ரோமானா குர்னெரி

ரோமானா குர்னெரி (Romana Guarnieri) (1913-2004) இவர் ஒரு இத்தாலிய இடைக்காலவாதி ஆவார். 1946 ஆம் ஆண்டில் மார்குரைட் பொரேட்டை தி மிரர் ஆஃப் சிம்பிள் சோல்ஸ் என்ற பத்திரிகையின் ஆசிரியராக அடையாளம் காணப்பட்டவர் ஆவார். [1]

வாழ்க்கை தொகு

ரோமானா குர்னெரி 1913இல் ஹாக்கில் பிறந்தார். [2] ஒரு இத்தாலிய தந்தைக்கும் மற்றும் ஒரு டச்சு தாயுக்கும் மகளாவார். இவரது இளம் வயதிலேயே இவரது பெற்றோர் பிரிந்தார்கள். இவர் நாத்திகரும் மற்றும் தியோசோபிஸ்ட்களுமான தனது தாத்தா பாட்யால் வளர்க்கப்பட்டார். தனது தாயின் இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு, ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞருடன், இவர் இத்தாலிக்குச் சென்று [3] ரோமில் வசித்து வந்தார். 1939ஆம் ஆண்டில் இவர் ஜெர்மன் மொழி மற்றும் இலக்கியத்தில் பிஎச்டி பெற்றார். 1938ஆம் ஆண்டில் இவர் கத்தோலிக்க பாதிரியார் கியூசெப் டி லூகா என்பவரைச் சந்தித்தார். அவருடன் எடிசியோன் டி ஸ்டோரியா இ லெட்டரதுராவை நிறுவுவதில் ஒத்துழைத்தார். பின்னர், இவர் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும் மாறினார்.

எல்'ஓசர்வடோர் ரோமானோவில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் குர்னெரி மார்குரைட் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தினார். [4]

1962இல் டி லூகாவின் மரணத்திற்குப் பிறகு, இவர் உருவாக்கிய காப்பக இத்தாலியனோ பெர் லா ஸ்டோரியா டெல்லா பீட்டேவை இயக்கியுள்ளார். [2]

இவர் 2003 திசம்பர் 24 அன்று இறந்தார். [3]

குறிப்புகள் தொகு

  1. Sean L. Field, Robert E. Lerner & Sylvain Piron, ' return to the evidence for Marguerite Porete’s authorship of the Mirror of Simple Souls ', Journal of Medieval History, Vol. 43, Issue 2 (20170. pp.153-73.
  2. 2.0 2.1 Angela of Foligno (1993). Complete Works. Paulist Press. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8091-3366-6. https://books.google.com/books?id=06djmQnH9vAC&pg=PR9. 
  3. 3.0 3.1 Lucetta Scaraffia, Ten years after she passed away பரணிடப்பட்டது 2020-03-23 at the வந்தவழி இயந்திரம், L'Osservatore Romano, 2 December 2013. Accessed 14 March 2020.
  4. Guarnieri, 'Lo Specchio delle anime semplici Margherita Poirette', L'Osservatore Romano, 16 June 1946. Reprinted in Guarnieri,'Il movimento del Libero Spirito', Archivio Italiano per la storia della pietà, Vol. 4 (1965), pp.661-63.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமானா_குர்னெரி&oldid=3818291" இலிருந்து மீள்விக்கப்பட்டது