ரேஷம் (Resham), ஒரு பாகிஸ்தான் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர மாடல் ஆவார். [1] [2]பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனத்தில் அதிக ஊதியம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான இவர், [3]சங்கம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.[4] [5] 1995 ஆம் ஆண்டில் ஜீவா திரைப்படத்தில் அறிமுகமானார். 1990 களில் லாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தார்.[6] [7] அவரது குறிப்பிடத்தக்க திரைப்படப் படைப்புகளில், ஜீவா (1995), குங்காட் (1996), துப்பட்டா ஜல் ரஹா ஹை (1998), பால் டோ பால் (1999), மற்றும் ஸ்வரங்கி (2015) ஆகியவை அடங்கும். ஜன்னத் கி தலாஷ் (1999) படத்திற்காக நிகர் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

அவரது திரைப்பட வாழ்க்கையுடன், தொலைக்காட்சி நாடகங்களிலும் தீவிரமாக செயல்படுகிறார். அதே பெயரில் உமேரா அகமதுவின் நாவலை அடிப்படையாகக் கொண்ட மேன்-ஓ-சல்வா (2007) இல் 'ஜைனப்' வேடத்தில் நடித்தார். இந்த நிகழ்ச்சி சிறந்த தொலைக்காட்சி நடிகைக்கான (சேட்டிலைட்) 7 வது லக்ஸ் ஸ்டைல் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டது. கூடுதலாக, அமானுஷ்ய தொலைக்காட்சி தொடரான நாகின் (2017முதல் 2019 வரை) தொடரில் சஜ்னா என்ற பாம்பாட்டியாகவும் நடித்தார்.[8]

2012 ஆம் ஆண்டில், அவர் பிரான்சில், பெண்களுக்கான ஆடை மற்றும் அழகு சாதனக் கடையைத் தொடங்கினார். [9]

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ரேஷம் அக்டோபர் 22, 1979 அன்று பாகிஸ்தானின் பைசலாபாத்தில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவரின் உண்மையான பெயர் சைமா ஆகும். [10] சோஹைல் வார்ரைச்சிற்கு அளித்த பேட்டியில், அதே பெயரில் தொழில்துறையில் ஏராளமான நடிகைகள் இருந்ததால் தான், சைமா என்கிற தனது சொந்த பெயரைப் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே, அவர் ரேஷம் என்ற தனித்துவமான மேடைப் பெயரைத் தேர்ந்தெடுத்தார்.

அவர் லாகூரிலிருந்து ஆரம்பக் கல்வியைப் பெற்றார். மற்றும் மெட்ரிக் வரை படித்தார். இவருக்கு பஞ்சாபி குடும்ப பின்னணி உள்ளது. ஏழு வயதில் தனது தாயை இழந்து, மூத்த சகோதரியால் வளர்க்கப்பட்டார்.[11]

தொழில்

தொகு

ரேஷம் 1995 ஆம் ஆண்டில் ஜீவா திரைப்படத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் அந்த படத்திற்கு முன்பு அவர் தொலைக்காட்சி நாடகங்களில் சில சிறிய வேடங்களில் நடித்திருந்தார். [12]1990 களில் வணிக ரீதியாக வெற்றிகரமான பல படங்களில் நடித்தார். இதில் சோர் மச்சாய் ஷோர் மற்றும் குங்காட் ஆகிய இவ்விரண்டு திரைப்படங்களும் 1996 இல் வெளிவந்தவை. மேலும், சங்கம் (1997) - திரைப்படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.[13], துப்பட்டா ஜல் ரஹா ஹை ( 1998), மற்றும் இன்டெஹா (1999). போன்ற திரைப்படங்களையும் சேர்த்து[14] 2000 களின் முற்பகுதியில் லாலிவுட்டின் வீழ்ச்சி வரை அவர் தொடர்ந்து பாகிஸ்தான் படங்களில் முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார்..

