ருதம் (ऋतं; Rta) என்ற சொல்லை உண்மையைப் பற்றிய அறிவு எனப் பொதுவாகப் பயன்படுத்தலாம். இந்திய வாழ்வியல் சிந்தனைகள் அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒருசேர காண்கிறது. ருதம் இந்து சமயத்தின் அடிப்படைக் கொள்கையுடன் நெருங்கிய தொடர்பினைப் பெற்றுள்ளது.[1] இது இயற்கையின் அமைப்பு, ஒழுக்கம், அதில் ஏற்படும் மாற்றம், இயற்கையின் படைப்பில் ஒளிந்திருக்கும் விதிகள், கோட்பாடுகள், ரகசியங்கள் போன்ற யாவற்றையும் உட்கொண்டுள்ளது.[2]

வடமொழியும் செந்தமிழும்

தொகு

சம்ஸ்கிருதம் எனும் மொழியை தமிழில் குறிப்பிடும் பொழுது வடமொழி எனறே குறிப்பிடுவது வழக்கம், ஏனெனில் சம்ஸ்கிருதம் எனும் சொல்லை சரியாக தமிழ் மொழியில் மொழிபெயர்த்தால் செம்மை ருதம் என்றே மொழிபெயர்க முடியும். தமிழ் என்றச் சொல்லின் உற்பத்தியைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், தமிழ் என்ற சொல் வடமொழியில் ருதம் எனும் சொல்லையைக் குறிக்கிறது என்பதற்காகன காரணம், தமிழ் மொழியில் ऋ (ரி க்கும் ரு விற்கும் இடைப்பட்ட எழுத்து) எனும் எழுத்து இல்லை, அதுபோல ழ் எனும் எழுத்து வடமொழியில் இல்லை, வடமொழியில் ऋ எனும் எழுத்து சொல்லின் இறுதியில் வராது, அதுபோல ழ் எனும் எழுத்து தமிழ் மொழியில் சொல்லின் முன்னில் வராது. ஆகையால் ருதம் என்னும் சொல்லையே தமிழ் குறிக்கிறது எனக் கொள்ளலாம். சம்ஸ்கிருதம் என்றச் சொல்லும் செந்தமிழ் என்றச் சொல்லும் ஒரேப் பொருள் தரக்கூடிய இரண்டு மொழிகளின் பெயர்களைக் குறிக்கிறது.

பக்தி

தொகு

அன்பு பொதுவாக நான்கு வகைப்படும், அவை பாசம், காதல், நட்பு மற்றும் பக்தி. இதில் பாசம் எனும் அன்பு பெற்றோரும் அவர்களின் மக்களுக்கும் இடைப்பட்டது, காதல் தலைவனுக்கும் தலைவிக்கும் இடைப்பட்டது, நட்பு தொழர்கள் அல்லது தொழியர்கள் இடைப்பட்டது. பக்தியெனும் அன்பு பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் இடைப்பட்டது. இங்கு பக்தியைத் தவிர்த்து மற்றுள்ள அன்பு நேரடியான தொடர்பினால் வருவது. ஆனால் பக்தி எனும் அன்பு எல்லாம் வல்ல ஏக கடவுளான இறைவனிடம் உள்ள நேரடி தொடர்பினால் உண்டாவதல்ல, இறைவனின் மகத்துவத்தை பல்வேறு சூல்நிலைகளால் உணர்ந்து அவனைச் சரணடைவதால் ஏற்படுவது. சாம வேதம், இறைவனை மகிழ்ச்சி அடையச் செய்ய பக்தி பண்ணுங்கள் எனக்கூறுகிறது. காணக்கிடைக்கதா, நேரடியாக பேசமுடியாத, ஐம்புலன்களாலும் உணரமுடியாத இறைவனை மனதினால் மட்டுமே உணரமுடியும். சைவ சமயப்படி இறைவனே படைத்து, காத்து, அழிக்கின்றான் என நம்பப்படுகிறது. இந்த படைப்பில் காணப்படும் மகத்துவத்தை உணர்ந்து இறைவனே அனைத்திற்கும் மேலானவன் என்று அவனைப் போற்றி வணங்கி அவன் திருவடிகளை சேர்வதே பக்தியாகும். இதற்கு உண்மையை ருதத்தை அறிய வேண்டும்.

சாமவேதம் கண்டம் 19-ல் முதல் வசனம்

இறைவனைத் தேடும் முயற்சி உடையவர், இறைவனைக் கண்டு தம் வெற்றியைப் பெற்றவராகின்றனர்.

வேதங்கள்

தொகு

எல்லா வேதப் பொருளுமே அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கையும் அடைந்தே ஆக வேண்டிய சிறப்பு பற்றி மனிதருக்குக் கற்பிப்பதே. அதோடு தனிச் சிறப்பாக மேலான கடவுளை, வழிபட்டு அவரைச் சேரும் விடயத்தை உணர்த்துவதே. இவ்வாறான வேதத்தில் ருதம் எனும் சொல்லெ மிக அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சத்தியம் (உண்மை) எனும் சொல்லோடு இணைந்து இது அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. கடவுளும் அவரைச் சேர்ந்தவையும் இணைந்த தொகுதியே 'உண்மை', இதைப்பற்றிய அறிவு (ஞானம்) ருதம் எனச் சொல்லலாம்.

