ரோடியம்-பிளாட்டினம் ஆக்சைடு

ரோடியம்-பிளாட்டினம் ஆக்சைடு (Rhodium-platinum oxide) என்பது ஒரு ஐதரசனேற்ற வினையூக்கியாகும். Rh–Pt ஆக்சைடு அல்லது நிசிமுரா வினையூக்கி என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள்[2].

ரோடியம்-பிளாட்டினம் ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ரோடியம்(III) ஆக்சைடு / பிளாட்டினம்(IV) ஆக்சைடு
வேறு பெயர்கள்
Rh–Pt ஆக்சைடு, நிசிமுரா வினையூக்கி
இனங்காட்டிகள்
39373-27-8
பண்புகள்
Rh2O3 / PtO2
வாய்ப்பாட்டு எடை 253.81 / 227.09 (நீரற்றது)
தோற்றம் கருப்புநிறத் தூள் [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பயன்கள்

தொகு

பல்வேறு கரிமச் சேர்மங்களை இயல்பான அறைவெப்பநிலை மற்றும் வளிமண்டல அழுத்தத்தில் அவற்றுடன் தொடர்புடைய வளைய ஆல்க்கேன்களாக அல்லது நிறைவுற்ற பல்லின வளையங்களாக ஒடுக்கப் பயன்படுகிறது[3][4]. இப்பயன்பாட்டில் பிளாட்டினம் டையாக்சைடு போன்ற பிற 10 ஆவது தொகுதி வினையூக்கிகளைக் காட்டிலும் ரோடியம்-பிளாட்டினம் ஆக்சைடு அதிக பயனளிக்கும் வினையூக்கியாகச் செயல்படுகிறது. மேலும் ஐதரசன் பகுப்பு வினை வழியாக ஆக்சிசனைப் பெற்றுள்ள வேதிவினை குழுக்களை இழப்பது குறைவாக இருக்கவும் இவ்வினையூக்கி பயன்படுத்தப்படுகிறது[5][6][7].

தயாரிப்பு

தொகு

ரோடியம் குளோரைடின் நீரிய கரைசல், குளோரோபிளாட்டினிக் அமிலம், சோடியம் நைட்ரேட்டு ஆகியவை சேர்ந்த கரைசலை ஆவியாக்கி பின்னர் அதை 460-480 பாகை செல்சியசு வெப்பநிலையில் நைட்ரசனின் ஆக்சைடுகள் முடியும்வரை உருகவைக்கப்படுகிறது[2][4]. கிடைக்கும் திண்மத்தை வாலைவடி நீர் மற்றும் சோடியம் நைட்ரேட்டு ஆகியவற்றில் கழுவி கால்சியம் குளோரைடு சேர்த்து உலரவைத்து ரோடியம்-பிளாட்டினம் ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக 3:1 Rh/Pt அல்லது 7:3 Rh/Pt. விகிதங்களில் உலோகங்கள் இவ்வினையூக்கியில் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Heuser, Heidi. "Nishimura's catalyst". Product Number: 3000034604. Umicore: Precious Metal Chemistry. Archived from the original on 3 பெப்பிரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  2. 2.0 2.1 Nishimura, Shigeo (2001). Handbook of Heterogeneous Catalytic Hydrogenation for Organic Synthesis (1st ed.). Newyork: Wiley-Interscience. pp. 42–43, 182, 389–390, 408, & 414–571. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471396987.
  3. Nishimura, Shigeo (1961). "Hydrogenation and Hydrogenolysis. V. Rhodium-Platinum Oxide as a Catalyst for the Hydrogenation of Organic Compounds". Bulletin of the Chemical Society of Japan 34 (1): 32–36. doi:10.1246/bcsj.34.32. https://archive.org/details/sim_bulletin-of-the-chemical-society-of-japan_1961-01_34_1/page/32. 
  4. 4.0 4.1 Nishimura, Shigeo (1961). "Rhodium-Platinum Oxide as α Catalyst for the Hydrogenation of Organic Compounds. II. Catalyst Preparation and Effects of Platinum in Rhodium-Platinum Oxide". Bulletin of the Chemical Society of Japan 34 (10): 1544–1545. doi:10.1246/bcsj.34.1544. https://archive.org/details/sim_bulletin-of-the-chemical-society-of-japan_1961-10_34_10/page/1544. 
  5. Nishimura, Shigeo (1960). "Hydrogenation and Hydrogenolysis. III. Rhodium-Platinum Oxide as a Catalyst for the Hydrogenation of the Aromatic Nucleus". Bulletin of the Chemical Society of Japan 33 (4): 566–567. doi:10.1246/bcsj.33.566. https://archive.org/details/sim_bulletin-of-the-chemical-society-of-japan_1960-04_33_4/page/566. 
  6. Stocker, J. H. (1962). "Communications to the Editor". The Journal of Organic Chemistry 27 (5): 2288–2292. doi:10.1021/jo01053a077. 
  7. Nishimura, Shigeo; Taguchi, Hisaaki (1963). "Hydrogenation and Hydrogenolysis. VII. Selective Hydrogenation of Aromatic Compounds Containing C–O Linkages Liable to Hydrogenolysis with a Rhodium-Platinum Oxide under high Pressures". Bulletin of the Chemical Society of Japan 36 (3): 353–355. doi:10.1246/bcsj.36.353. https://archive.org/details/sim_bulletin-of-the-chemical-society-of-japan_1963-03_36_3/page/353.