2011 ஆம் ஆண்டில், அவர் தனது நண்பரும் முன்னாள் இணை நடிகருமான ரீமா கான் இயக்கிய லவ் மே கும் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார். 2014 ஆம் ஆண்டில் சமூக நாடகமான ஸ்வரங்கி என்ற திரைப்படத்தில் நடித்து, இவர் சரியான முறையில் படவுலகிற்கு திரும்பி வந்தார். இத்திரைப்படம், போதைப் பழக்கத்தின் பிரச்சினை,அதற்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. [15] இந்த படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. மேலும் நாடு முழுவதும் பல நகரங்களில் தடை செய்யப்பட்டது. [16] [17] 2017 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் பேஷன் டிசைன் கவுன்சில் (பி.எஃப்.டி.சி) ஏற்பாடு செய்த பேஷன் வாரத்தில் பங்கேற்றார். [18]

2017 முதல் 2019 வரை, இச்சாதாரி நாகின் என்ற விஷயத்தை அடிப்படையாகக் கொண்ட பாகிஸ்தானின் முதல் தொலைக்காட்சி தொடரான நாகின் என்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட நாடகத் தொடரில் சஜ்னா சபிரான் ( பாம்பாட்டி) என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரு நேர்காணலில், நிகழ்ச்சியில் தனது கதாபாத்திரத்தை விவரிக்கும் போது, இது, எதிர்மறை தன்மையுடைய ஆனால் மிகவும் கவர்ச்சியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.[19] நவம்பர் 2018 இல், கலீல்-உர்-ரெஹ்மான் கமர் எழுதி இயக்கிய காஃப் கங்கனா என்ற காதல் படத்தில் நடிகர்களுடன் நடிக்க ரேஷம் சேர்ந்தார். [20] தொழில்முறை காரணங்களால் அதே மாதத்தில் அவர் அத் திரைப்படத்திலிருந்து விலகினார். [21]

2019 ஆம் ஆண்டில், நூர் பிபி என்ற தொலைக்காட்சி தொடரில் ஆன்மீகப் பெண்ணாக நடித்தார்.[22] [17]

வரவிருக்கும் திட்டங்கள்

தொகு

அவர் வரவிருக்கும் பாகிஸ்தான் திரைப்படமான தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்டில் (2019) நடிப்பார்.[23] இயக்குனர் கம்ரான் ஷாஹித்தின் வரலாற்று காதல் படமான தி ட்ரையலில் நடிக்கவும் அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். [24] [25]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஜூன் 2017 இல், ரேஷம் 2018 இல் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார். அவரது கணவர் ஐரோப்பாவில் ஒரு தொழிலதிபர் என்று கூறப்படுகிறது, மேலும் அவரது திருமணத்திற்குப் பிறகு ஐரோப்பாவிற்குச் செல்வார் என்று கூறப்படுகிறது. [26]

ஏப்ரல் 2018 இல், அலி ஜாபருக்கு எதிரான மீஷா ஷாஃபி குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, ரேஷம், ஜாபரை ஆதரித்தார். நட்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ள வித்தியாசத்தை அலி அறிவார். அவரால் அப்படி ஒரு காரியத்தைச் செய்ய முடியாது" என்று கூறியுள்ளார்.

தொண்டு பணி

தொகு

2010 வெள்ளத்தின் போது, ரேஷம் எக்ஸ்பிரஸ் ஹெல்ப்லைன் டிரஸ்ட் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெள்ள நிவாரணங்களை (குடி தண்ணீர், பருப்பு வகைகள் மற்றும் பால் போன்றவை உட்பட) ஒரு டிரக்கை அனுப்பினார். அவரது முதல் டிரக் ரஹீம் யார்கானுக்கும், இரண்டாவது டிரக் கோட் ஆட்டுக்கும் அனுப்பப்பட்டது. அவரது பங்களிப்புகளைப் பற்றி பேசிய ரேஷம், "ஒரு நபராகவும், நடிகராகவும், மற்றவர்களிடமிருந்து உதவி கோருவதற்குப் பதிலாக இந்த நபர்களை காப்பாற்றுவதற்கு எனது சொந்தப் பணத்திலிருந்து உதவுவது எனது சமூகப் பொறுப்பு என்று உணர்ந்தேன்" என தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டில், அவர் லாகூரின் பாரி ஸ்டுடியோவுக்குச் சென்று போராடும் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுக்கு பணத்தை விநியோகித்தார்.[27]

