ரெபேக்கா கபுகோ

காங்கோ நாட்டைச் சார்ந்த சமூக ஆர்வலர்

ரெபேக்கா கபுகோ (Rebecca Kabugho) (பிறப்பு: 1994 செப்டம்பர் 4) இவர் ஒரு காங்கோவின் சமூக ஆர்வலர் ஆவார். இவர் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டார். இளம் கைதிகளில் ஒருவராக இவர் இருந்தார். மேலும் இவருக்கு 2017 ஆம் ஆண்டில் சர்வதேச வீரதீர பெண்கள் விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கை தொகு

கபுகோ 1994இல் கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடக்கு கிவு மாகாணத்தின் தலைநகரமான கோமா என்ற இடத்தில் பிறந்தார். இவர் 2012 சூனில் தனது சொந்த ஊரில் நிறுவப்பட்ட லுச்சாவின் (மாற்றத்திற்கான போராட்டம்) உறுப்பினராக இருந்தார். லுச்சா மாற்றத்திற்கான ஒரு படிநிலை அல்லாத வன்முறையற்ற இயக்கமாகும். [1]

லுச்சாவை காங்கோவின் தேசிய புலனாய்வு அமைப்பு ஒரு "கிளர்ச்சி இயக்கம்" என்று எதிர்த்தது. பல அமைதியான போராட்டங்களுக்குப் பிறகு பிப்ரவரி 16 அன்று கைது செய்யப்பட்ட ஆறு உறுப்பினர்களில் கபுகோவும் ஒருவராக இருந்தார். அந்த நேரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு "டெட் சிட்டி" என்று பெயரிடப்பட்டது. காங்கோவின் அதிபர் ஜோசப் கபிலாவின் அரசியலமைப்பை புறக்கணித்தமை தொடர்பாக இவருக்கும் மற்ற ஐந்து பேருக்கும் சட்ட கீழ்ப்படியாமையை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. [2]

இவர் தனது சொந்த ஊரில் உள்ள ஒரு சிறையில் ஆறு மாதங்கள் கழித்தார். அதே நேரத்தில் சமூக ஊடகங்களிலும் [2] மற்றும் சர்வதேச பத்திரிகைகளிலும் "உலகின் இளைய கைதி" என்று பாராட்டப்பட்டார்.

2016 திசம்பர் 16 அன்று, அரசியலமைப்பற்ற அரசாங்கமாக காங்கோவின் தேசிய புலனாய்வு அமைப்பு கருதுவதை எதிர்த்து மீண்டும் கைது செய்யப்பட்ட 19 ஆர்வலர்களில் ரெபேக்காவும் இருந்தார். பின்னர், இவர் ஒரு வாரத்திற்குள் விடுவிக்கப்பட்டார். ஆனால் காங்கோவின் மேம்பாடுகளுக்காக ஒரு முன்னணி அகிம்சை பிரச்சாரகராகத் தொடர்ந்தார். [2]

கபுகோவுக்கு மெலனியா திரம்ப் சர்வதேச பன்னிரண்டு பெண்களுடன் சர்வதேச வீரதீர பெண்கள் விருது 2017 மார்ச் மாதம் வழங்கினார். 2016ஆம் ஆண்டில் இவருக்கு சர்வதேச பெண்கள் வீரதீர விருது வழங்கப்பட்டது. [3]

குறிப்புகள் தொகு

  1. "LUCHA: Youth movement in Congo demands social justice". www.pambazuka.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-16.
  2. 2.0 2.1 2.2 "Biographies of the Finalists for the 2017 International Women of Courage Awards". www.state.gov (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-03-29. பார்க்கப்பட்ட நாள் 2017-08-16.
  3. Our Partner: Congolese Activist Receives U.S. Secretary of State’s International Women of Courage Award
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெபேக்கா_கபுகோ&oldid=2937497" இலிருந்து மீள்விக்கப்பட்டது