ரோஷ் ஹஷானா (Rosh Hashanah, எபிரேயம்: ראש השנה‎, "வருடத்தின் தலை" என பொருள்கொள்ளப்படுவது), என்பது யூதப் புதுவருடம் ஆகும். இது அதி பரிசுத்த நாட்களில் முதலாவது ஆகும். ரோஷ் ஹஷானா வடக்கு அரைக்கோளத்தின் ஆரம்ப இலையுதிர் காலத்தில் இடம்பெறுகிறது. இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் ரோஷ் ஹஷானா, யூத நாட்காட்டியில் முதல் முதல் மாதமான திஸ்ரி மாதத்தின் முதல் தினத்தில் ஆரம்பமாகும். இந்த நாள் ஆதாம், ஏவாளின் படைப்பின் ஆண்டு விழா எனவும், அவர்கள் கடவுளின் உலகில் மனித குலத்தின் பங்கு பற்றி உணர்ந்த செயல்பட்டதும் என நம்பப்படுகின்றது.[1] ரோஷ் ஹஷானாவில் சோபார் ஊதக் கேட்டல், அடையாள உணவாக தேனில் அமிழ்த்தி எடுக்கப்பட்ட அப்பிளை உண்ணல் என்பன நடைமுறையாகும். "ஷனா டோவா" என்பது இந்த நாளில் வாழ்த்தும் முறையாகும்.

ரோஷ் ஹஷானா
Rosh Hashanah
அதிகாரப்பூர்வ பெயர்எபிரேயம்: ראש השנה
பிற பெயர்(கள்)யூத புது வருடம்
கடைபிடிப்போர்யூதம், யூதர், சமாரியர்.
வகையூதம்
அனுசரிப்புகள்தொழுகைக் கூடத்தில் வேண்டுதல் செய்தல், தனிப்பட்ட மீட்டல், சோபாரைக் கேட்டல்.
தொடக்கம்திஸ்ரி மாதத்தின் முதல் நாளில் ஆரம்பமாகின்றது
முடிவுதிஸ்ரி மாதத்தின் இரண்டாம் நாள்
நாள்1 Tishrei, 2 Tishrei
தேன் மற்றும் ஆப்பிள்கள் மற்றும் குறிப்பாக தேனில் தோய்க்கப்பட்ட ஆப்பிள்கள் ரோஷ் ஹஷானாவின் அடையாளங்களில் ஒன்றாகும் - யூத புத்தாண்டு விடுமுறை

மேற்கோள்கள்

தொகு
  1. "About Rosh Hashanah". Archived from the original on 2013-01-17. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rosh Hashanah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஷ்_ஹஷானா&oldid=4104875" இலிருந்து மீள்விக்கப்பட்டது