ரோட் தீவு சிகப்புக் கோழி

கோழி இனம்

ரோட் தீவு சிகப்புக் கோழி ( Rhode Island Red ) என்பது ஒரு அமெரிக்க கோழி இனமாகும். இவை இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இவை பார்க்க அழகானவையாகவும், அதிகப்படியான முட்டையிடும் திரனுக்காகவும் கொல்லைப்புறங்களில் வளர்க்க சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.[1] இப்பறவைகள் ரோட் தீவின் தேசியப் பறவையாகும்.[2][3] இப்பறவை மாகாணத்தை பூர்வீகமாக கொள்ளாதவை என்றாலும், மூன்று அமெரிக்க மாகாணங்களின் மாநிலப்பறவையாக உள்ளது.

கோழி
சேவல்

விளக்கம்

தொகு

இக்கோழிகள் ரோடு தீவில் மிகுதியாக வளர்க்கப்பட்டதால் இப்பெயர் பெற்றன. இக்கோழிகள் சிவப்பு நிறமாக அழகாகவும் முதுகு, நெஞ்சு, தொடை பாகங்களில் மிகுதியான சதைப்பற்றுடன் இருக்கும்.[4]

பயன்

தொகு

ரோடுத் தீவு சிகப்புக் கோழிகள் வாரத்துக்கு 5 முதல் 7 முட்டைகள்வரை இடக்கூடியன. இக்கோழிகள் தோராயமாக முதல் முட்டையிடும் பருவத்தில் 312 முட்டைகள்வரை இடும், இரண்டாம் பருவத்தில் 223 முட்டைகள் இடும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Conservation Priority List.
  2. "Rhode Island State Bird - Rhode Island Red". 50states.com. 1954-05-03. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
  3. "Rhode Island Red's Success". The Sydney Morning Herald. April 1, 1938. http://news.google.com/newspapers?id=xVMRAAAAIBAJ&sjid=dZUDAAAAIBAJ&pg=6983%2C82110. பார்த்த நாள்: September 16, 2015. 
  4. "Poultry Breeds - Rhode Island Red Chickens". Ansi.okstate.edu. 1997-06-26. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
  5. Mallia Azzopardi, 2014.[full citation needed]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோட்_தீவு_சிகப்புக்_கோழி&oldid=2148914" இலிருந்து மீள்விக்கப்பட்டது