லாசகி
லாசகி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 14 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, மேளகர்த்தாச் சக்கரத்தில் 3 ஆவது சக்கரமாகிய அக்னியின் 2 ஆவது இராகம் வகுளாபரண இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
ஆரோகணம்: | ஸ ரி ம ப நி ஸ் |
அவரோகணம்: | ஸ் ப ம க ரி ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.