லதா அம்சலேகா

லதா அம்சலேகா (Latha Hamsalekha) என்று பொதுவாக அழைக்கப்படும் லதா, இந்தியாவில் கன்னடப் பின்னணிப் பாடகி ஆவார்.[2] இவர் இசையமைப்பாளர் அம்சலேகாவின் மனைவி ஆவார்.அருணோதயா திரைப்படத்தில் ஆ அருணோதயா சந்தா என்ற பாடலுக்காக, லதா சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான கருநாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.

லதா அம்சலேகா
பின்னணித் தகவல்கள்
பிறப்புதிசம்பர் 12, 1957 (1957-12-12) (அகவை 66)
பசவனகுடி, பெங்களூர், மைசூர் மாநிலம் (now கருநாடகம்)[1]
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
வெளியீட்டு நிறுவனங்கள்தனிப் பாடகி
விருதுகள்:* ராஜ்குமார் விருது-இராகவேந்திரா சித்ரவாணி நிறுவனம்
  • 1999-2000-சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான கருநாடக மாநில திரைப்பட விருது

வாழ்க்கை

தொகு

லதா பெங்களூரில் மித்ரானந்த குமார் மற்றும் சாரதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இசையமைப்பாளர் அம்சலேகா என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.[3][4][5][6]

தொழில்

தொகு

முதலில் அம்சலேகாவின் மூத்த சகோதரர் ஜி. பாலகிருஷ்ணாவுக்குச் சொந்தமான 'கானா சாரதா' குழுவில் இசைக்குழுவில் பாடகராக இருந்தார் லதா.[1] 1987ஆம் ஆண்டில் பிரேமலோக திரைப்படத்தில் சிறந்த பாடலான நோடம்மா ஹுதுகி மூலம் பின்னணிப் பாடகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது பெரும்பாலான பாடல்களை அம்சலேகா பதிவு செய்துள்ளார். ஜூட்."ஹசிரு கஜினா பலேகலே" (அவனே நன்னா கந்த "காவேரி தீரதல்லி முங்கரிகே" (சைத்ரதா பிரேமாஞ்சலி "அகரதல்லி குலாபி ரங்கிடே" (அஞ்சதா கந்தூ "கல்லூரிக்கு நன்றி" (ஜூட்) குறிப்பிடத்தக்கன.

விருதுகள்

தொகு
  • 2017- ராஜ்குமார் விருது-இராகவேந்திரா சித்ரவாணி நிறுவனம்
  • 1999-2000-சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான கருநாடக மாநில திரைப்பட விருது-ஆ அருணோதயா சந்தா (அருணோதயா)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "ಸಂಗೀತವೇ ನನ್ನ ಜೀವ, ಜೀವಾಳ" (in Kannada). Vijaya Karnataka. 15 November 2015. https://vijaykarnataka.com/lavalavk/weekly-magazine/music-is-my-life-hamsalekha/articleshow/49782257.cms. 
  2. "Kannada actors, singers to perform at eighth edition of Karunada Sambrama". The New Indian Express. 8 December 2018. பார்க்கப்பட்ட நாள் 5 March 2021.
  3. "ಲತಾ ಹಂಸಲೇಖ ಜೀವನಚರಿತ್ರೆ". https://kannada.filmibeat.com/celebs/lata-hamsalekha/biography.html. 
  4. "Hamsalekha : Hits, Audio, Songs, Movies, Full Biography, Age, Family, Awards". https://gulabigangofficial.in/hamsalekha/amp/. 
  5. "Hamsalekha family". Tollywood celebrities. பார்க்கப்பட்ட நாள் 5 March 2021.
  6. "Hamsalekha: I learnt my art from folk balladeers". https://www.deccanherald.com/entertainment/entertainment-news/hamsalekha-i-learnt-my-art-from-folk-balladeers-906202.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லதா_அம்சலேகா&oldid=3909527" இலிருந்து மீள்விக்கப்பட்டது