மாதா ரூபா பவானி (Mata Rupa Bhawani c. 1621 – c. 1721 இயற்பெயர்: அழகேஸ்வரி) ஒரு காஷ்மீரிக் கவிஞர் ஆவார். [1] பவானி தற்போதுள்ள காஷ்மீரில் வாழ்ந்த 17 ஆம் நூற்றாண்டின் இந்துத் துறவி ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நவகடல் (இப்போது ஸ்ரீநகர் ), கான்கா-இ-ஷோக்தாவில் வசிக்கும் பண்டிதர் மாதவ் ஜூ தாரின் மகள் ஆவார். தனது தந்தையின் மூலம் யோகக் கலையினைக் கற்றுக்கொண்டார். [2]

மாதவ் ஜூ தர் மாதா ஷரிகாவின் ( காளி ) தீவிர பக்தர் ஆவார். பவானி, இறை நம்பிக்கையில் தனது தந்தையைப் பின்பற்றினார்.

தொழில் வாழ்க்கை

தொகு

சிறு வயதிலேயே திருமணமான பிறகும், நள்ளிரவில் சாதனா எனும் வழிமுறையினைக் கடைபிடிப்பதற்காக ஹரி பர்பத்துக்குச் சென்றார். இந்த கடவுள் வழிபாட்டு முறையினால் தனது குடும்பத்தினரிடம் சிக்கல்களைச் சந்தித்தார்.

மாதா ரூபா பவானி கிபி 1721 இல் மாக் கட்'டு பச் சதத்தில் இறந்தார். இந்த நாள் சாஹிப் சப்தமி என்று காஷ்மீரில் உள்ள இந்துக்களால் அனுசரிக்கப்படுகிறது. [2]

சான்றுகள்

தொகு
  1. "Rupa Bhawani". Retrieved 17 March 2012.
  2. 2.0 2.1 "Saints and Sages: Rupa Bhawani". Retrieved 2018-03-20."Saints and Sages: Rupa Bhawani". koausa.org. Retrieved 20 March 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபா_பவானி&oldid=3807013" இலிருந்து மீள்விக்கப்பட்டது