லயம் (சிற்றிதழ்)
லயம் என்பது 1980களில் தமிழ்நாட்டில் இருந்து வெளியான ஒரு இலக்கிய தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இந்த இதழானது கே. ஆறுமுகம் என்பவரால் துவக்கப்பட்டது.[1]
வரலாறு
தொகுலயம் ஒரு காலாண்டிதழ் ஆகும். இது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் உள்ள நகலூரில், கே. ஆறுமுகம் என்ற இலக்கிய ஆர்வலரால் துவக்கப்பட்டது. இதன் முதல் இதழ் 1985 சனவரியில் கனமான உள்ளடக்கங்களோடு வெளியானது.
இதன் முதல் இதழில் இந்திய வைதீகமும் நாசிகளும் என்ற பிருமிள் தர்மு சிவராமின் கட்டுரையும், ஞானியின் கல்லிகை, எனக்குள் ஒரு வானம் என்ற நெடுங்கவிதைகள் பற்றிய க. பூர்ணச்சந்திரனின் விரிவான திறணாய்வும். அலெக்சாண்டார் ஸோல்ஸெனிட்சின் எழுதிய பேரழிவை நோக்கிச் செல்லும் மேற்கத்திய உலகம் என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்புபும், போரிஸ் பாஸ்டர்நாக் கவிதை ஒன்றின் தமிழாக்கமும், தேவதேவன், பிருமிள், கலாப்ரோதீப் சுப்ரமணியன் கவிதைகள் போன்றவை வெளியாயன. விறுவிறுப்பான, சுவாரசியமான விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் எதிர்முனை என்ற தலைப்பிலான ஒரு பகுதியில் வெளியாயின. [1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 272–277. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.