ரெயிசு மாகோசுக் கோட்டை

ரெயிசு மாகோசுக் கோட்டை மாண்டோவி ஆற்றின் வடக்குக்கரையில், தலைநகரமான பஞ்சிம்முக்கு எதிர்ப்பக்கத்தில் இவ்வூர் உள்ளது. மாண்டோவி ஆற்றின் கழிமுகத்தின் மிக ஒடுக்கமான பகுதியில் நீட்டிக்கொண்டிருக்கும் நிலத்துMடில் அமைந்துள்ள ரெயிசு மாகோசுக் கோட்டை 1551 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. உறுதியான செம்புரைக் கல்லால் கட்டப்பட்ட இக்கோட்டையின் சுற்றுமதில் ஆங்காங்கே சிறு போர்த்துக்கேயப் பாணிக் கோபுர அமைப்புக்கள் காணப்படுகின்றன. இதன் பின்னர் பல தடவைகள் விரிவாக்கப்பட்ட இக்கோட்டை 1707ல் மீளமைக்கப்பட்டது.

ரெயிசு மாகோசுக் கோட்டை

முன்னர் இக்கோட்டை, வைசுராய்களுக்கும், புதிதாக வரும் அல்லது லிசுபனுக்குச் செல்லும் வழியில் இங்கு தங்கும் முக்கிய அலுவலர்களுக்கும் இது தங்கும் இடமாக இருந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்து மராட்டாக்களுக்கு எதிரான போர்களில் இது முக்கியமான பங்கு வகித்தது. மராட்டாக்களால் இக்கோட்டையை ஒருபோதும் கைப்பற்ற முடிந்ததில்லை. பின்னர் இது ஒரு சிறைச்சாலையாகவும் பயன்பட்டது.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெயிசு_மாகோசுக்_கோட்டை&oldid=2060707" இலிருந்து மீள்விக்கப்பட்டது