ரோன் வீசுளி
ரொனால்ட் பில்லியசு "ரோன்" வீசுளி என்பவர் ஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் தொடரில் வரும் முக்கிய புனைவுக் கதாப்பாத்திரம் ஆவார். இவரின் முதல் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் நூலில் புதிய மாணவராக ஆக்வாட்சுக்கு வரும் போது இடம்பெறுகின்றது. இவர் ஆரி பாட்டரினதும், எர்மாயினி கிறேன்செர்-இனதும் உயிர் நண்பர் ஆவார். இவர் தூய இரத்தத்தில் பிறந்த குடும்பமான வீசுளி குடும்பத்தின் உறுப்பினர் ஆவார். இவர் கிறிபிண்டோர் இல்லத்தவர் ஆவார்.
ரோன் வீசுளி | |
---|---|
ஆரி பாட்டர் கதை மாந்தர் | |
ரோன் வீசுளியாக ரூபர்ட் கிரின்ட். | |
முதல் தோற்றம் | ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்) |
இறுதித் தோற்றம் | ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு (நூல்) |
உருவாக்கியவர் | ஜே. கே. ரௌலிங் |
வரைந்தவர்(கள்) | ரூபர்ட் கிரின்ட் |
இல்லம் | கிறிபிண்டோர் |
தகவல் | |
குடும்பம் | ஆர்தர் வீசுளி (தந்தை) மொல்லி வீசுளி (தாய்) பில் வீசுளி (சகோதரன்) சார்ளி வீசுளி (சகோதரன்) பெர்சி வீசுளி (சகோதரன்) பிரெட், ஜோர்ஜ் வீசுளி (சகோதரர்கள்) ஜின்னி வீசுளி (சகோதரி) |
துணைவர்(கள்) | எர்மாயினி கிறேன்செர் |
பிள்ளைகள் | ரோசு கிறேன்சர் வீசுளி (மகள்) இயூகோ கிறேன்சர் வீசுளி (மகன்) |