அலி ஜாபர்
அலி ஜாபர் (ஆங்கிலம்: Ali Zafar) ( உருது: علی ظفر ) இவர் 1980 மே 18 அன்று பிறந்த ஒரு பாகிஸ்தான் பாடகர்-பாடலாசிரியர், விளம்பர மாதிரி, நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஓவியர் ஆவார்.[1][2] பிரபல இசைக்கலைஞராக மாறுவதற்கு முன்பு ஜாபர் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் தோன்றத் தொடங்கினார்.[3] பின்னர் அவர் பாலிவுட்டில் தனது தொழிலை நிறுவினார் மற்றும் அவரது வெற்றி பல பாக்கித்தான் நடிகர்களை இந்தி படங்களில் ஈடுபட வழிவகுத்தது.[4] அவர் ஐந்து லக்ஸ் ஸ்டைல் விருதுகளையும் பிலிம்பேர் விருது பரிந்துரைகளையும் பெற்றுள்ளார்.[5][6][7]
ஜாபர் ஒரு இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் அவரது முதல் பாடல் தொகுப்பான ஹூகா பானியில் இருந்து அவரது "சன்னோ" என்ற பாடல் மூலம் பிரபலமடைந்தார் , இது உலகளவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது.[8] "சன்னோ" மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, பல இசை தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது மற்றும் சிறந்த இசை தொகுப்பு மற்றும் சிறந்தக் கலைஞருக்கான பல விருதுகளைப் பெற்றது.[9] 2010 ஆம் ஆண்டு பாலிவுட் நையாண்டி படமான தேரே பின்லேடன் ஒரு மிதமான திரையரங்க வசூலில் வெற்றி பெற்றதன் மூலம் ஜாபர் தனது நடிப்பில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது மற்றும் பிலிம்பேர் உட்பட சிறந்த ஆண் அறிமுகப் பிரிவில் பல பரிந்துரைகளைப் பெற்றது. பின்னர் மேரே பிரதர் கி துல்ஹான், சாஷ்மே படூர், மற்றும் டியர் ஜிந்தகி உள்ளிட்ட பல படங்களிலும் பணியாற்றினார்.[5][10]
அவரது நடிப்பு மற்றும் பாடும் வாழ்க்கையுடன், ஜாபர் சுற்றுப்பயணங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார், மனிதாபிமானப் பணிகளில் தீவிரமாக உள்ளார் மற்றும் பல ஒப்புதல் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளார். ஈஸ்டர்ன் ஐ என்ற பிரித்தன் செய்தித்தாளின் உலகளாவிய கருத்துக் கணிப்பின் அடிப்படையில் 2013 ஆம் ஆண்டில், ஜாபர் "கிரகத்தின் கவர்ச்சியான ஆசிய மனிதர்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டார் .[6][11][12]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஅலி ஜாபர் 1980 மே 18 அன்று பாக்கித்தானிலுள்ள பஞ்சாபியின் லாகூரில் [13] ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர்களான முகமது ஜாபருல்லா மற்றும் கன்வால் அமீன் ஆகியோர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக இருந்தனர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர்; ஜெய்ன் மற்றும் தான்யல், இவர்களில் பிந்தையவர் ஒரு வணிக மாதிரியாகும், அவர் விரைவில் பாடகர் மற்றும் நடிகராக ஒரு தொழிலைத் தொடங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.[14] ஜாபர் தனது ஆரம்பக் கல்வியை சி.ஏ.ஏ பொதுப் பள்ளியில் பயின்றார். லாகூர் அரசு கல்லூரி மற்றும் தேசிய கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
தொழில்
தொகுஜாபர் லாகூரில் உள்ள பேர்ல் கான்டினென்டல் விடுதியில் வரிவடிவ கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் தொலைக்காட்சித் ஹொடர்களில் நடிக்கத் தொடங்கினார். கொலேஜ் ஜீன்ஸ், காஞ்ச் கே பர் மற்றும் லாண்டா பஜார் ஆகிய நாடகத் தொடர்களில் நடித்து தொலைக்காட்சி நடிகராக அறிமுகமானார்.[15]
சொந்த வாழ்க்கை
தொகுஇந்திய நடிகர் அமீர்கானின் தொலைதூர உறவினரான ஆயிஷா ஃபஸ்லியை ஜாபர் 2009 ஜூலை 28 அன்று பாக்கித்தானின் லாகூரில் மணந்தார்,[16][17][18] அவர்களுக்கு 2010 இல் ஒரு பையனும்,[19] 2015 இல் ஒரு பெண்ணும் பிறந்தனர்.[20] இவரது மைத்துனர் உமைர் பாஸ்லி 2016 இல் வெளிவந்து திரையரங்க வசூலில் வெற்றி பெற்ற சயா இ குடா இ சுல்ஜலால் என்ற படத்தின் இயக்குநர் ஆவார்.[21]
குறிப்புகள்
தொகு- ↑ "Ali Zafar - All About Biography, Life, Career, Music and Movies". https://www.parhlo.com/ali-zafar/.
