ரீமா சாத்தே

ரீமா சாத்தே (Reema Sathe)(பிறப்பு 5 செப்டம்பர்) என்பவர் இந்தியச் சமூக ஆர்வலர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். சிறு விவசாயிகளுடன் லாபத்தை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளும் உணவு நிறுவனத்தை ரீமா, உருவாக்கினார். 2017ஆம் ஆண்டில் இவரது பணிக்காக நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. ரீமா 2018-ல் போர்ப்சு இதழிலும், 2019-ல் உலக வங்கி குழு மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்திலும் இடம்பெற்றுள்ளார்.

ரீமா சாத்தே
Reema Sathe
பிறப்பு5 செப்டம்பர்
தேசியம்இந்தியா
பணிசமூக செயல்பாட்டாளர் & தொழில்முனைவர்

வாழ்க்கை

தொகு

ரீமா சாத்தே ரசாயனப் பொறியாளராகப் பயிற்சி பெற்றார்.[1]

உணவு மற்றும் குளிர்பானத் துறையில் ஏழு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, "ஹேப்பி ரூட்ஸ்" என்ற தனது சமூக நிறுவனத்தைத் தொடங்கினார்.[2] 2014ஆம் ஆண்டு தனது நிலையான வேலையை விட்டுவிட்டு சுயதொழில் தொடங்கினார்.[3] "கிரிஷி ஸ்டார்"[2] என்ற புதிய நிறுவனத்தில் சந்தை மேலாண்மை பொது மேலாளராகப் பணிபுரிந்த போது, சிறு மற்றும் குறு விவசாயிகள், குறிப்பாகப் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களால் சாத்தே ஆழ்ந்து நெகிழ்ந்தார்.[1]

இந்தியாவின் நான்கு மாநிலங்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் பயனளிக்கும் உள்நாட்டுத் தானியங்கள், உள்நாட்டுக் கால்நடைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி தேசிய மற்றும் பன்னாடு அளவில் பண்ணையிலிருந்து சந்தைக்கு விநியோகச் சங்கிலிகளைச் சாத்தே உருவாக்கினார். இவரது நிறுவனம், வழக்கமான சந்தை விலையை விட 50% கூடுதல் விலை கொடுத்து. நகர்ப்புற வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஆரோக்கியமான, சத்தான சிற்றுண்டிகளை உருவாக்கி, உயர்தர, உள்நாட்டுத் தானியங்களை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளைச் சாத்தே ஊக்குவித்தார். அகமத்நகரில் உள்ள பெண் விவசாயிகளைப் பொறுத்தவரை, இவர்கள் சாத்தேவின் வணிகத்திற்காக நெளிகோதுமையினைப் பயிரிட்டதால் அவர்களின் வருமானம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.[4] கோதுமை, கோதுமையினம் சார்ந்த கூலவகை, அறைக்கீரை விதைகள், ஆளி விதை மற்றும் பார்லி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் மாச்சில்லு மற்றும் நொறுமா இவரது தயாரிப்புகளில் அடங்கும். [5]

சூலை 2020-ல் "செரென் மெடோவில் சிறிய மாற்றங்களின் ஆற்றல் குறித்து டெடெக்சு உரையைச் சாத்தே நிகழ்த்தினார்.[6]

விருதுகள்

தொகு

2017-ல் "பிசினஸ் டுடே" வழங்கும் "மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்" விருதைச் சாத்தே பெற்றார்.[5]

சாத்தே,எண்ணிம மகளிர் விருதினை, சீதிபீப்புள் (SheThePeople), முகநூல் (Facebook), கூகிள் (Google), வழங்க 2017-ல் பெற்றார்

2016ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி விருது வழங்குவதற்காக 2017ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளன்று பெற்றார்.[3][7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "This Chemical Engineer Read One Story on 'The Better India' and Is Helping 10,000 Farmers Now". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-10-21. பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.
  2. 2.0 2.1 "That Happy Feeling- Business News". www.businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.
  3. 3.0 3.1 admin. "Five Ngo's, 27 Women given Nari Shakti Award" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-09-26. பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.
  4. "That Happy Feeling". Business Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.
  5. 5.0 5.1 World, Editorial Brewer (2018-07-31). "Commercialising the Grain » Brewer World-Everything about beer is here". Brewer World-Everything about beer is here (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.
  6. The power of small changes | Reema Sathe | TEDxSereneMeadows (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-07-29
  7. "Nari Shakti Awardees- Ms. Reema Sathe, Maharashtra | Ministry of Women & Child Development". wcd.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீமா_சாத்தே&oldid=3702540" இலிருந்து மீள்விக்கப்பட்டது