  • ருக் வேதம்:- விஞ்ஞான மந்திர வடிவமானது ருக் வேதம். ருக் என்னும் சொல் செய்யுள் வடிவை குறிக்கும். செய்யுள் வடிவானவற்றை தமிழ் மொழியில் இயற்றமிழ் (Rta of Nature) எனலாம்.
  • சாம வேதம்:- முழுமுதற் கடவுளான இறைவன் மீது இசையால் பக்தி செய்து துதிக்க சாம வேதம் கற்பிக்கிறது. தமிழ் மொழியில் இறைவனை துதித்து போற்றுவதற்காக அமையப் பெற்றதே இசைத் தமிழ் (Rta of Music).
  • யஜுர் மற்றும் அதர்வ வேதங்கள்:-

யாக யஜ்ஞங்களுடன் வீரவாழ்வை யஜுர் விளக்கும். அதாவது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய செயல்களால் அமைந்தது. தமிழ் மொழியில் இதை இனியவை எனக்கூறலாம்.

தீயசக்திகளை, பாவத்தை போக்க அதர்வம் கூறுகிறது. அதாவது வாழ்வில் தவிர்க்க வேண்டிய செயல்களால் அமைந்தது. தமிழ் மொழியில் இதை இன்னாதவை எனக் கூறலாம்.

தமிழ் மொழியானது முழுமையாக அற இலக்கியங்களைக் கொண்டது. இந்நூட்கள் பலவும் வாழ்வியல் செயல்களில் இனியவை இன்னாதவை ஆகியனவற்றை கூறுகிறது. அற செயல்களால் அமையப் பெற்றதே நாடகத் தமிழ் (Rta of Action).

நான்கு வேதக் கருத்துக்களில் இருந்து ருதத்தை அறிய நினைத்தால், ருதத்தில் உயிருள்ள, உயிரற்ற மற்றும் இயற்கையில் மறைந்துள்ள கோட்பாடுகள் மற்றும் மானிடர்கள் தங்கள் வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டிய நெறிகள் ஆகிய யாவும் உட்படும் எனலாம்.

சத்யம் மற்றும் ருதம்

தொகு

ருக் வேதத்தில் சத்யம் மற்றும் ருதம் ஆகிய இரு சொற்களும் இணையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சத்யம் எனும் சொல் உண்மை எனும் சொல்லைக் குறிக்கிறது. உண்மை எனும் சொல் உள்ளது எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். வடமொழியில் சத்யம் எனும் சொல் சத் எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இந்த சத் அல்லது உள்ளது எனும் சொல் மூன்று காலங்களிலும் மாறாமல் இருப்பதாகும். அதாவது கடந்த காலங்களில் இருந்ததும், தற்காலத்தில் இருப்பதும், வரும் காலங்களில் இருக்கப்போவதும் ஆனவற்றை குறிப்பதாகும் உள்ளது எனும் சொல். இவ்வாறு இருப்பது உண்மை/சத்யம் ஆகும். இங்கு ருதம் எனும் சொல் பல்வேறு கோணங்களில், ஒழுங்கு (order), இணக்கம் (harmony), சட்டம் (Law) எனும் பொருள்களைத் தரும். மனிதனால் ஆக்கப்பட்ட சட்டத்தைப் போன்று அல்லாது ருதம் இயற்கையானது. ருதம் பொருட்களின் தன்மையில் உள்ளது. ருதம் பிரபஞ்சத்தின் ஒழுங்கு மற்றும் இணக்கம் ஆகியவற்றின் பின்னில் உள்ள உண்மையாகும்.

தர்மம் மற்றும் ருதம்

தொகு

ருக் வேதத்தில் ருதத்துடன் நெருக்கமாக இணைந்து பயன்படுத்தப்பட்டுள்ள மற்றொரு சொல் தர்மம். இது தமிழ் மொழியில் அறம் என அழைக்கப்படுகிறது. ருக் வேதத்தில் முந்தையப் பிரிவுகளில் தர்மமும் ருதமும் நேருங்கிய தொடர்புடைய, ஆனால் தனித்தனி சொற்களாக, பயன்படுத்தப்பட்ட நிலையில் பிந்தைய பிரிவுகளில் இந்த இரண்டு சொற்களும் ஒத்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உபநிஷத் காலங்களில் தர்மம் ருதத்திற்கு ஒத்தச் சொல்லாக மாறியது.

மேற்கோள்

தொகு
  1. Holdrege (2004:215–216); Mahony (1998:3).
  2. Holdrege (2004:215). Panikkar (2001:350–351) remarks: "Ṛta is the ultimate foundation of everything; it is "the supreme", although this is not to be understood in a static sense. […] It is the expression of the primordial dynamism that is inherent in everything …"
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருதம்&oldid=3913737" இலிருந்து மீள்விக்கப்பட்டது