ரூப் கன்வர்
ரூப்குவர்பா கன்வார் ( சுமார் 1969 - 4 செப்டம்பர் 1987) என்பவர் இந்தியாவின் இராசத்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் உள்ள தியோராலா என்ற சிற்றூரில் உயிருடன் எரிக்கப்பட்ட ஒரு ராஜ்புத்திரப் பெண் ஆவார். அந்த நேரத்தில், இவருக்கு 18 வயது ஆகி இருந்தது. மால் சிங் செகாவத் என்பவருடன் திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகியிருந்த நிலையில் மால் சிங் செகாவத் சுமார் 24 வயதில் இறந்தார். [1] இந்த இணையருக்கு குழந்தை இல்லை.
ரூப்குவர்பா கன்வார் | |
---|---|
பிறப்பு | சுமார் 1969 குகன்வாலி நாகூர் |
இறப்பு | 4 செப்டம்பர் 1987 (18 வயது) தியோராலா, சீகர் மாவட்டம், இராசத்தான், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | உடன்கட்டை ஏறல் |
வாழ்க்கைத் துணை | மால் சிங் |
இறப்பு
தொகுஇவர் எரிக்கப்பட்ட நிகழ்வில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மரணத்திற்குப் பிறகு, ரூப் கன்வார் சதி மாதா - சதி தாய் அல்லது தூய தாய் என்று புகழப்பட்டார். இந்தக் கொலையானது நகர்ப்புறப் பகுதிகளில் வெகுவிரைவில் பொதுமக்களின் எதிர்ப்பை உருவாக்கியது. இந்த கொடூரமான கொலையானது, இதுபோன்ற கொடூரங்களைத் தடுக்க முதலில் மாநில அளவிலான சட்டங்களுக்கும், பின்னர் ஒன்றிய அரசின் சதி (தடுப்பு) சட்டத்துக்கும் வழிவகுத்தது . [2]
செய்தி அறிக்கைகள்
தொகுகொலை பற்றிய சில செய்தி அறிக்கைகளின் கூற்றின்படி, இறப்பு சடங்குக்கு வந்த உறவினராகளால் கன்வர் எரியும் சிதையில் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுக் கொல்லப்பட்டதாக கூறுகின்றன. [1] குடும்பத்திற்கு பெருமை சேர்க்க உடன்கட்டை ஏற வேண்டும் என்று அவர் வற்புறுத்தபட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன. [3]
குற்றப்பத்திரிகை
தொகுஇக்கொலை விசாரணையின் விளைவாக 45 பேர் இவரது கொலையில் குற்றம் சாட்டப்பட்டனர்; ஆனால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட பிற்கால விசாரணையின் போது, இறப்புச் சடங்கு விழாவில் கலந்துகொண்டதாகக் கூறப்பட்ட தியோராலாவைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இறுதியில், உடன்கட்டை ஏறலை புனிதப்படுத்தியதற்காக மாநில அரசியல்வாதிகள் உட்பட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 31. சனவரி, 2004 அன்று ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் விடுதலை செய்தது. [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "The New York Times, 1987". 20 September 1987. https://query.nytimes.com/gst/fullpage.html?res=9B0DE6D61139F933A1575AC0A961948260. பார்த்த நாள்: 31 May 2008."The New York Times, 1987". The New York Times. 20 September 1987. Retrieved 31 May 2008.
- ↑ "The Commission of Sati (Prevention) Act, 1987". Archived from the original on 21 November 2006. பார்க்கப்பட்ட நாள் 24 December 2006.
- ↑ "Don't Shackle Freedom". September 2000. பார்க்கப்பட்ட நாள் 9 July 2007.
- ↑ "Frontline, 2004". Archived from the original on 10 October 2007. பார்க்கப்பட்ட நாள் 9 July 2007.