ரொசாண்டா தமாஸ்

ரொசாண்டா ஒசீலியன் தாமஸ் (Rozonda Thomas) [2] 1971 பிப்ரவரி 27 இல் பிறந்தவர் [2][3] சில்லி என்ற குழுவின் உறுப்பினரான இவர் ஒரு அமெரிக்க நடனக்கலைஞர், பாடகர், பாடலாசிரியர், நடிகை மற்றும் தொலைக்காட்சிப் பிரபலம் ஆவார். சில்லி என்பது தொழில் ரீதியாகவும் அறியப்பட்ட டி.எல்.சி குழுமத்தின் அங்கமாகும், 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த பெண் பாடகர்களின் குழுக்களில் ஒன்றாகும்.

ரொசாண்டா தமாஸ்
2016இல் ரொசாண்டா தமாஸ்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ரொசாண்டா ஒசீலியன் தாமஸ்
பிற பெயர்கள்சில்லி
பிறப்புபெப்ரவரி 27, 1971 (1971-02-27) (அகவை 53)
அட்லான்டா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
  • பாடகர்
  • நடிகை
  • தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்
இசைத்துறையில்1991 முதல் தற்போது
வெளியீட்டு நிறுவனங்கள்
இணைந்த செயற்பாடுகள்
  • டி.எல்.சி.
  • டி.பாஸ்
  • லிசா லோப்ஸ்
  • அஷர்
  • டல்லாஸ் ஆஸ்டின்
இணையதளம்fitchilli.com

ஆரம்ப வாழ்க்கை தொகு

ரொசாண்டா அட்லாண்டா, ஜோர்ஜியாவில் பிறந்தார். 1989 இல் பெஞ்சமின் எலிஜா மேஸ் உயர்நிலை பள்ளியில் படித்தார்.[2] அவரது தந்தை அப்துல் அலி, அரபு மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்,[2] மற்றும் அவரது தாயார் அவா தாமஸ் ஆப்பிரிக்க அமெரிக்க மற்றும் பூர்வீக அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.[4] தன் தாயால் வளர்க்கப்பட்ட தாமஸ், பின்னர் சாலி ஜெஸ்ஸி ரபேல் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 1996 ல் முதன்முறையாக தனது தந்தையைச் சந்தித்த காட்சியை நடித்துக் காட்டினார்.[5]

இசை வாழ்க்கை தொகு

ரொசாண்டா முதன்முதலில் டாமியன் டேம் என்ற குழுவின் நடனக் கலைஞராக இருந்தார். 1991 ஆம் ஆண்டில், அவர் டி.எல்.சி. நிறுவனத்துடன் இணைந்த கிரிஸ்டல் ஜோன்ஸ் என்ற நிறுவனத்திற்கு மாறினார், லிசா லோபஸ் என்பவர் இக்குழுவுக்கு "சில்லி" என்று பெயரிட்டார், இதன் மூலம் இக்குழு டி.எல்.சி என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. இக்குழுவின் ஸ்பைஸ் கேர்ள்ஸ் மட்டுமே உலகளவில் 65 மில்லியன் பதிப்புகள் விற்பனையானது. மற்றும் அனைத்து காலத்திற்கும் சிறந்த விற்பனையான அமெரிக்கப் பெண் குழுவாக ஆனது. ரொசாண்டா டி.எல்.சி. உடன் பணிபுரிந்து நான்கு கிராமி விருதுகளை வென்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

20 வயதில் ரொசாண்டா தயாரிப்பாளர் டல்லஸ் ஆஸ்டின் என்பவருடன் வாழ்க்கையைத் தொடங்கினார்.[6] ரொசாண்டா மற்றும் ஆஸ்டின் ஆகியோருக்கு ட்ரான் ஆஸ்டின் என்ற ஒரு மகன் 1997 ஜூன் 2 இல், பிறந்தார்.

குறிப்புகள் தொகு

  1. "TLC - Biography, Albums, Streaming Links". AllMusic.
  2. 2.0 2.1 2.2 2.3 "Rozonda "Chilli" Thomas Biography". Biography.com (FYI/A&E Networks). Archived from the original on 3 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Rozonda 'Chilli' Thomas". பார்க்கப்பட்ட நாள் 2017-11-16.
  4. Ego Trip's Big Book of Racism. HarperCollins. 2001. https://archive.org/details/go00cann. 
  5. "The Spicier Girls". Time magazine இம் மூலத்தில் இருந்து 2008-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080328124020/http://www.time.com/time/magazine/article/0,9171,20611,00.html. பார்த்த நாள்: 2008-02-04. 
  6. "TLC Singer Chilli Describes Abortion Grief: 'I Cried Almost Every Day for 9 Years'". LifeSiteNews.com. 2010-05-14. Archived from the original on 2010-05-17. பார்க்கப்பட்ட நாள் 2012-03-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொசாண்டா_தமாஸ்&oldid=3581460" இலிருந்து மீள்விக்கப்பட்டது