ரோடைட்டு
ரோடியம் உலோகத்தின் தாது
ரோடைட்டு அல்லது ரோடியத் தங்கம் (Rhodite or rhodian gold) இயற்கையிலேயே காணப்படும் ஒரு தாதுப்பொருளாகும். தங்கமும் ரோடியமும் இத்தாதுவில் கலந்துள்ளன. மெக்சிகோவிலும், கொலம்பியாவிலும் 1825 ஆம் ஆண்டு [1] கிடைத்த தாதுவில் 34 முதல் 43 சதவீதம் ரோடியம் கலந்திருந்ததாக அறியப்படுகிறது. ரோடைட்டு தாது நொறுங்குத் தன்மையைக் கொண்டுள்ளது. 15.5 முதல் 16.8 கிராம்/சென்டிமீட்டர்3 அடர்த்தியுடன் காணப்படுகிறது [2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Palache, C., Berman, H. & Frondel, C. (1944), The System of Mineralogy of James Dwight Dana and Edward Salisbury Dana, Yale University 1837-1892, Volume I: Elements, Sulfides, Sulfosalts, Oxides. John Wiley and Sons, Inc., New York. 7th edition, p. 91
- ↑ Rhodite on Mindat