லடாக் சாரணர்கள்

லடாக் ஸ்கவுட்ஸ் (Ladakh Scouts) இந்தியப் பாதுகாப்புப் படைப் பிரிவுகளில் ஒன்றான இந்தியத் தரைப்படையின் பல பிரிவுகளில் ஒன்றாகும். உலகின் மிக உயரமான இமயமலைப் பகுதிகளில் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள சியாச்சின், கார்கில் போன்ற பனிபடர்ந்த உயரமான மலைகளில் லடாக் ஸ்கவுட்ஸ் வீரர்கள் போரிடுவதற்கு சிறப்புப் பயிற்சி பெற்றிருப்பதால், இவ்வீரர்களை பனி வீரர்கள் அல்லது பனிச்சிறுத்தைகள் என்றும் அழைப்பர். லடாக் ஸ்கவுட்ஸ் ரெஜிமெண்டின் வீரர்களில் குறிப்பிடத்தக்கவரள் லடாக் மற்றும் திபெத்திய இளைஞர்கள் ஆவார். லடாக் ஸ்கவுட்ஸ் வீரர்களின் முதன்மைப் பணி, சியாச்சின், லடாக், கார்கில் போன்ற இந்தியாவின் வடக்கு எல்லைகளை எதிரிகளிடமிருந்து காப்பதாகும்.

லடாக் ஸ்கவுட்ஸ்

லடாக் ஸ்கவுட்ஸ் ரெஜிமெண்ட் சின்னம்
சேவையில் 1963 முதல்
நாடு  இந்தியா
கடப்பாடு  இந்தியா
பிரிவு  இந்தியத் தரைப்படை
வகை இந்தியத் தரைப்படை
பங்கு இமயமலையில் போர்கள்
அளவு 5 பட்டாலியன்கள்
வேறு பெயர் பனி வீரர்கள், பனிச்சிறுத்தைகள்
போர் முழக்கம் Ki Ki So So Lhargyalo (கடவுளுக்கு வெற்றி)
விருதுகள் அசோக சக்கரம் 1, மகாவீர் சக்கரம் 2, கீர்த்தி சக்கரம் 2, சௌரிய சக்கரம் 6, யுத்த சேவா மெடல் 3, சேனா மெடல் 64, விசிஷ்ட சேவா மெடல்[1]
சின்னங்கள்
Insignia இமயமலை மலையாடு
ஓய்வாக இருக்கும் ஒரு லடாக் ஸ்கவுட் வீரர், லே, 2010

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடக்கைகளை அடக்குவதற்கு, 1963-இல் லடாக் ஸ்கவுட்ஸ் பட்டாலியன்கள் நிறுவப்பட்டது. பின்னர் 2000-இல் லடாக் ஸ்கவுட்ஸ், இந்திய இராணுவத்தின் ரெஜிமெண்ட் தகுதி பெற்றது. லடாக் ஸ்கவுட்ஸ் ரெஜிமெண்ட் 5 பட்டாலியன்கள் கொண்டது. லடாக் ஸ்கவுட்ஸ் ரெஜிமெண்டின் தலைமையிடம் லே நகரம் ஆகும்.

கலந்து கொண்ட போர்கள்

தொகு

லடாக் ஸ்கவுட்ஸ் வீரர்கள் இந்திய-பாகிஸ்தான் போர், 1965, 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் மற்றும் ஏப்ரல் 1984-இல் பாகிஸ்தானிடமிருந்து சியாச்சின் பகுதியை கைப்பற்றிய மேகதூத் நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். [2]மேலும் 1999-இல் கார்கில் போரிலும் கலந்து கொண்டனர்.

 
2018ஆம் ஆண்டில் குடியரசு நாள் விழாவில் லடாக் ஸ்கவுட்ஸ் வீரர்களின் அணிவகுப்பு
 
21 ஆகஸ்டு 2017 அன்று லே நகரத்தில் லடாக் ஸ்கவுட்டின் 5 பட்டாலியன்களுக்கு, இந்தியக் குடியரசு தலைவர் இராம்நாத் கோவிந்து சிறப்புக் கொடிகள் வழங்கும் காட்சி

மகா வீர் சக்கரம் விருது பெற்றவர்கள்

தொகு
  • கர்ணல் சோனம் வாஞ்சுக்[3][4]
  • கர்ணல் சேவாங் சின்சென்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ladakh Scouts". GlobalSecurity.org.
  2. "Operation Meghdoot". Indian Army.
  3. "Maj Sonam Wangchuk". Indian Army.
  4. "Major Sonam Wangchuk". Indian Army. http://indianarmy.nic.in/Site/FormTemplete/frmTemp1P2C.aspx?MnId=muH0EN+gJw958u8zMyzizw==&ParentID=oAobEvhw7gM4lU50tCLuvg==. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லடாக்_சாரணர்கள்&oldid=4096140" இலிருந்து மீள்விக்கப்பட்டது