ருத்தேனியம் பெண்டாகார்பனைல்
ருத்தேனியம் பெண்டாகார்பனைல் (Ruthenium pentacarbonyl) என்பது Ru(CO)5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமருத்தேனியம் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் ஒளியால் துண்டப்படுகிறது. அறை வெப்பநிலையில் உள்ளபோதே கார்பனைல் நீக்கம் அடைந்து விடுகிறது. உலோக கார்பனைல் அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பில் ஓர் இடைநிலையாக ஆய்வு செய்யப்படுகிறது [1].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பெண்டாகார்பனைல்ருத்தேனியம்
| |
இனங்காட்டிகள் | |
16406-48-7 | |
பண்புகள் | |
Ru(CO)5 | |
வாய்ப்பாட்டு எடை | 241.12 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
உருகுநிலை | -22 °செ |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஓர் ஒடுக்கும் முகவர் முன்னிலையில் ருத்தேனியத்தின் உப்பை கார்பனைலேற்றம் செய்வதால் ருத்தேனியம் பெண்டாகார்பனைல் தயாரிக்க முடியும் [2]. கார்பன் மோனாக்சைடு முன்னிலையில் டிரைருத்தேனியம் டோடெக்காகார்பனைலை ஒளியாற்பகுப்பு செய்து தற்போது இச்சேர்மத்தைத் தயாரிக்கிறார்கள் :[1]
- Ru3(CO)12 + 3 CO 3 Ru(CO)5.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Adams, R. D.; Barnard, T. S.; Cortopassi, J. E.; Wu, W.; Li, Z. "Platinum-ruthenium carbonyl cluster complexes" Inorganic Syntheses 1998, volume 32, pp. 280-284. எஆசு:10.1002/9780470132630.ch44
- ↑ W. Manchot, Wilhelm J. Manchot "Darstellung von Rutheniumcarbonylen und -nitrosylen" Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 1936, volume 226, pp. 385-415. எஆசு:10.1002/zaac.19362260410