் லாகூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை நிபுணர் ஆவார். இவர் சர்வதேச நீதிபதிகள் ஆணையத்தின் சட்ட ஆலோசகராக பணிபுரிகிறார். [1] பாக்கித்தானில் உள்ள சட்ட நிலப்பரப்பு மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து இவர் தொடர்ந்து தனது கருத்தை தெரிவித்து வருகிறார். [2] மேலும் பல்வேறு செய்தி தொலைக்காட்சிகளில் நிகழ்கால நிகழ்ச்சிகளில் தனது சட்ட மற்றும் அரசியல் பகுப்பாய்வை வழங்குகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஇரண்டு குழந்தைகளில் ஒருவரான ஒமர் லாகூரில் பிறந்து வளர்ந்தார். இவர் லாகூர் கிராமர் பள்ளியில் பயின்றார், அங்கு இவர் 2002 இல் தனது O 'நிலையினை முடித்தார் மற்றும் 2004 ஆம் ஆண்டில் A' நிலைச் சட்டத்தில் உலக அளவில் சிறப்பிடம் பெற்றார். . 2009 இல் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் இருந்து சட்ட இளங்கலைப் பட்டம் பெற்றார்.அதில் சிறப்பிடம் பெற்றதால் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. [3] பின்னர், 2010 இல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொது சர்வதேச சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற எல்எல்எம் பட்டம் பெற்றார் . ஓமர் டாக்டர் அலி ஜான் என்பவரை மணந்தார் . இந்தத் தம்பதினருக்கு ரூஹி என்ற மகள் உள்ளார். இவரது தாய், ஏப்ரல் 2020 இல் மார்பகப் புற்றுநோயிலிருந்து காலமானார். இவர் தற்போது பாக்கித்தானின் லாகூர் மற்றும் ஆக்ஸ்போர்டு, பிரிட்டனில் வாழ்ந்து வருகிறார்.
தொழில்
தொகு2011 முதல், இவர் தெற்காசியாவுக்கான ஆலோசகராகவும், பாக்கித்தானுக்கான சர்வதேச சட்ட ஆலோசகராகவும் சர்வதேச நீதிபதிகள் ஆணையம்,ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
இவர் பாக்கித்தானின் மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராக உள்ளார்.இந்த அமைப்பு ஒரு அரசு சார்பற்ற அமைப்பு பாக்கித்தானில் அனைவருக்கும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக வளர்ச்சிக்கான போராட்டத்தில் பங்கெடுக்கிறது. இவர் தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மனித உரிமை ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவர் சட்டரீதியான விடயங்கள் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து பல இடங்களில் பேசுகிறார் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல குழு விவாதங்களில் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கி வருகிறார்.
மனித உரிமைகள் ஒப்பந்தங்களின் கீழ் சர்வதேச மனித உரிமை கடமைகளுடன் பாக்கித்தானின் இணக்கத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் அறிக்கைகள் மற்றும் பல கட்டுரைகளை எழுதுவதில் ஈடுபட்டுள்ளார் [4] . இவர் தெற்காசியாவில் மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்த குழு விவாதங்களை ஏற்பாடு செய்து பங்கேற்று வருகிறார், மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் வாய்மொழி அறிக்கைகளையும், ஐ.நா. சிறப்பு நடைமுறைகளுடன் ஊடாடும் உரையாடலையும் வழங்கி வருகிறார்.
பல்வேறு செய்தி தொலைக்காட்சிகளில் நடப்பு விவகார நிகழ்ச்சிகளில் சட்ட மற்றும் அரசியல் ஆய்வாளராக இவர் தொடர்ந்து பங்கேற்கிறார். . மனித உரிமைகள் தொடர்பான கருப்பொருள்கள் [5] அடங்கிய கட்டுரைகளை [6] இணையத்தளம்[7] மற்றும் அச்சிடப்பட்ட [8] செய்தித்தாள்களுக்கு [9] அடிக்கடி வழங்குகிறார்; சட்டத்தின் ஆட்சி, கருத்து சுதந்திரம், சமூக நீதி, நீதிக்கான அணுகல், சட்டத் துறையில் பாலின வேறுபாடு, பாக்கித்தானின் சர்வதேச அர்ப்பணிப்புகள் மற்றும் தேசிய மனித உரிமை நிறுவனங்கள் போன்றவை. டான் செய்தித்தாள், [2] ஜியோ டிவி, [6] தி [9] நியூஸ், [5] மற்றும் டெய்லி டைம்ஸ் [8] ஆகியவற்றில் இவரது பங்களிப்பின் மூலம் தேசிய சட்டங்களில் சட்டரீதியான குறைபாடுகள் பற்றிய புரிதலை அதிகரிக்க உதவுகிறது.[10]
சான்றுகள்
தொகு- ↑ "Asia & the Pacific Programme". International Commission of Jurists (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
- ↑ 2.0 2.1 "News stories for Reema Omer - DAWN.COM". www.dawn.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-14."News stories for Reema Omer - DAWN.COM". www.dawn.com. Retrieved 2020-11-14.
- ↑ "620 graduates get degrees at LUMS convocation". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Op-eds". International Commission of Jurists (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
- ↑ 5.0 5.1 "Reema Omer:Writer - The News International: Latest News Breaking, Pakistan News". www.thenews.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
- ↑ 6.0 6.1 "Writer - Geo.tv: Latest News Breaking Pakistan, World, Live Videos". www.geo.tv (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
- ↑ "Opinio Juris articles by Reema".
- ↑ 8.0 8.1 "Reema Omer Archives". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
- ↑ 9.0 9.1 "Reema Omer:The News on Sunday (TNS) » Weekly Magazine - The News International". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
- ↑ "Friday Times Newspaper".