ரேடியம் அயோடைடு
வேதிச் சேர்மம்
ரேடியம் அயோடைடு (Radium iodide) என்பது RaI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும், அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ரேடியம் ஈரயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
20610-52-0 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
I2Ra | |
வாய்ப்பாட்டு எடை | 479.81 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுரேடியம் உலோகமும் ஐதரயோடிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிந்தால் ரேடியம் அயோடைடு உருவாகிறது:[3]
- Ra + 2HI → RaI2 + H2
- ரேடியமும் அயோடினும் வினைபுரிந்தாலும் ரேடியம் அயோடைடு உருவாகும்:
- Ra + I2 → RaI2
இயற்பியல் பண்புகள்
தொகுரேடியம் அயோடைடு நேர்சாய்சதுரப் படிகத்திட்டத்தில் படிகங்களாக உருவாகிறது.[4] இதனுடைய கதிரியக்கப் பண்பின் காரணமாக சிதைந்து ஊதா நிறமாக மாறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Radium diiodide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 7 June 2023.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1978). Crystal Data: Inorganic compounds 1967-1969 (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 0-160. பார்க்கப்பட்ட நாள் 7 June 2023.
- ↑ Ropp, Richard C. (31 December 2012). Encyclopedia of the Alkaline Earth Compounds (in ஆங்கிலம்). Newnes. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59553-9. பார்க்கப்பட்ட நாள் 7 June 2023.
- ↑ Vdovenko, Viktor Mikhaĭlovich (1973). Аналитическая химия радия (in ரஷியன்). "Наука, "Ленингр. отд-ние. p. 33. பார்க்கப்பட்ட நாள் 7 June 2023.