குறிப்புகள்

தொகு
  1. Khan, Manal Faheem. ""Actors nowadays have an attitude problem" —Resham". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-05-28.
  2. "Resham, Noor mesmerize audience in ongoing fashion week - Entertainment - Dunya News". dunyanews.tv.
  3. "Saima & Resham – Hits on Television! | TALKING POINT - MAG THE WEEKLY" (in en). http://www.magtheweekly.com/detail/1582-saima-resham-hits-on-television. 
  4. "Resham denies report of 'being injured in accident' - Daily Times" (in en-US). Daily Times. https://dailytimes.com.pk/238311/resham-denies-report-of-being-injured-in-accident/. 
  5. "Top Actress & Model Resham Photos" (in en-US). Style.Pk. https://style.pk/top-actress-model-resham-photos/. 
  6. "The Lollywood Girls - Whiling Away Time | Talking Point - MAG THE WEEKLY". www.magtheweekly.com (in ஆங்கிலம்).
  7. NewsBytes. "Resham signs Kamran Shahid's untitled film". www.thenews.com.pk (in ஆங்கிலம்).
  8. "EXCLUSIVE: Mouni Roy's Naagin inspires series in Indonesia and Pakistan" (in en-US). http://www.bollywoodlife.com/news-gossip/exclusive-mouni-roys-naagin-inspires-series-in-indonesia-and-pakistan/. 
  9. "Resham to launch boutique in France". www.pakistantoday.com.pk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-09-26.
  10. "Resham". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2018-05-11.
  11. "Syed Noor destroyed film industry for Saima: Resham" (in en-US). Pakistan's No 1 Women's Urdu Magazine Gourmet Khawateen. 2016-09-20 இம் மூலத்தில் இருந்து 2017-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170923215735/http://gourmetkhawateen.com.pk/syed-noor-destroyed-film-industry-for-saima-resham/. 
  12. "When kids online hurt Jeeva Gujjar's feelings". www.pakistantoday.com.pk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-06.
  13. "Resham denies report of 'being injured in accident'". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-05-10.
  14. Shirazi, Maria. "In conversation with Resham". www.thenews.com.pk (in ஆங்கிலம்).
  15. "Resham to make a comeback in Swaarangi, out in cinemas on August 28". https://www.dawn.com/news/1201675. 
  16. "Resham's Swaarangi banned by Pakistan's central censor board". The Express Tribune (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-08-28.
  17. 17.0 17.1 NewsBytes. "Resham signs Kamran Shahid's untitled film". www.thenews.com.pk (in ஆங்கிலம்).
  18. "Resham, Noor mesmerize audience in ongoing fashion week - Entertainment - Dunya News". dunyanews.tv.
  19. Shirazi, Maria. "In conversation with Resham". www.thenews.com.pk (in ஆங்கிலம்).
  20. NewsBytes. "Resham joins the cast of Kaaf Kangana". www.thenews.com.pk (in ஆங்கிலம்).
  21. NewsBytes. "Resham no longer part of Kaaf Kangana". www.thenews.com.pk (in ஆங்கிலம்).
  22. "Pakistan film industry working hard to stand on its feet once again: Resham". Dunya News.
  23. "Resham, Babar Ali included in Maula Jatt 2 - Entertainment". Dunya News.
  24. "Directed by anchor Kamran Shahid, film 'THE TRIAL' is set to release in March 2017". Daily Pakistan Global (in அமெரிக்க ஆங்கிலம்).
  25. NewsBytes. "Resham signs Kamran Shahid's untitled film". www.thenews.com.pk (in ஆங்கிலம்).
  26. "Film star Resham likely to tie the knot next year - Entertainment - Dunya News". dunyanews.tv. http://dunyanews.tv/en/Entertainment/393769-Film-star-Resham-likely-to-tie-knot-next-year. 
  27. "Resham: A generous start | The Express Tribune". https://tribune.com.pk/story/223467/resham-a-generous-start/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேஷம்&oldid=3227137" இலிருந்து மீள்விக்கப்பட்டது