லாக்டிக் அமில O-கார்பாக்சிநீரிலி
லாக்டிக் அமில O-கார்பாக்சிநீரிலி (Lactic acid O-carboxyanhydride) என்பது C4H4O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். லாக்-ஆகாநீ (lac-OCA) என்று சுருக்கக் குறியிட்டு இதை எழுதலாம்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
5-மெத்தில்-1,3-டையாக்சோலேன்-2,4-டையோன்
| |
இனங்காட்டிகள் | |
17578-13-1 | |
ChemSpider | 11239219 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C4H4O4 | |
வாய்ப்பாட்டு எடை | 116.07 g·mol−1 |
உருகுநிலை | 28 °C (82 °F; 301 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பாலி(லாக்டிக் அமிலம்) தயாரித்தலில் இச்சேர்மம் ஒற்றைப் படிக்குச் சமமான லாக்டிக் அமிலம் அல்லது லாக்டைடு ஆகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒற்றைப்படி வளைய திறப்பு பலபடியாதல் வினையில் ஈடுபடும்பொழுது அதற்குச் சமமான கார்பனீராக்சைடு வாயு வெளியிடப்படுகிறது. பலபடியில் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு லாக்டிக் அமில அலகிற்கும் சமமான வாயு வெளியிடப்படுகிறது[1]
லாக்டிக் அமிலம் அல்லது அவ்வமிலத்தின் உப்புகளில் ஒன்றுடன் பாசுகீன் அல்லது இதற்குச் சமமான ஒன்றைச் சேர்த்து சூடுபடுத்துவதால், (உதாரணம்: டைபாசுகீன்) இச்சேர்மத்தைத் தாயரிக்கமுடியும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kricheldorf, Hans R.; Jonté, J. Michael (1983). "New polymer syntheses". Polymer Bulletin 9 (6–7): 276–283. doi:10.1007/BF00262719.
,