லலிதா டி. குப்தே
31 அக்டோபர் 2006 வரை ஐசிஐசிஐ வங்கியின் (இந்தியாவின் இரண்டாவது பெரிய வணிக வங்கி) இணை நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ள, லலிதா டி.குப்தே, இந்தியாவின் வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறையில் முக்கியமான ஆளுமையாக இருந்துள்ளார்.[1] ஐரோப்பிய வணிக நிர்வாக கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான இவர், "சர்வதேச வணிகத்தில் ஐம்பது சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக" பார்ச்சூன் பத்திரிகையால் பட்டியலிட்டுள்ளார். தற்போது ஐசிஐசிஐ வென்ச்சர் வாரியத்தின் தலைவராகவும், நோக்கியா கார்ப்பரேஷனின் இயக்குநர்க் குழுவின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 22 ஜூன் 2010 அன்று லலிதா, அல்ஸ்டாம் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.[2][3]
தொழில் வாழ்க்கை
தொகு1971 ஆம் ஆண்டில், மும்பையை தளமாகக் கொண்ட, ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை ஆய்வுகள் கல்வி நிறுவனத்திலிருந்து நேரடியாக திட்ட மதிப்பீட்டுத் துறையில் பயிற்சியாளராக ஐசிஐசிஐ நிறுவனத்தில் (பின்னர் இது ஐசிஐசிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டது) பணியமர்த்தப்பட்ட லலிதா, தனது தொழில் வாழ்க்கையை இங்கிருந்து தொடங்கி, அதே வங்கியின் வெவ்வேறு கிளைகள் மற்றும் துறைகளில் பணியாற்றியுள்ளார், நியூயார்க் பங்குச் சந்தையில் (NYSE) ஐசிஐசிஐ நிறுவனப் பங்குகளை பட்டியலிடுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இதன்மூலம் அந்நிறுவனம், நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் மற்றும் இரண்டாவது ஆசிய வங்கி என்ற பெருமையைக் கைப்பற்றியுள்ளது. 2001 ஆம் ஆண்டில் லலிதா, ஐசிஐசிஐ வங்கியின் இணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டதோடு வங்கியின் வளர்ந்து வரும் சர்வதேச செயல்பாடுகளுக்கு பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். மே 2007 இல் லலிதா, பின்லாந்தைச் சேர்ந்த தொலைபேசி நிறுவனமான நோக்கியாவின் இயக்குநர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.
பங்களிப்புகள்
தொகுஅவரது பங்களிப்புகள் நிதி மற்றும் வணிக மேலாண்மையில் இந்திய அளவில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, மேலும் அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளில் பின்வருவன அடங்கும்:
- இந்திய வணிகர் சங்கத்தின் பெண்கள் பிரிவின் வங்கி நிதி மற்றும் வங்கிக்கான இருபத்தியோராம் நூற்றாண்டு விருது (1997) [4]
- பெண்கள் பட்டதாரிகள் சங்கத்தின் பெண் சாதனையாளர் விருது (2001).
- சர்வதேச பெண்கள் சங்கம் வழங்கிய ஆண்டின் சிறந்த பெண்கள் விருது (2002).
மேற்கோள்கள்
தொகு- ↑ Amarnath, Nichinta and Ghosh, Debashish. The Voyage To Excellence. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-223-0904-6
- ↑ "Lalita Gupte on Alstom's board". The Hindu Business Line. 2010-06-24. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.
- ↑ "Lalita D. Gupte". Nokia. Archived from the original on 19 February 2011. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.
- ↑ "Lalita D. Gupte - Profile & Synopsis". Tfci.com. Archived from the original on 26 January 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.