ரெப்கோ வங்கி

கூட்டுறவு வங்கி

தாயகம் திரும்பியோர் கூட்டுறவு மற்றும் நிதி மற்றும் வளர்ச்சி வங்கி அல்லது ரெப்கோ வங்கி (Repatriates Cooperative and Finance and Development Bank (Repco Bank), மியான்மர் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து மீண்டும் இந்தியாவிற்கு திரும்பியோர்களின் (Repatriates) வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக, 1969ஆம் ஆண்டில் இந்திய அரசால் துவக்கப்பட்ட ஒரு கூட்டுறவு வங்கியாகும்.[1]உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இவ்வங்கியின் செயல்பாடுகள், தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களிலும், புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் அமைந்துள்ளன.[1][2]இவ்வங்கியின் மூலதனத்தில் இந்திய அரசு 73.33%, தாயகம் திரும்பியோர்கள் 21.28%, தமிழ்நாடு அரசு 2.91%, ஆந்திரப் பிரதேச அரசு 1.73%, கேரள அரசு 0.59%, மற்றும் கர்நாடக அரசு 0.17%.கொண்டுள்ளது.[3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெப்கோ_வங்கி&oldid=1888785" இலிருந்து மீள்விக்கப்பட்டது