ரொகையா நாள்
பேகம் ரொகையா நாள் (ஆங்கிலம்: Rokeya Day; வங்காள மொழி: বেগম রোকেয়া দিবস) வங்காள எழுத்தாளர், கல்வியாளர், சமூக ஆர்வலர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக வாதிடுபவர் பேகம் ரோக்கியா பிறந்த மற்றும் இறந்த நாளான திசம்பர் 9 ஆம் தேதி ஆகும். வங்காளதேசத்தின் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் வங்காள அரசாங்கத்தால் பேகம் ரோக்கியாவின் படைப்புகள் மற்றும் மரபுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நாள் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது.[1][2][3][4][5] இன்றைய தினம், வங்காளதேச அரசு தனிப்பட்ட பெண்களின் சிறப்பான சாதனைக்காக பேகம் ரோக்கியா பதக்கத்தினை விருதாக வழங்குகிறது.[6]
ரொகையா நாள் Rokeya Day রোকেয়া দিবস | |
---|---|
அதிகாரப்பூர்வ பெயர் | பேகம் ரோக்கியா நாள் |
கடைப்பிடிப்போர் | வங்காளதேசம் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
வாழ்க்கை
தொகுபேகம் ரொகையா திசம்பர் 9, 1880-ல் ரங்பூரில் உள்ள பைராபந்த் கிராமத்தில் பிறந்தார். இவர் திசம்பர் 9, 1932-ல் கொல்கத்தாவில் இறந்தார். எனவே இவருடைய பிறப்பும் இறப்பும் ஒரே நாள் வருகின்றது. பெண்களின் உரிமைகள், சுதந்திரம், கல்வி, அதிகாரமளித்தல் மற்றும் பொருளாதார விடுதலை ஆகியவற்றிற்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடினார். துணைக் கண்டத்தில் அப்போதைய மிகவும் பழமைவாத மற்றும் பிரித்தானிய ஆட்சியின் காலனித்துவ சமூகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கினார்.[7]
1994ஆம் ஆண்டு முதல் ராங்பூரில் உள்ள மிதாபுகூர் உபாசிலாவின் கீழ் உள்ள பைராபந்த் கிராமத்தில் பேகம் ரொகையாவின் பிறந்த மற்றும் இறப்பு ஆண்டு விழாக்கள் அதிகாரப்பூர்வமாக ரொகையா நாளாக அனுசரிக்கப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rokeya Day today". thedailystar.net. பார்க்கப்பட்ட நாள் 2017-03-03.
- ↑ "Begum Rokeya Day today". thedailystar.net. பார்க்கப்பட்ட நாள் 2017-03-03.
- ↑ "Nation celebrating Begum Rokeya Day - Dhaka Tribune". dhakatribune.com. 9 December 2016. பார்க்கப்பட்ட நாள் 1 April 2017.
- ↑ Independent, The. "Begum Rokeya Day today". theindependentbd.com. பார்க்கப்பட்ட நாள் 1 April 2017.
- ↑ "Rokeya Day observed with call for ensuring women's equity". newagebd.net. பார்க்கப்பட்ட நாள் 1 April 2017.
- ↑ "Begum Rokeya Day on 9 December". Dhaka Tribune. Archived from the original on 7 January 2016. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
- ↑ "Begum Rokeya Day for encouraging women - Women's Own - observerbd.com". The Daily Observer. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
- ↑ "Rokeya Day toady". New Age (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.