- ↑ "Ali Zafar - Biography, Career, Awards and Net Worth". http://highlightsindia.com/ali-zafar-biography/.
- ↑ "Kollege Jeans Cast "Then" and "Now"". https://reviewit.pk/kollege-jeans-cast-now/.
- ↑ "Bollywood wants to know where Ali Zafar went". https://images.dawn.com/news/1175889.
- ↑ 5.0 5.1 Agha Majid. "Chashme Baddoor Remake Starring Ali Zafar Releasing In August". Play TV. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 20 April 2014.
- ↑ 6.0 6.1 "Ali Zafar Crowned Sexiest Asian Man on the Planet". Archived from the original on 2013-12-15. பார்க்கப்பட்ட நாள் 2019-11-30.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Ali Zafar". in.com. Archived from the original on 2015-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-11-30.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Indian Film Festival 2011". Archived from the original on 18 April 2013. பார்க்கப்பட்ட நாள் 16 November 2012.
- ↑ "Huqa Pani – Ali Zafar Pakistani Songs-Channo, Huqa Pani, Chal Dil Merey Raag.fm". raag.fm. Archived from the original on 30 August 2017. பார்க்கப்பட்ட நாள் 20 April 2014.
- ↑ "Alia Is Lovely & a Thorough Professional... SRK Is SRK: Ali Zafar". TheQuint.com. Subhash K. Jha. 22 November 2016. பார்க்கப்பட்ட நாள் 24 November 2016.
- ↑ "Coke Studio 8: Sugar, spice and some things nice". http://tribune.com.pk/story/943970/coke-studio-8-sugar-spice-and-some-things-nice/. பார்த்த நாள்: 2015-08-25.
- ↑ "Coke Studio: Will songs from Episode 2 make it to your wedding soundtrack?". http://www.dawn.com/news/1201888. பார்த்த நாள்: 2015-08-25.
- ↑ "Girls used to come to me to get their portraits made: Ali Zafar". The Times of India. 15 February 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Total-Siyapaa-Girls-used-to-come-to-me-for-their-portraits-Ali-Zafar/articleshow/30394647.cms?intenttarget=no. பார்த்த நாள்: 1 March 2014.
- ↑ Usman Ghafoor (7 October 2018), "Ali Zafar’s brother Danyal poised for stardom", Gulf News. Retrieved 21 October 2018.
- ↑ "The LSAs begin and end on a high note". The News. 21 April 2017. https://www.thenews.com.pk/magazine/instep-today/199933-The-LSAs-begin-and-end-on-a-high-note. பார்த்த நாள்: 4 October 2017.
- ↑ "'Ali Zafar is Aamir's brother'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Ali Zafar and Aamir Khan related". mid-day.com.
- ↑ "Account Suspended". Archived from the original on 15 February 2011. பார்க்கப்பட்ட நாள் 19 February 2011.
- ↑ "Ali Zafar is now a father!". 9 March 2010. Archived from the original on 13 April 2010. பார்க்கப்பட்ட நாள் 11 June 2010.
- ↑ "Ali Zafar names newly-born daughter Alyza". The Indian Express. 2 March 2015.
- ↑ Minahil Qasim (12 March 2017), "The director’s cut: Saya-e-Khuda-e-Zuljilal", The Express Tribune. Retrieved 22 June 2018.