ருக்மாங்கதன் (புராணம்)

ருக்மாங்கதன் (Rukmangada) (சமக்கிருதம்: रुक्माङ्गद), இந்து தொன்மவியல் மாந்தர்களில் ஒருவர். விதிஷா நாட்டின் சூரிய குல மன்னரான ருக்மாங்கதனுக்கு சந்தியாவளி மற்றும் மோகினி (தேவலோக மாது) எனும் இரண்டு மனைவிகளும், முதல் மனைவி சந்தியாவளி மூலம் பிறந்த தர்மாங்கதன் என்ற மகனும் இருந்தனர்.

ருக்மாங்கதன்
மன்னர் ருக்மாங்கதன் பெற்ற மகனை கொல்ல மோகினி கட்டளையிடல், (இரஜா ரவிவர்மாவின் ஓவியம்)
குழந்தைகள்தர்மாங்கதன்
நூல்கள்நாரத புராணம்
சமயம்விதிஷா
அரசமரபுசூரிய குலம்

நாரத புராணத்தில் ருக்மாங்கதன் ஏகாதசி விரதம் முடித்த பின்னர் தன் இரண்டாம் மனைவியின் கட்டளைக்கிணங்க தனது மகன் தர்மாங்கதனை கொல்ல வாளை ஓங்கிய போது, [1]பகவான் விஷ்ணு தன் அடியவர்களான உருக்மாங்கதன், சந்தியாவளி மற்றும் தர்மாங்கதனை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார்.[2]

தொன்ம வரலாறு

தொகு

நாரத புராணத்தின் கதைப்படி, விதிஷா நாட்டு மன்னர் ருக்மாங்கதன் பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தர். [3]பகவான் விஷ்ணுவுக்கு பிரியமான ஏகாதசி நாளில் பொதுமக்கள் விரதம் இருப்பதை வலியுறுத்தினார். ஏகாதசி விரத மகிமையால், மக்கள் நரக லோகம் செல்லாமல் வைகுண்டம் சென்றனர். இதனால் நரக லோகத்தில் மக்கள் வெகுவாக குறைதனர். இது குறித்து எமதர்மராஜன் பிரம்மாவிடம் முறையிட, பிரம்மா, அரம்பையர்களில் ஒருத்தியான மோகினியை ருக்மாங்கதனிடம் அனுப்பி, அவன் செய்யும் ஏகாதசி விரதம் போற விஷ்ணுவுக்கு பிரியமான நற்காரியங்களுக்கு ஊறுவிளைக்க ஆணையிட்டார்.

பூலோகத்திற்கு வந்த மோகினியின் அழகில் மயங்கிய ருக்மாங்கதன், மோகியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ளத் துடித்தான். அப்போது மோகினி தன்னை திருமணம் கொள்ள வேண்டுமென்றால் தன் விருப்பங்களை உடனடியாக .நிறைவேற்ற வேண்டும் என நிபந்தனை விதித்தாள். மோகினியின் நிபந்தனைகளை ஏற்றும், மோகினியை மணந்தான் ருக்மாங்கதன்.[4]

ருக்மாங்கதன் மோகினியுடன் எட்டு ஆண்டுகளாக இல்லற வாழ்க்கையை, ஏகாதசி விரத்தைக் கடைபிடித்து, மகிச்சியுடன் வாழ்ந்தார். ஒருமுறை பிரபோதினி ஏகாதசிக்கு முதல்நாள், மோகினி, ருக்மாங்கதனுடன் பாலுறவில் ஈடுபட விரும்புவதால், ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டாம் என தடை செய்தாள். ருக்மாங்கதன் ஏகாதசி விரதத்தை எக்காரணம் கொண்டு நிறத்த முடியாது பதிலுரைத்தார். மோகினி தங்கள் திருமணத்திற்கு முன் தனக்கு அளித்த வாக்குறுதியை ருக்மாங்கதனுக்கு நினைவூட்டினார். மேலும் அரசர்கள் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய முனிவர் கௌதம மகரிசி கூறியதை நினைவு கூர்ந்தாள்.

விரததங்கள் குறித்து வேதங்களில் குறிப்பிடவில்லை என்றும், மோகினி ருக்மாங்கதனிடம் கூறிய கருத்துக்களைக் காக்க பிராமணர்களின் உதவியை நாடினாள். மகன் தர்மாங்கதன் தனது மாற்றாந்தாய் விரும்பியதைத் தரும்படி தந்தையிடம் வேண்டினார்..

அரசன் ஏகாதசி விரதத்தில் உறுதியாக இருந்தபோது, ​​மோகினி அவனிடம் கோபமடைந்தாள். கொடுத்த வாக்கை காப்பாற்றாத மன்னர் ருக்மாங்கதனின் முதல் மனைவியும், தர்மாங்கதனின் தாயுமான சந்தியாவளி, மோகினியிடம், தனது மகன் தர்மாங்கதனின் தலையைக் கொய்ய கேட்டுக் கொண்டாள். தர்மாங்கதன் வாளால் தலை துண்டிக்கப்படவிருந்த போது, பகவான் விஷ்ணு தலையிட்டு ருக்மாங்கதன், சந்தியாவளி மற்றும் தர்மாங்கதனை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Jagannathan, Maithily (2005). South Indian Hindu Festivals and Traditions (in ஆங்கிலம்). Abhinav Publications. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-415-8.
  2. ருக்மாங்கதன் சரித்திரம்
  3. Tales from the Vedas and other Scriptures. Diamond Pocket Books. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-288-1199-1.
  4. Books, Kausiki (2021-10-24). Narada Purana Part 5: English Translation only without Slokas (in ஆங்கிலம்). Kausiki Books. pp. 18–88.
  5. N.A (1952). THE NARADA-PURANA PART. 4. MOTILAL BANARSIDASS PUBLISHERS PVT. LTD, DELHI. pp. 1640–1728.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருக்மாங்கதன்_(புராணம்)&oldid=4134637" இலிருந்து மீள்விக்கப்பட்டது