ரொசாரியோ பீரிஸ்
ரொசாரியோ பீரிஸ் (இறப்பு: 1969) இலங்கையைச் சேர்ந்த நகைச்சுவை நாடக நடிகர். வானொலி நாடகங்களில் நீண்ட காலமாக நடித்து தனித்துவம் பெற்றவர்.
இலங்கை வானொலி மூலம் அறிமுகமான ரொசாரியோ பீரிஸ் நடித்த முதல் மேடை நாடகம் 'மனிதத் தெய்வம்'. இலங்கையில் 1960களில் மேடைகளில் புகழ்பெற்ற லண்டன் கந்தையா நாடகத்தில் இவர் காசிம் காக்கா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். பதிவுத் திருமணம் என்ற நாடகத்தில் அபு நானா என்ற பாத்திரத்தில் நடித்தார்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட டாக்சி டிறைவர் (1966) என்ற தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவைப் பாகமேற்று நடித்தார்.